Tuesday, May 9, 2023

சிக்குபுக்கு_ரயிலே .

 வணக்கம், இன்று வேறு ஒரு தளத்தில்,சென்னை பீச் ஸ்டேஷன்க்கும், மெரினா பீச்சுக்கும் சம்பந்தமில்லை. தெரியாமல் மக்கள், மெரினா பீச் போக, சென்னை கடற்கரைக்கு டிக்கெட் எடுத்து மாட்டிக் கொண்டு, அபராதம் கட்டுகிறார். அங்கே வசூலலாகும் பணத்தை அதிகாரிகள் பங்கு போட்டுக் கொள்கிறார்கள் என்று போட்டுள்ளார்.

பெயரை மாற்ற வேண்டும் என்றும் சிலர் கேட்டனர்.
------------------------------
அதற்கு என் பதில்.:
ரயில்வே ஸ்டேஷன்களுக்கு பெயர் வைப்பது, குழந்தைக்கு பெயர் வைப்பது போல (!!), அத்தனை சுலபமான விஷயமல்ல.
இந்தியா முழுவதிலும் உள்ள ஸ்டேஷன்கள் பெயர்கள், வைப்பதற்கு முன் பல விஷயங்களும் ஆராய்ந்து வைக்கப் படுகின்றன.
Geographical location, historical importance, அந்த இடத்தின் வேறு முக்கியத்துவம், முக்கிய தலைவர்கள் பெயர் இப்படி.. ஏதாவது ஒன்றின் அடிப்படையில் தான்.
மேலும் ஒவ்வொரு ஸ்டேஷனுக்கும் English, எழுத்துக்கள், 1, 2, 3, 4, எழுத்துக்களில் Code உண்டு. அது இந்தியாவில் உள்ள எந்த ரயில்வே நிலையத்துக்கும் வராது.
இந்தப் பெயர்கள்
அடங்கிய ரயில்வே புத்தகம், " #Alphabetical _list_of_Stations_in_IndianRailways ,
"A List" என்ற கனத்த புத்தகத்தில்
விவரமாக குறிக்கப்பட்டுள்ளது.
இதை டில்லியில் உள்ள தலைமையகம், தனது, பதிப்பகத்தில் IRCA - Indian Railways Conference Association என்ற பிரிவு வெளியிடுகிறது.
இப்படி நிலையங்களுக்குப் பெயர் வைக்கும் போது, சில ப்ரச்னைகள் வரும்.
உதாரணமாக , கடப்பா Cuddapah வுக்கு code HX. ராய்ப்பூர்-R, ராய்ச்சூருக்கு RC, Rai bareily க்கு RE...இப்படி.
பரோடாவுக்கு,ஸ்டேஷன் பெயர் VADODARA- Code BRC.
கல்கததாவுக்கு, ஸ்டேஷன் பெயர் HOWRAH Code HWH. இப்படி பெயர்கள் வைக்கும் போது, பல குழப்பங்கள் இருக்கும்.
இருக்கும் 26 ஆங்கில எழுத்துக்களில் கோட் வைத்தாக வேண்டும்.
முதலில் Metre guage , பாதையில், Suburban சேவைகள் ஆரம்பித்த போது, கடற்கரையை ஒட்டிய நிலையமாக இருந்தது.
மெரினா பீச் என பெயர் வைத்திருந்தால் தப்பு.
சென்னை கடற்கரை என்று தான் உள்ளது.
ராயபுரம் தான் அந்நாளில் ஒரு மிகப் பெரிய ரயில் நிலையமாக இருந்தது. சரக்குகள், அங்குதான் கையாளப்பட்டன.
பிறகு தான், Chennai Port, விரிவாக்கம் பெற்று வளர்ந்தது.
அப்போது, MRTS- பறக்கும் ரயில் நமது சிந்தனையில் கூட இல்லை. அது உலகவங்கி உதவியுடன் ஆரம்பிக்கப்பட்டு, 1990களில் தான் இயங்க ஆரம்பித்தது.
அப்போது தான் அதற்கேற்ற பெயர்கள் வைக்கப்பட்டன.
இப்படி பின்னாளில், மெரினா பீச்சுக்கு ரயில் வரும் என , மீட்டர் கேஜ் இருந்த போது யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை.
.
முக்கிய பஸ்ஸ்டாண்டும் பிராட்வேயில் இருந்தது. வெளியூரில் இருந்து, பல திசைகளில் இருந்து வருபவர்களும், அங்கிருந்தே மெரினா பீச்சுக்கு போவார்கள்.
.
புதிதாக சென்னை வருபவர்களுக்கு இது குழப்பம் தான். ஆனால், டிக்கெட் எடுக்கும் போது, மெரினா பீச் போக வேண்டும் என்றால், அவர்கள் அதற்கேற்ப டிக்கெட் தருவார்கள்.
ஒரு முறை ஒரு ஸ்டேஷனின் பெயரை, வைத்து பின் மாற்ற, அடுக்கடுக்காக பல நடவடிக்கைகள் வேண்டும்.
உதாரணமாக ,MSB- MADRAS BEACH என்பதை மாற்ற வேண்டுமானால், அந்த நிலையத்திற்கு புதிய பெயர் எந்த அடிப்படையில் வைப்பது, அதற்கு வைக்கப்படும், CODE, ரிப்பீட் ஆகக் கூடாது.
இதை சர்வதேச ரயில்வே கைடுகள் வரை மாற்ற வேண்டும். எல்லா நாட்டிற்கும் தெரியப்படுத்த வேண்டும்.
வெளிநாட்டினர் உபயோகிக்கும் புத்தகங்களில் திடீரென மாற்ற இயலாது.
.உதாரணமாக, வெளிநாட்டு ஏர்போர்ட்கள், ஸ்டேஷன் பெயர்களை திடீரென மாற்றினால், இந்தியாவிலிருந்து
அடிக்கடி செல்பவர்களுக்கு முன்கூட்டியே போனால், விவரம் தெரியாமல் குழம்புவார்கள்.
அப்படித்தான், ஏர்போர்ட்,ரயில்வே நிலையங்கள் பெயரை நினைத்தபடி மாற்ற முடியாது. இது சர்வதேச நாடுகள் கடைபிடிக்கும் ஒப்பந்தம்.
பணம் முறைகேடு பற்றி...
TTE கள் தவறு செய்தால், இப்போதெல்லாம், ஆன்லைனில் புகார் கொடுத்தாலே நடவடிக்கை உறுதி.
.
பதிவர், அல்லது அவர்களுக்கு வேண்டியவர்கள் சமீபத்தில் இப்படி அவர்களிடம் சிக்கி பணம் கட்ட வேண்டிய நிலை வரும் போது, பணத்தை கட்டி ரசீது வாங்கி விட்டால் பணம் நிச்சயம் ரயில்வேக்கு தான் போகும்.
ரசீது வாங்காமல் பணம் கொடுத்தால் அது ரயில்வேக்கு போகாது.
.அபராதம் கட்டி பணத்திற்கு ரசீது வாங்குவது அவசியம்.
மேலும், ரயில்வேயில் VIGILANCE துறை அதிகாரிகள் , எப்போதும் இப்படி பணம் புழங்கும் துறைகளில் தவறு நடக்கும் என்பதை எதிர்பார்த்து, தங்கள் தரப்பில் ரகசிய கண்காணிப்பை செய்து கொண்டு தான் இருக்கிறார்கள்.
சிக்கினால் கடும் நடவடிக்கை உறுதி.
மக்களும் தங்கள் தரப்பில் ஊழலுக்கு துணை நிற்கக் கூடாது. உதாரணமாக 500₹ அபராதம் என்றால், TTE யிடம் கெஞ்சி 200₹ கொடுத்துவிட்டு ரசீது வாங்க வேண்டாம் என்றால், அது தவற்றை ஊக்குவிக்கும்.
கட்டிய பணத்திற்கு ரசீது பெற்றிருந்தால், பணம் கண்டிப்பாக ரயில்வேக்கு தான் செல்லும்.
Squadல் இருக்கும், ஒவ்வொரு TTE க்கும் இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. அவர்கள் ஒவ்வொரு மாதமும் இத்தனை கேஸ்கள், இவ்வளவு பணம் வசூல் செய்ய வேண்டும் என்ற இலக்கு உள்ளது. இதையும் மக்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.
.
பொதுவாக, intended defaulters க்கும், innocent defaultets க்கும் பார்க்கும் போதே அவர்களுக்குத் தெரியும். மிகவும் genuine case களை சூப்பர்வைசர்கள் தண்டிப்பதில்லை.
.
பணம் கட்டி ரசீது பெற்ற பின், உங்கள் புகார் நியாயமானதாக இருந்தால், CCM/ Refunds/SR, சென்னை.. க்கு ஆதாரத்தோடு புகார் செய்தால், உங்கள் தரப்பு நியாயமானதாக இருந்தால்,விசாரணைக்குப் பின்பணம் திரும்பக் கிடைக்கும்.
.
பிரபல நகைக் கடைகளில் ரசீது வேண்டாம் என்றால் வரி குறைத்து, சின்ன ESTIMATE SLIP என்று கொடுத்து அனுப்புவார்கள். ஆனால், இவர்கள் அப்படிச் செய்தால், சில ஆயிரம் மிச்சம் பிடிக்கலாம்.
ஆனால், நகைக் கடைக்காரர்கள், வரி ஏய்ப்பு செய்ய நாமே வழிவகை செய்கிறோம்.
அங்கே ஏமாற்றுவதும் அரசாங்கத்தைத் தானே...நாம் தவறு செய்ய இடம் தரக்கூடாது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...