Monday, August 29, 2022

கட்சி பதவியை ராஜினாமா செய்து தொண்டர்களை சந்திக்க தயாரா? பழனிசாமிக்கு பன்னீர்செல்வம் சவால்.

 ''நான் எனது கட்சி பதவியை ராஜினாமா செய்கிறேன். நீங்களும் ராஜினாமா செய்யுங்கள். தொண்டர்களை சந்திக்கலாம். நீங்கள் தயாரா'' என இணை ஒருங்கிணைப்பாளர் பழனிசாமிக்கு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரான பன்னீர்செல்வம் சவால் விட்டுள்ளார்.


மதுரை புறநகர் தெற்கு மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி மதுரை மாநகர மாவட்ட செயலாளர் கோபாலகிருஷ்ணன் மதுரை புறநகர் தெற்கு மாவட்ட இணை செயலாளர் ரங்கராஜ் திருமங்கலம் திருப்பரங்குன்றம் தொகுதிகளை சேர்ந்த 500க்கும் மேற்பட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தேனிமாவட்டம் பெரியகுளத்தில் பன்னீர்செல்வத்தை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அப்போது பன்னீர்செல்வம் பேசியதாவது: தமிழகத்தில் 30 ஆண்டுகாலம் ஆட்சி அமைத்த ஒரே கட்சி அ.தி.மு.க. தான் .முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். உருவாக்கி தொண்டர்கள் இயக்கமாக மாற்றினார். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சியால் எக்கு கோட்டையாக அ.தி.மு.க.வை மாற்றினார். கட்சியில் பொருளாளராக நான்கு மாதங்கள் தாக்குப்பிடிப்பது பெரிது என்ற நிலையில் நான் 13 ஆண்டாக பொருளாளராக பணியாற்றியுள்ளேன்.


latest tamil news



ஜூன் 23ல் காலை பத்து மணிக்கு நடந்த பொதுக்குழு கூட்டத்திற்கு என் வீட்டை கடந்து காலை 8:00 மணிக்கு பழனிசாமி சென்றார். என்னை பொதுக்குழு கூட்டத்தில் வரவிடாமல் தடுக்கும் நோக்கத்தில் பழனிசாமிக்கு ஏழு இடங்களில் வரவேற்பு கொடுத்து செயற்கையான போக்குவரத்து நெரிசலை ஏற்படுத்தினர். போலீசார் உதவியுடன் கூட்டத்திற்கு செல்லும் நிலை ஏற்பட்டது.


விசுவாசம்


என்னை 2001 ல் முதல்வராக்கினார் ஜெயலலிதா. பின்னர் அவர் மீதும் கட்சி மீதும் எனது விசுவாசம் காரணமாக 13 ஆண்டுகள் கழித்து 2014 ல் மீண்டும் என்னை முதல்வர் ஆக்கினார். கடந்த லோக்சபா தேர்தலில் 40 தொகுதியில் ஒன்றில் மட்டுமே வெற்றி பெற்றோம். அப்போது 'நான் உட்பட பத்து அமைச்சர்கள் ராஜினாமா செய்து விட்டு 4 மாவட்டங்களுக்கு ஒருவரை நியமித்து அங்கு கட்சியை வளர்ப்பதற்கு இளைஞர்களை உருவாக்குவோம் ''என தெரிவித்தேன். இதனை ஏற்க மறுத்தனர்.


சவால்


நான் எனது கட்சி பதவியை ராஜினாமா செய்கிறேன். அதே போன்று நீங்களும் (பழனிசாமி) பதவியை ராஜினாமா செய்யுங்கள். இரண்டு பேரும் தொண்டர்களை சந்திக்கலாம். நீங்கள் தயாரா அ.தி.மு.க.வில் அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்றார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...