Thursday, August 25, 2022

இப்படியும் ஒரு நிதி அமைச்சர்!

 இந்தியா டுடேக்கு பழனிவேல் தியாகராஜன் கொடுத்த பேட்டியை நானும் கேட்டேன். தியாகராஜன் பேசிய பேச்சில் வறட்டுத் திமிரும் ஆணவமும் தெரிந்தது.

NITI Ayog-ல் பணிபுரிபவர்கள், Union Finance minister, Prime minister, Annamalai இவர்கள் யாருமே பொருளாதாரப் பட்டதாரிகள் இல்லை ரெட்டைப் பட்டதாரிகள் இல்லை, PhD செய்தவர்கள் இல்லை, நோபல் பரிசு பெற்றவர்கள் இல்லை. எனவே இவர்கள் கூறுவதை நான் ஏன் கேட்க வேண்டும்? நான் PhD பண்ணி இருக்கேன். பெரிய பெரிய கம்பெனிகளில் நிதி நிர்வாக வேலை செய்திருக்கிறேன். இவர்களையும் விட நானே அதிகம் தகுதி வாய்ந்தவன். எனவே அவர்கள்தான் நான் சொல்வதைக் கேட்க வேண்டும். அவர்கள் சொல்வதை நான் ஏன் கேட்க வேண்டும்?
இப்படி எல்லாம் வாய்க்கு வந்தபடி உளறிக் கொட்டி இருக்கிறார்.
காமராஜர் படிக்காதவர் தான். அவருடைய ஆட்சியை தானே மக்கள் இன்று விரும்புகிறார்கள்?
படிப்பு வேறு, பொது அறிவு என்பது வேறு.
படிப்பு வேறு, வாழ்க்கைக் கல்வி என்பது என்பது வேறு.
படிப்பு வேறு, அறிவு பூர்வ நடவடிக்கைகள் எடுப்பது என்பது வேறு.
படிப்பு வேறு, உணர்வு பூர்வ மக்கள் நலத்திட்டங்கள் எடுப்பது என்பது வேறு.
இவற்றின் வித்தியாசம் இவருக்கு இன்னும் புரியவில்லை. காரணம்? நான் படித்திருக்கிறேன் என்கிற திமிர் தான்.
நான் பெரிய விமானங்களில் தான் பயணிப்பேன் என்று கொஞ்சமும் வாய் கூசாமல் சொல்வதும் அதே திமிர் தான்.
படிப்பு பண்பைத் தர வேண்டும். பணிவைத் தர வேண்டும். நல்ல நடத்தையைத் தர வேண்டும். அவையடக்கம் தர வேண்டும். சபை நாகரிகம் தர வேண்டும். இவர் என்ன படித்தார் என்றே தெரியவில்லை!

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...