சிரிக்கச் சிரிக்கப் பேசுவார்! இனிமையாகப் பழகுவார்!
புறம் பேசும் பழக்கமில்லை!
எவர் மனமும் நோக ஒரு வார்த்தை பேசியதில்லை!
நேரிலும் போனிலும் நிறைய பேசியிருக்கிறோம். பழகியிருக்கிறோம்.
எப்போதும் எவரையும் ஊக்குவித்துக்கொண்டே இருப்பார். பல வருடங்களுக்கு முன்பு நடிகர் சூர்யாவைச் சந்திக்க வேண்டுமே என்றேன். அடுத்த நாளே நேரம் ஃபிக்ஸ் செய்து அழைத்துச்சென்று அறிமுகம் செய்தார். (ஸ்ரீ படப்பிடிப்பில்)
திரைக்கதைப் பயிற்சி வகுப்பு நடத்துகிறேன் என்றதும் அத்தனை மகிழ்ந்தார். தன் செலவில் அதை முழுக்க வீடியோப் பதிவு செய்து இயக்குனர் சங்க உறுப்பினர்களுக்குப் போட்டுக்காட்ட முன்வந்தார்.
இப்போது சென்ற மாதம்கூட ஒரு சொந்தத் தயாரிப்புத் திரைப்படம் குறித்து பேசி திரைக்கதை, வசனத்திற்கு என்னை முடிவு செய்தார்.
அவர் பரத நாட்டியம் கற்றுக்கொண்டவர் என்பது பலருக்குத் தெரியாது. பலருக்கு நடிப்பில், இயக்கத்தில் அறிமுகமாக பாலமாக இருந்து உதவியவர்.
சொல்லிக்கொண்டே போகலாம்.
பேரதிர்ச்சி எனக்கு.
மனோபாலா சார்..
உங்களை வழியனுப்ப என்னிடம் வார்த்தைகள் இல்லை!
ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கிறேன்.

No comments:
Post a Comment