Sunday, August 28, 2022

"அன்பான மனைவிக்கு,உன் கணவன்".

 சேகர் ஒரு நாள் வெளியூர்

சென்றிருந்தான்.
அங்கு ஒரு ஹோட்டலில் ரூம்
எடுத்து தங்கினான்.அவனது
அறையில் ஒரு கம்ப்யூட்டர்
இருந்தது.சேகர் தன்
மனைவிக்கு ஒரு E-mail
அனுப்புவதற்காக
கம்ப்யூட்டரை இயக்கி,மெயில்
டைப்பிங்
செய்தான்.அதை அனுப்பும்
அவசரத்தில் "to address" என்கிற
இடத்தில் அவனது மனைவியின்
Mail ID'ஐ போடாமல்,தவறாக
வேறு ஏதோ ஐடியை எழுதிவிட்டான்.இ
தை கவனிக்காமல்
மெயிலை யாருக்கோ அனுப்பிவிட்டான்
.அவன் அனுப்பிய மெயில்
ஒரு விதவை பெண்ணுக்கு வந்து சேர்ந்தது.அந்த
விதவை பெண்
தனது கணவனை இரண்டு நாட்களுக்கு முன்னர்
இழந்தவள். இறந்துபோன
தனது கணவனை நினைத்து அழுதுகொண்டிருந்
தாள்.பிறகு அவள் மனதைத்
தேற்றிக்கொண்டு தனது Laptop ஐ
திறந்து ஏதேனும் மெயில்
வந்திருக்கிறதா எனப்
பார்வையிட்டாள்.
அப்போது சேகர் தவறுதலாக
இவளுக்கு அனுப்பியிருந்த Mail ஐ
படித்ததும்,அவள்
தலைசுற்றி மயங்கி தரையில்
விழுந்தாள்...
(அதில்
பின்வருமாறு எழுதி இருந்தது)
"அன்பான மனைவிக்கு,உன்
கணவன்
எழுதுவது...
இந்த கடிதம்
உனக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தலாம்.ஆ
னால் இங்கே கம்யூட்டர்,இன்ட
ர்நெட் வசதியெல்லாம் கூட
வைத்திருக்கிறார்கள்.நமக்குப்
பிரியமானவர்களுக்கு Mail
அனுப்பவும் அனுமதிக்கிறார்க
ள். நான் இங்கே நல்லபடியாக
வந்து சேர்ந்தேன்.இங்கே நல்ல
சாப்பாடு,டபுள் பெட்ரூம் என
எல்லா வசதியும் உள்ளது.நீயும்
சீக்கிரமாக இங்கே வரவேண்டும்
என ஆசைப்படுகிறேன்.
உனது வரவை எதிர்பார்த்து,
வழிமேல் விழி வைத்துக்
காத்திருக்கிறேன்.
இப்படிக்கு,
உன் அன்புக்குறிய கணவன். 😜😜😜😜

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...