இந்த வினாவிற்கு திருமுருக கிருபானந்த வாரியார் சுவாமிகள் அளித்த விளக்கம் இதோ:
ஒரு கூட்டத்தில் ஒரு பெண்மணி வாரியாரிடம்,“ஐயா நான் பெரும்பாலும் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நதியைப் பார்த்திருக்கிறேன். ஆனால் ஏன் பெருமாள் கோயில்களில் சிவன் சந்நதி இருப்பதில்லை?” என்று கேட்டார்.
உடனே வாரியார் சிரித்துக்கொண்டே “அதுபோலத்தான் அம்மா சிவன், அவர் அண்டா, நாராயணன் குண்டா,அதனால் தான் பெருமாள் கோயில்களில் சிவன் சந்நதி இருப்பதில்லை, ஆனால் சிவன் கோயில்களில் பெருமாள் சந்நதி உள்ளது” என்று சொன்னார்.
No comments:
Post a Comment