சிரிக்க வைத்தவரும்
அழ வைத்தவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...

நினைக்க வைத்தவரும்
மறக்க வைத்தவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...

வேண்டும் என்பவரும்
வேண்டாம் என்பவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...

இருப்பேன் என்றவரும்
இருக்கபிடிக்கவில்லை என்பவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...

நாள் முழுக்க பேசியவரும்
பேச விரும்பவில்லை என்றவரும் ஒருவராக தான் இருப்பார்
யோசித்து பாருங்கள்...

உயிரு என்றவரும்
உயிரை எடுக்கிறன்றவரும் ஒருவராக தான் இருப்பார்.
யோசித்து பாருங்கள்...

எல்லாமே அந்த 'ஒருவர்' சுற்றி தான்
நடந்திருக்கும்.
நடந்துக் கொண்டிருக்கும்.
நடக்கும்.
யோசித்து பாருங்கள்...

அப்படி நடந்தால் நடந்துக் கொண்டிருந்தால்
நகர தயார் ஆகுங்கள்.
ஒருவரை 'பற்றியே' உலகம்
சுழன்று கொண்டிருப்பது ஆபத்தானது...

இந்த பொன்னான வாழ்வு 'ஒருவரோடு' முடிந்துவிடாது...

No comments:
Post a Comment