Monday, August 29, 2022

கராத்தே குங்ஃபூ என்று கற்றுக் கொள்ளும் பெண்கள்..

 இன்றைய பெண்களின்

புது பரிணாமம் என்னை
வியக்க வைக்கிறது.
ரசனையோடு எத்தனை
காவியங்கள் படைக்கிறார்கள்.
அழகாய் இருப்பதை, நம்மை ஈர்ப்பதை, நம்மை லயிக்க வைப்பதை எத்தனை வயதானாலும் ரசிக்கத்தான் செய்வோம்.
காட்டன் sareeல் மங்களகரமாக திகழ்கிற பெண்கள்
வயதானாலும் மிடுக்கு குறையாமல்
கணீர் குரலில் பேசும் பெண்கள்
பழமுதிர்நிலையத்தில் கனி காய்கறிகளை Xray பார்வை பார்த்து பொறுக்கும் பளிச் குடும்ப தலைவிகள்
லெக்கின்ஸ், ஜீன்ஸ் உடையுடன்
பரபரவென்று சுறுப்பாக உலாவும்
பெண்கள்.
யாரைப் பற்றியும் கவலைப்படாமல்
Chat item சாப்பிடும் பெண்கள்.
பாப் தலை வெட்டிக் கொண்டு குறும்பான கண்களோடு what grand paஇது தெரியலை என்று கலாய்க்கும் கல்லூரியில் படிக்கும் உறவு பெண்கள்
நான் நான்தான். எனக்கு சரியாக படறதை செய்வேன். மத்தவங்க சொல்றாங்கன்னு தேவையில்லாம வளைந்து கொடுக்க மாட்டேன் என்னும் பளிச் பாரதிகள்
உடல் நலம் சரியில்லை என்றால் சட்டென்று தெரசாவாக மாறும் கருணை பெண்கள்
கிச்சன்லேயே உன்னை மாதிரி உப்புமா கிளறி கிட்டு இருப்பேன்னு நினைக்காதே அம்மா. என் படிப்பால் உன்னை ராணி மாதிரி வைச்சுக்குவேன் என்று அம்மாவுக்கு தைரியம் சொல்லும் ஜான்ஸி ராணிகள்.
எவன் என்ன பண்ணிடுவான். பயந்தா விரட்டுவானுங்க. Be bold என்று பள்ளி செல்ல பயப்படும் தன் பெண்ணுக்கு தைரியம் சொல்லும் ஹமாம் பெண்கள்.
யாருக்கும் இளைச்சவங்க இல்லே நாங்க. வாழ்ந்து காட்டற தைரியம் எங்களுக்கும் இருக்கு என்று வீரம் பேசும் பெண்கள்.
எங்க காலத்திலே தான் எதை சொன்னாலும் தலை ஆட்டிக் கொண்டு இருந்தோம். உனக்கென்னடி ராசாத்தி படிச்சிருக்கே நல்லது கெட்டது தெரியும், தைரியமா இரு என்று பேத்திக்கு தன்மானம் கற்பிக்கும் விவரமறிந்த பாட்டிகள்.
அன்று நான் Heavy traffieல் Road Cross
செய்ய தடுமாறும் போது, சட்டென்று என் கையை பிடித்து வாங்க அப்பா என்று அழைத்து சென்ற மகள் போன்ற பெண்கள்.
Medical shopல் மருந்து வாங்க நின்ற போது, ஒரே கூட்டம். Let me help you uncle, என்று சட்டென்று என் prescriptionக்கும் சேர்த்து மருந்து வாங்கி கொடுத்த பெண்.
எத்தனை எத்தனை பெண்கள் நம்மை சுற்றி.
மன வலிமையுள்ள, தன்னை உணர்ந்த, தெளிவான பெண்கள் தேவை ஆண்களுக்கு இக்கணம். நம்மை விட தெளிவாக இருக்கிறாளே என்று பொறாமைபடாத குணமும் ஆண்களுக்கு அவசியம் தேவை.
வாழ்வில் வரும் எல்லாவற்றையும் ரசிக்க, போராட, ஆரவணைக்க,அறிவுரை கூற.
Ladies now One man Army.
பழைய காலம் போல, சமையல்கட்டே
உலகம் என்ற காலம் எல்லாம் போய் விட்டது.
நம்மை சுற்றி நடக்கும் பரிணாம மாற்றங்களை,நி கழ்வுகளை சுவாசிப்பதும் ஏற்று கொள்வதும் அற்புத ரசனைதான், என்னை பொறுத்தவரை.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...