Friday, August 26, 2022

பச்சை, ஆரஞ்ச், சிவப்பு நிற பட்டியல் தி.மு.க., -- மா.செ.,க்கள் வயிற்றில் புளி.

 பி.ஆர்.ஓ., என்ற தனியார் நிறுவனம் அளித்துள்ள 'ரிப்போர்ட்' குறித்து, தி.மு.க.,வில் தற்போது பரபரப்பாக பேசப்படுகிறது.

அங்கீகாரம் பெற்ற கட்சிகள், மூன்றாண்டுக்கு ஒரு முறை, உட்கட்சி தேர்தல் நடத்தி, பொதுக் குழு கூட்டம் கூட்டி, அதற்கான ஆவணங்களை பதிவு செய்ய வேண்டும். இது, தேர்தல் கமிஷன் விதிகளில் முக்கியமானது. இந்த பணிகளை இந்தாண்டு இறுதிக்குள், தி.மு.க., செய்தாக வேண்டும். வட்டச் செயலர், பகுதிச் செயலர் உள்ளிட்ட பொறுப்புகளுக்கான தேர்தலை நடத்தி முடித்து விட்டது.
latest tamil news
ஆனால், மாவட்ட செயலர் தேர்தல் மட்டும் இன்னும் நடக்கவில்லை. 'சர்வே'உட்கட்சி தேர்தல் என்று கூறப்பட்டாலும், எல்லா நிலைகளிலும் பேசி முடித்து, தலைமை ஒப்புதலோடு, அறிவிப்பு மட்டுமே வெளியிடப்படுகிறது. மா.செ.,க்கள் தேர்வில் அதுவும் நடக்கவில்லை.தற்போது இருக்கும் மா.செ.,க்களை மாற்றலாமா என்பது குறித்து, தி.மு.க., தலைமைக்கு ஏற்பட்டுள்ள குழப்பத்தை தொடர்ந்து, ஒரு அவசர 'சர்வே' எடுக்கப்பட்டது. அதன் முடிவுகளை புள்ளி விபரங்களோடு கட்சி தலைமை பெற்றுள்ளது. பி.ஆர்.ஓ., எனப்படும் தனியார் அமைப்பு சர்வே நடத்தி கொடுத்துள்ள விபரங்கள், கட்சி தலைமையை மேலும் குழப்பம் அடைய செய்துள்ளது.

இது குறித்து, கட்சியின் முக்கிய தலைவர் கூறியதாவது:கடந்த 2021 சட்டசபை தேர்தலுக்கு முன், கட்சியின் வியூக வகுப்பு வேலைகளை செய்தது, பிரஷாந்த் கிஷோரின் 'ஐபேக்' நிறுவனம். தேர்தல் முடிந்த பின், அந்நிறுவனம் சென்று விட்டது. ஆனாலும், கட்சிக்கான வியூக வகுப்பு பணியை தொடர்ந்து செய்ய, ஒரு நிறுவனம் கட்டாயம் இருக்க வேண்டும் என, முதல்வர் மருமகன் சபரீசன் விரும்பினார். அப்பணியில் தன் சகோதரி காயத்ரி நடத்தும், பி.ஆர்.ஓ., நிறுவனத்தை ஈடுபடுத்தியுள்ளார். சென்னை, மயிலாப்பூரில் இருந்து செயல்படும் இந்த நிறுவனம் வாயிலாக தான், தி.மு.க.,வின் 67 மாவட்ட செயலர்களின் செயல்பாடு குறித்த தகவல்கள் திரட்டப்பட்டன.மா.செ.,க்களின் கட்சி மற்றும் சமூக செயல்பாடு குறித்த தகவல்களின் அடிப்படையில், 'பச்சை, ஆரஞ்ச், சிவப்பு' என மூன்று வண்ணங்களில் பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. பச்சை நிற பட்டியலில், 30 பேர் இடம் பிடித்துள்ளனர்.

இவர்களின் செயல்பாடு சிறப்பாக உள்ளதால், மாற்றம் செய்ய வேண்டாம் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.ஆரஞ்சு நிற பட்டியலில், 22 பேர் இடம் பெற்றுள்ளனர். இவர்களின் செயல்பாடு சிறப்பாக இல்லாவிட்டாலும், கட்சிக்கும், ஆட்சிக்கும் பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தாத வகையில் உள்ளது. எனவே, அவர்களையும் மாற்றம் செய்ய வேண்டாம் என, பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.எனினும், அவர்களை கட்சி தலைமை அழைத்து பேசி, செயல்பாடுகளை வேகப்படுத்த வேண்டும் என்றும் கூறப்பட்டுள்ளது.


latest tamil news




ஆலோசனை


மூன்றாவதாக, சிவப்பு நிற பட்டியலில், திருநெல்வேலி, தென்காசி, நாகப்பட்டினம் உள்ளிட்ட, 15 மா.செ.,க்கள் பெயர் இடம் பெற்றுள்ளது. இவர்களின் செயல்பாடு மிக மோசமாக இருப்பதால், ஆட்சிக்கும், கட்சிக்கும் கெட்டப் பெயர் ஏற்பட்டுள்ளது என, அந்த நிறுவனம் அறிக்கை கொடுத்துள்ளது. மேலும், '15 பேரையும் கட்டாயம் மாற்றியாக வேண்டும்' எனவும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இது குறித்து, கட்சி தலைவர் ஸ்டாலின், மூத்த தலைவர்களுடன் தொடர்ந்து ஆலோசித்து வருகிறார். இவ்வாறு அவர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...