Tuesday, May 16, 2023

அப்படி அடுத்தவர் கஷ்டத்தை நாம் பார்த்து இருந்தால்தான் எங்கயோ போய் இருப்போமே. அந்த பழக்கம்தான் நம்மிடம் இல்லையே.

 பாறைக்கு இடையில் பாம்பு இருப்பது இந்த ஆணுக்கு தெரியாது. அதுபோலவே அந்த ஆணின் முதுகை பெரிய கல் ஒன்று அழுத்தியிருப்பது இந்த பெண்ணுக்கும் தெரியாது.

அந்த #பெண் யோசிக்கின்றாள்:- “ நான் கீழே விழப்போகின்றேன் என்னை பாம்பு கடித்து விட்டதால் என்னால் மேலே ஏறவும் முடியாது இந்த ஆண் நன்றாகத்தானே இருக்கின்றான்! அவன் தன்னுடைய வலிமையை திரட்டி என்னை மேலே தூக்கலாம் தானே” என்று
ஆனால் அந்த
#ஆண் யோசிக்கின்றான்:- “ மிகுந்த வலியோடு கூட என் வலிமையெல்லாம் திரட்டி நான் உன்னை தூக்குவதற்கு முயற்சி செய்கிறேன் ஆனால் நீ ஏன் மேலே ஏறுவதற்கு கொஞ்சம் கூட முயற்சி செய்யவில்லை? ”
இந்த படம் சொல்லும் #நீதி:- எப்போதுமே உங்களால் மற்றவர்களுடைய அழுத்தங்களை/பிரச்சனைகளை பார்க்க முடியாது அதுபோலவே மற்றவர்களாலும் உங்களுக்குள் என்ன வலி (துன்பம்) இருக்கு என்பதை காண / உணர முடியாது.
இது வாழ்க்கை,வேலை,குடும்பம்,நண்பர்கள்,உணர்வுகள் எப்படியாக இருந்தாலும் , #ஒருவருக்கொருவர்_புரிந்துகொள்ள_முயலவேண்டும் இன்னும் வித்தியாசமாக சிந்திக்கவும் பொறுமையுடன் கூடிய தெளிவான தொடர்பாடலையும் கற்றுக்கொள்ளல் வேண்டும். சிந்தனையும் பொறுமையும் நீண்ட தூரம் செல்லக்கூடியது.
நாமும் & நாம் சந்திக்கும் ஒவ்வொருவருமே தங்கள் சொந்த பிரச்சனைகளோடு போராடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் 😐
May be an illustration of snake
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...