Monday, August 22, 2022

நிலைவாசலில் உப்பை எப்படி வைக்க வேண்டும்? வாசலில் வைக்கும் உப்பும், எலுமிச்சையும் என்னென்ன பலன்களை கொடுக்கும்? என்பதைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

 நம்முடைய வீட்டில் இருக்கும் நிலை வாசலில் அஷ்ட லட்சுமிகளும், குலதெய்வமும் குடியிருப்பதாக சாஸ்திரங்கள் கூறுகிறது. எனவே தான் நிலை வாசலுக்கு சிறப்பு மரியாதை உண்டு. எல்லா கதவை விடவும் நிலை வாசல் கதவு ரொம்பவும் ஸ்ட்ராங்காக கட்டியிருப்பார்கள். நிலை வாசலில் எப்பொழுதும் தூசுகளை சேர விடக்கூடாது. இத்தகைய நிலை வாசலுக்கு மஞ்சள், குங்குமம் வைத்து, தீபம் ஏற்றுவது மட்டுமல்லாமல் உப்பு மற்றும் எலுமிச்சையை இவ்வாறு செய்து வைப்பதும் உண்டு. அதை பற்றிய விரிவான தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ள இருக்கிறோம். நிலை வாசலில் வைக்கப்படும் எலுமிச்சையும், உப்பும் கண் திருஷ்டிகளை அகற்றும். அது மட்டும் அல்லாமல் துர் தேவதைகளை விரட்டி அடித்து தரித்திரம், பீடை போன்றவற்றையும் நீக்கும் அற்புதமான சக்தி கொண்டுள்ளது. அமானுஷ்ய விஷயங்களுக்கு கூட பயன்படும் இந்த எலுமிச்சை பழம் அதே அமானுஷ்ய சக்திகளை விரட்டியடிக்கவும் செய்யும் அற்புதம் நிறைந்தது. இதனால் தான் இதை தேவகனி என்கிறார்கள்.  இத்தகைய எலுமிச்சையை எப்பொழுதும் வாரம் ஒரு முறையாவது வீட்டு வாசலில் திருஷ்டிக்காக வைக்க வேண்டும். அதே போல பணவரவையும், செல்வத்தையும் அதிகரிக்க செய்யும் இந்த கல் உப்பையும் வீட்டு வாசலில் வைப்பார்கள். வீட்டு வாசலில் பொதுவாக ஒரு ஓரமாக ஒரு கிண்ணத்தில் உப்பு நிறைய போட்டு வைத்தால் கண் திருஷ்டிகள் எதுவும் உள்ளே நுழையாது என்று கூறுவார்கள் அதே போல இந்த முறையிலும் நீங்கள் உப்பு வைப்பதால் குடும்பத்தில் வறுமையை மட்டும் அல்லாமல் சண்டை, சச்சரவுகளும் நீங்குவதாக குறிப்பிடப்படுகிறது. கணவன் மனைவிக்குள் ஏற்படும் சண்டைகளையும் கடன் தொல்லைகளையும் நீக்கி, பண வரவை அதிகரிக்க செய்யக்கூடிய இந்த உப்பு பரிகாரம் ரொம்பவே சக்தி வாய்ந்ததாகவும், எளிமையானதாகவும் இருக்கிறது. முதலில் இரண்டு அகல் விளக்குகளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் முழுமையாக கல் உப்பை நிரப்பி தட்டி வையுங்கள். பின்னர் அதன் மீது புள்ளிகள் அற்ற எலுமிச்சை பழம் ஒன்றை எடுத்து இரண்டாக வெட்டி அதில் மஞ்சள் தடவி கொள்ள வேண்டும். அதன் மீது குங்குமம் தடவி பின்னர் உப்பின் மீது வைக்க வேண்டும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...