Thursday, August 25, 2022

" குஷ்பூ "

1980 களின் இறுதியில்
தமிழ் சினிமாவுக்கு ஒரு புது வரவு ஆரம்பம்..
தர்மத்தின் தலைவன் 1988 ரீலீஸ் .
ரஜினி சுஹாசினி .பிரபு என பல பிரபல்யங்களோடு குஷ்பூ என்ற புதுமுகம் அதில் பிரபுவுக்கு ஜோடி.
இளையராஜாவின் இசையில் படம் ஹிட்.
அதில் தொடங்கியது குஷ்பூவின் ஆரம்பம். வருஷம் 16 பாசிலின் கைவண்ணத்தில் பழமுதிர்ச்சோலை எனக்காகத் தான் என்ற ராஜாவின் பாடல்களில் கார்த்திக் - குஷ்பூ ஜோடி சேர்ந்த முதல் படம் ஃ
படம் சூப்பர் ஹிட்.
பின்பு பிரபு - குஷ்பூ ஜோடி சேர்ந்த சின்னத்தம்பி படம் குஷ்பூவை பட்டி தொட்டி எங்கும் பிரபலப்படுத்தியது.
படம் மாபெரும் வெற்றி . Pவாசுவின் இயக்கத்தில் இளையராஜாவின் பாடல்கள் வாலியின் வரிகள் | கவுண்டமணியின் அமர்க்களமான காமெடியில் சின்னத்தம்பி அன்றைய பாகுபலி ஹிட்.ஃ
தொடர்ந்து குஷ்பூ காட்டில் சாதாரண மழை அல்ல...
அடை மழை ஃ
பிரபு - குஷ்பூ ஜோடி சேர்ந்த
உத்தம ராசா, பாண்டித்துரை. மை டியர் மார்த்தாண்டம், என பல படங்கள் ஹிட்
அன்றைய முன்னணி ஹீரோக்கள் மட்டும் அன்றி, சின்ன ஹீரோக்களுடன் நடித்தவர்.
குஷ்பூ - பிரபு
குஷ்பூ - ரஜினி
குஷ்பூ - கமல்
குஷ்பூ - கார்த்திக்
குஷ்பூ - சத்ய ராஜ்
குஷ்பூ - விஜயகாந்த்
குஷ்பூ அர்ஜூன்
குஷ்பூ - ராமராஜன்
குஷ்பூ - பார்த்திபன்
குஷ்பூ - பாக்யராஜ்
குஷ்பூ - பாண்டியராஜன்
குஷ்பூ ஜோடி சேராத ஹீரோக்கள் இல்லை.
போவோமோ ஊர்கோலம். இந்த மாமனோட மனசு மல்லிகப் பூ போல,
தேவமல்லிகைப் பூவே, போட்டு வைத்த காதல் திட்டம், என ராஜாவின் பல
அருமையான
பாடல்கள் இவரது வெற்றிக்கு உறுதுணையாக இருந்தது.
குஷ்பூவின் புகழ் அவருக்கு கோயில் கட்டும் வரை சென்றது.
கொண்டையில் தாழம்பூ நெஞ்சிலே வாழைப்பூ கூடையில் என்ன பூ ஃ குஷ்பூ என குஷ்பூ புகழ் பாடல் வரை சென்றது
அண்ணாமலை நாட்டாமை. சிங்காரவேலன். என குஷ்பூ தொட்ட உயரங்கள் ஏராளம்.
குண்டான நடிகைக்கு (சாவித்திரி - கே.ஆர் விஜயா தவிர்த்து) குஷ்பூவுக்கு இவ்வளவு ரசிகர் பட்டாளங்கள் ஃ அது தமிழ், மலையாளம், ஹிந்தி' தெலுங்கு என எல்லா மொழிகளிலும் நடித்திருந்தார்.
பிரபுவுடன் எத்தனை பேர் ஜோடி சேர்ந்தாலும் குஷ்பூவுக்கு இணை வேறு யாரும் இல்லை.
பிரபுவுடன் முதலில் திருமணம் நடந்து பிரிவுற்றாலும் | பின்பு சுந்தர் சி யுடன் காதல் திருமணம் முடித்து இரண்டு பெண் குழந்தைகள்.
இன்று சினிமாவில் நடிக்காவிட்டாலும், சின்னத்திரையிலும், படத்தயாரிப்புகளிலும் பிசியாகவே இருக்கிறார்.
தமிழ் சினிமாவின் பப்ளிமாஸ் அழகி குஷ்பூ பற்றிய உங்கள் நினைவுகளை கருத்துக்கள் வழியாக ?
May be an image of 1 person, standing and jewellery

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...