Friday, August 26, 2022

❤️80'sகிட்ஸ்❤️

 பசுமையான மலரும் நினைவுகள்...

"டெண்டுக் கொட்டாய் "
டிக்கெட் காட்சிகள்...
தரை டிக்கெட்- 0.50 பைசா,
பெஞ்ச் டிக்கெட்- 0.65 பைசா,
சேர் டிக்கெட்- 0.80 பைசா.
தினசரி 2 காட்சிகள் மட்டுமே.
மாலை 6 மணி, இரவு 10 மணி.
விளம்பரம்....
ஒரு படம் திரையிடும் போது
"இன்று முதல்" நோட்டீசும்,
படம் கடைசி நாளன்று,
"இன்றே கடைசி" என்ற நோட்டீசும்,
கலர் கலராக, சுத்து பத்து ஊர்களுக்கு மாட்டு வண்டியில் அறிவித்து விடுவார்கள்.
முதல் நாளை விட, இன்றே கடைசி நாளன்று கூட்டம் களைக்கட்டும்.
இனி சினிமாவே உலகத்தில் வராது என்பது போல.
இடம்...
நகரங்களில் இந்த டெண்ட் கொட்டாய் காண்பது மிக அரிது.
பெரும்பாலும் கிராமங்களில் தான்.
ஊரைவிட்டு தள்ளித் தான் இந்த டெண்ட் கொட்டகை இருக்கும். 10 ஊர்களுக்கு ஒன்று என.
சரியாக மாலை 5:30 க்கு,
கூம்பு வடிவ ஒலிப்பெருக்கியில், கொட்டகையில் இருந்து வரும் பாடல்கள்,
சுமார் 1 கிமீ வரை கேட்கும்.
முதல் பாடல் "விநாயகனே வினை தீர்ப்பவனே". இந்தப் பாடல் போட்டால் டிக்கெட் தர ரெடியாகிறார்கள் என அர்த்தம்.
"மருதமலை மாமணியே முருகய்யா" என பாடல் கேட்டால், அந்த பாடல் முடியும் முன், கொட்டகைக்குள் வந்து விட வேண்டும்.
முடிந்ததும் படம் தொடங்கிவிடும்.
எந்த விஐபி வந்தாலும் இதைத் தடுக்க முடியாது.
சில சமயம் இந்தப் பாடல்கள்
முன் பின்னாக ஒலிக்கும்.
எப்படி மாத்தினாலும்,
இந்த 2 பாடல்களே படம் துவங்க அலாரம்.
ஆண்களுக்கும், பெண்கள் பகுதிக்கும் இடையே பெரிய தடுப்புச்சுவர் இருந்ததால்,
பெண்கள் சுதந்திரமாக படம் பார்க்கலாம்.
நாங்க சிறுவர்கள் என்பதால், பெண்கள் பகுதியிலேயே இடம் கிடைக்கும்.
வெற்றிலை மணத்துடன்.
கடைசிப் பாடல் கேட்டால்,
5 நிமிடத்தில் ½ கிமீ தொலைவில் இருந்து, அரக்கப் பறக்க ஓடி வந்து, எம்ஜியாரையும், சிவாஜியையும், கமலையும், ரஜினியையும் பார்த்து ரசித்த காலங்கள், பொற்காலங்கள் நட்புக்களே.
அந்த சுகம் இன்று 1000 ரூபாய் கொடுத்து,
மல்டிப்ளக்ஸ் மாலில் படம் பார்த்தாலும் கிடைக்காது. கிடைக்கவில்லை.
பசுமையான அனுபவங்கள்...
வீட்டு தாய்மார்களுடன் போனால், பெரும்பாலும் தரை டிக்கெட் தான்.
மிக செளகர்யமாக, மண் தரையில், உட்கார்ந்துக்கலாம், படுத்துக்கலாம், ஒருக்களித்து என எப்படி வேணாலும் பார்க்கும் வசதி.
ஆண்களுடன் போனால், பெஞ்ச் அல்லது சேர்.
அப்போ எல்லாம் படம் ஓட்டுபவர் கடவுளாக தெரிவார். என்னமோ அவர் தான் படமே தயாரித்து நமக்கு காமிக்கிறவர் போல.
ஸ்நாக்ஸ்...
தட்டமுறுக்கு- 10 பைசா,
கமர்கட்- 5 பைசா,
கலர்- 50 பைசா,
குண்டு சோடா- 0.30 பைசா,
இடைவேளையில் கண்டிப்பாக தட்டமுறுக்கும், கமர்கட்டும் உண்டு.
கமர்கட்டை மீதி படம் முடியும் வரை கடிக்கவே கூடாது என நாங்களே சபதம் எடுத்திருந்ததால், படம் முடிந்து, வெகு நேரம் வரை வாயிலேயே இருக்கும்.
சிலசமயம் தாய்க்குலங்கள் விபரமாக, போகும் முன்பே பெட்டிக்கடையில், இவற்றை வாங்கி, பேப்பரில் சுருட்டி வைத்திருப்பார்கள். இடைவேளையின் போதே இதைத் தருவார்கள். முன்பே தெரிந்தால் வாங்கி தின்றுத் தீர்த்துவிடுவோம் என.
க்ளைமாக்ஸ் பரபரப்பு...
படம் முடிந்து திரும்பி வர கடைசி பஸ் 9 மணிக்கு.
பல சமயம் இந்த பஸ்ஸைப் பிடிக்கவே, ரஜினி, கமலின் க்ளைமாக்ஸ் சீன்களை மிஸ் பண்ணி விடுவோம்.
சிலசமயம்
சிவாஜியின் குடும்பப் பிரச்சனை என்னாகும்? என்றக் கேள்விக்கும்,
நம்பியாருக்கு என்ன தான் முடிவு கட்டுவார் எம்ஜியார்?, என்றக் கேள்விக்கும்
விடைத் தெரிந்துக் கொண்டே ஆக வேண்டும் என்பதால்,
"அய்யோ மணி ஆச்சு பஸ் வந்துருமே", என்ற பரபரப்பை விட்டு விட்டு,
"கடைசி பஸ் போனால் போய் தொலையுது" என ஆற அமற படம் பார்த்து விட்டு, 10 மணிக்கு மேல நடைப்பயணமாக வீடு வருவோம்.
சில நாட்களில் வண்டி கட்டி போய் திரும்புவதும் உண்டு. மாட்டு வண்டி டோக்கன் ஃப்ரீ. ஏன் னு தெரியலை.
எத்தனை எத்தனை மறக்க முடியாத சினிமாக்கள்.
80 களிலேயே இத்தனை ஆனந்தம் என்றால், 60, 70 களில் வாழ்ந்தவர்கள் உண்மையிலேயே கொடுத்து வைத்தவர்கள்.
இப்பொழுதெல்லாம் தியேட்டர்னாலே ஒரு பரபரப்பு இல்லை,
நல்ல படங்கள் இல்லை, சுமார்
3 மணி நேரம் டப்பாக்குள் போட்டு அடைத்து வைத்து வெளியே விடுகிறார்கள்.
பழைய படங்கள் பார்க்க வேண்டும் என்றால், இந்த டெண்ட் கொட்டாய், டூரிங் டாக்கீஸ் என அழைக்கப்படும் திறந்த வெளித் திரையரங்குகளே சிறந்தது.
இதை அனுபவித்த கடைசித் தலைமுறை நாங்கள் மட்டும் தான் !!!!
May be an image of 3 people, outdoors and text that says "மாயாஜால் டாக்கீஸ்"

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...