Saturday, May 6, 2023

மனோபாலா சார்.

கமல்ஹாசன் அவர்களின் சிபாரிசில், பாரதிராஜா அவர்களிடம் உதவி இயக்குனராக சேருகிறார் மனோபாலா சார். பல படங்களில் வேலை செய்கிறார், தனியாக படம் இயக்கும் வாய்ப்பு கிடைக்கிறது.
முதல் படம் ஆகாய கங்கை, படுதோல்வி .
தமிழ் சினிமாவில் ஒருவர் முதல் படத்தில் தோற்று விட்டால் அதன் பின் அவருக்கு வாய்ப்பு கிடைப்பது மிக கடினம் இன்று வரை அப்படி தான் நிலை, அந்த காலகட்டத்தில் நினைத்து பாருங்கள்.
நடிகர் மோகன் மட்டும் இல்லை என்றால் இவருக்கு படம் இயக்கம் வாய்ப்பு கிடைத்து இருக்காது. ஆகாய கங்கை படம் தோல்விக்கு பிறகு, இரண்டு ஆண்டுகள் கழித்து கலைமணி அவர்களின் கதை மற்றும் தயாரிப்பில் பிள்ளை நிலா படத்தை இயக்குகிறார் மனோபாலா அவர்கள், படம் சூப்பர் ஹிட்.
தமிழில் ஒரு பேய் படம் முதல் முறையாக நூறு நாட்கள் ஓடியது என்றால் அது பிள்ளை நிலா தான் இளையராஜா இசையில் ராஜா மகள் பாடல் பெரிய ஹிட்.
விஜயகாந்த் அவர்களை வைத்து இயக்கிய சிறைப்பறவை மிக பெரிய ஹிட்.
என் புருஷன் தான் எனக்கு மட்டும் தான் படம் பல மொழிகளில் வெற்றி பெற்றது.
தென்றல் சுடும் என்று ராதிகா அவர்களை வைத்து எடுத்தார் ,இந்தப் படத்தில் ஒரு பாடல் அந்த காலகட்டத்தில் பெரிதாக பேசபட்டது இளையராஜா அவர்களின் இசையில் தூரி தூரி தும்மக்க தூரி என்று ஆரம்பிக்கும் பாடல்.

மல்லு வேட்டி மைனர் படத்தை சொல்லவா வேண்டும்
👌சத்யராஜ் அவர்களை வைத்து அதகளம் செய்திருந்தார்.
வெற்றி படிகள் மனோபாலா அவர்கள் இயக்கிய மிக சீரியஸான படம், நன்றாக இருக்கும், ஹீரோவாக ராம்கி அவர்கள் நடித்திருந்தார்.
முற்றுகை படத்தில் ஆபாவாணன் அவர்கள் இவருடன் கைகோர்த்து, சேர்ந்து செய்த படம் .அதுவரையில் film institute மாணவர்கள் தான் ஆபாவாணன் அவர்களின் குழுவில் இருப்பார்கள் ,முதல் முறையாக மனோபாலா அவர்கள் எப்படி என்று தெரியவில்லை, படத்திற்கு வசனம் R.P.விஸ்வம் அவர்கள்.
ஊர்க்காவலன் படத்தை ரஜினிகாந்த் அவர்களை வைத்து எந்த அளவுக்கு ஹீரோயிஸத்தை காட்டமுடியுமோ, அந்த அளவுக்கு காட்டியிருந்தார், படம் மிக பெரிய வெற்றி படம். அந்த கதையை இன்று வரை ஏதாவது ஒரு வடிவில் திரைப்படமாக வந்த கொண்டு தான் இருக்கிறது, ரகுவரன் அதகளம் செய்து இருப்பார் காரில் கயிறு கட்டிய சீன் இன்று கேலி செய்யலாம் அந்த காலகட்டத்தில் தியேட்டரில் மக்கள் ஆரவாரம் செய்தனர், குறிப்பாக இந்த படத்தில் காமெடி காட்சிகள் நன்றாக பேசபட்டது. மிக பெரிய வெற்றி படமாக அமைந்தது.
மனோபாலா அவர்கள் இயக்கிய மூன்றெழுத்தில் என் மூச்சிருக்கும்மூச்சிருக்கும் படம்
ராக்கி ராஜேஷ் (stunt choreographer) Debut film. இவரும், விஜயகாந்த் அவர்களும் சேர்ந்து பணியாற்றிய படங்களில் சண்டை காட்சிகள் அட்டகாசமாக இருக்கும்,சண்டை காட்சிக்காக மட்டுமே இந்த படத்தை பார்க்கலாம்.
இந்த ஒரு படத்தில் தான் விஜயகாந்த் அவர்கள் காதல் காட்சியில் மிக இயல்பாக, ஜாலியாக நடித்து இருந்தார் அதுவும் சந்தன கிளி ரெண்டு பாடலில் நடனம் சிறப்பாக இருந்தது எனக்கு ஆச்சரியம் தான்.
படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் ஹிட் குறிப்பாக K. J. Yesudas & chitra அவர்கள் பாடிய சந்தன கிளி ரெண்டு செம்ம பாடல், இசை இளையகங்கை.
படத்திற்கு வசனம் லியாகத் அலி கான் சொல்லவா வேண்டும் 👌
படத்தில் வரும் flash back காட்சிகள் நன்றாக இருக்கும்.
பார்க்க காமெடி நடிகர் போல தோற்றம் இருந்தாலும், மனோபாலா அவர்கள் இயக்கிய படங்கள் அனைத்தும் சீரியஸான படங்கள்.
பல சீரியல்கள் மற்றும் Telefilm இயக்கி உள்ளார், நட்புக்காக படத்தில் இருந்து தான் காமெடி நடிகராக அறிமுகமானார் அதன் தொடர்ச்சியாக மிகவும் பிரபலமான நடிகராக வலம் வந்தவர் மனோபாலா அவர்கள். சதுரங்க வேட்டை படத்தின் தயாரிப்பாளரும் இவர் தான் 🙏
May be an image of 1 person
All reactions:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...