Thursday, May 4, 2023

பழங்காலத்து ஆனந்த விகடன் நகைச்சுவைத் துணுக்கு:

 

ரயில்வே பட்ஜெட்டில் பயணக் கட்டணத்தை உயர்த்தியதற்காக, எல்லோரும் ரயில்வே அமைச்சரைக் கன்னா பின்னா என்று திட்டிக் கொண்டிருந்தார்கள். ஒருவன் மட்டும் அமைதியாகச் சிரித்துக் கொண்டிருந்தான்.

சிரித்துக் கொண்டிருந்தவனிடம் போய் ஒருவன் மெதுவாகக் கேட்டான்:

"நீ ரயிலில் பயணம் செல்வதே இல்லையா? சிரித்துக் கொண்டிருக்கிறாயே?"

அதைக் கேட்ட அவன் நிதானமாகச் சொன்னான்:

"நான் இது வரை 50 ரூபாய்ச் சீட்டு வாங்காமல் பிரயாணம் செய்து வந்தேன். இப்போது ஒரு டிக்கட் விலை 55 ரூபாய் ஆகி விட்டது. ஆகையால், இனிமேல் எனக்கு 5 ரூபாய் கூடுதலாக மிச்சம்".

அது போலத் தான் கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி இஷ்டத்துக்கு இலவச வாக்குறுதிகளை அள்ளி வீசிக் கொண்டிருக்கிறது. எப்படியும் தோற்கப் போகிறோம் என்று தெரிந்த பின், எதைப் பேசினால் தான் என்ன?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...