" இந்திய நாட்டை ஆள நினைத்தால் அங்கிருக்கும் மக்களை எப்படி எல்லாம் குழப்பி பிரிக்க முடியுமோ அப்படி பிரித்து போடு" என்பது வெள்ளையன் கொள்கை,
மிக சிறிய நாடான அவர்களுக்கு இந்தியா போன்ற மிகபெரிய நாட்டை ஆள அப்படி ஒரு தந்திரம் தேவைபட்டது
அன்னார் தமிழ்படிக்கவோ, தமிழருக்கு சேவை செய்யவதை நோக்கமாக கொண்டு இங்கு வரவில்லை, கிறிஸ்தவத்தை பரப்பி, கிறிஸ்தவ லண்டன் அரசகுடும்பத்தின் ஆட்சியினை தயக்கமின்றி ஏற்க வைப்பதே அவருக்கு கொடுக்கபட்ட பணி, அட லண்டன் பீடத்தை ஏற்காவிட்டாலும் உள்ளூரில் இந்து சமூகத்தில் குழப்பம் விளைவித்தாலே போதும் , அதில் குளிர்காய்வான் வெள்ளையன்
இப்படிபட்ட நரி தந்திர திட்டத்தோடு இறக்கபட்டவன் கால்டுவெல், அவன் வந்த காலத்தில் அச்சிடும் உரிமை இந்தியருக்கு இல்லை அது மிஷினரிகளுக்கும் வெள்ளை ஆதரவு அடிவருடிகளுக்குமே இருந்தன இதில் இந்து புராணங்களை சாடி கிறிஸ்தவ புராணங்களை புனித பிம்மமாக்க அவர்களுக்கு வாய்ப்பும் இருந்தது
தமிழே வாசிக்க தெரியா தமிழனுக்கு சமஸ்க்கிருதம் தெரியுமா? அதன் பொருள் தெரியுமா? அவனும் இவர்களிடம் ஏமாந்தான்..
ஐரோப்பாவிலே சக மனிதனை அடிமை என சொல்லி விற்று கொண்டிருந்ததை அனாசயமாயக கடந்து வந்த கால்டுவெல் இந்திய சாதி அமைப்பினை கண்டு சீறி பலருக்கு ஞானஸ்நானம் கொடுத்தது உச்சகட்ட காமெடி
மனிதனை மனிதன் அடிமையாக விற்றால் சரியாம், ஆனால் சாதி பார்த்தால் இந்து கொடுமையாம். இந்து மரபில் சாதி எனும் தொழில்பிரிவு இருந்ததே தவிர விற்றல் வாங்கல் எனும் முறை எல்லாம் இல்லை, அந்த காணா சகிக்கா மானிட கொடுமை ஐரோப்பா கிறிஸ்தவத்தில் இருந்தது.
இந்தியா தொழில் ரீதியாக சாதி வைத்திருந்தது, அதை பிடிக்காவிட்டால் தன் தகுதிக்கு மீறி அறிவு இருந்தால் ஒருவன் எந்த வேலையும் செய்யலாம்
வேலை பிடிக்காவிட்டால் போ என இந்து தர்மம் சொன்னதே தவிர அடிமையாய் வைத்து அவனை விற்று, வாங்கி வியாபாரம் ஒரு காலமும் செய்ததில்லி
கால்டுவெல் அடிமை வியாபாரத்தை ஆத்மார்த்தமாக அங்கீரித்த சமூகத்தவன், சக மனிதனை அடிமை என சொல்லி வாங்கி விற்ற சமூகத்தவன், அவனுக்கு இந்திய சாதிபற்றி பேச அருகதையில்லை, சாதியினை விட ஆயிரம் மடங்கு கொடியது அடிமை முறை
ஆனால் அவென்ல்லாம் நம்மை பற்றி பேசினான் என்பதுதான் நாட்டின் மகா கொடுமையான வரலாறுகளில் ஒன்று, கஜினி முகமது செய்த அட்டகாசத்தை விட கொடிய வலிமிக்க வேதனை இது.
18ம் நூற்றாண்டில் சென்னைக்கு வந்து இறங்கிய கால்டுவெல் தமிழ்படித்து எங்கு வறுமையும் வறட்சியும் பின் தங்கிய நிலையும் உண்டோ அங்கே செல்ல தேடினான், காரணம் குழப்பத்தை அங்குதான் விளைவிக்க முடியும்
நெல்லைமாவட்டம் இடையன்குடியில் அமர்ந்து இல்லா அழிச்சாட்டியம் செய்தான் கால்டுவெல், தென்னக மொழிகளின் ஒப்புமை என ஒரு நூலை எழுதி இதுதான் திராவிடம் என சொல்லி குழப்ப பார்த்தான், ஆரியர் வந்தவர்கள் என சொல்லி இங்கு பிராமணர் வந்தேறி என முதலில் சொன்னது அவனே
பிராமணர் இந்துமதத்தை தாங்கி நிற்பது அவனுக்கு வெறுப்பை கொடுத்தது, அந்த வேரை சரிக்காமல் இந்துமதத்தை சரிக்க முடியாது என திட்டமிட்டான், இன்னொன்று இந்தியா முழுக்க இந்துக்களை இணைத்த சமஸ்கிருதம் பிராமண சங்கிலி இவனுக்கு எரிச்சலை கொடுத்தது
திருசெந்தூர் ஆலய பக்தர்கள் காசிக்கு செல்வதும், காசி மக்கள் கன்னியாகுமரிக்கு வந்ததும் அவனுக்கு வெறுப்பை கொடுத்தன, கூடவே திருசெந்தூர் பகுதி நாடார்கள் முழுக்க கிறிஸ்தவராகததும், அய்யா வைகுண்டரின் பிடியில் நாடார் இனம் சிக்கியதும் அவனுக்கு வெறுப்பை கொடுத்தது
விளைவு "நெல்லை சாணார் வடிவம்" என ஒரு புத்தகம் எழுதி, நாடார்கள் கொலைக்கு அஞ்சாதவர்கள் என ஐரோப்பாவில் பரவவிட்டான், காரணம் பெரும் பாதுகாப்பு படை இங்கு நிறுத்தபட்டு அந்த முனையில் இந்துக்கள் அடக்கபட வேண்டும் எனும் சதி இருந்தது
இது சக நாடார்கள், கிறிஸ்தவ நாடார்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி நாசரேத்தை அடுத்த மூக்குபீறியினை சேர்ந்த சட்டாம்பிள்ளை நாடார் தலமையில் நாடார் கிறிஸ்தவர்கள் திரண்டு கால்டுவெல்லை எச்சரித்து , தனி கிறிஸ்தவ சபை கண்டனர் "இந்து ஏக ரட்சகர் சபை" என அதற்கு பெயர்
அதன் வழிபாடுகள் பழைய ஏற்பாட்டினை ஒட்டி இருந்தது. சட்டாம்பிள்ளை காலத்துக்கு பின்பே அவரின் சபை "இந்திய கிறிஸ்தவ சபையானது"
இப்படி வாழும் காலத்திலே வம்பிழுத்து , மொழி இனம் சாதி என இந்தியரை குழப்பிய திருபணியினை செய்தவன் கால்டுவெல்
அவனை கொண்டாடும் பல திராவிட கோஷ்டிகள் சிலரை மறக்கும், மறைக்கும் அவற்றில் முக்கியமானவர்கள் எல்லீசனும், பீட்டர் பாண்டியனும்
இருவருமே வெள்ளையர்கள், ஆனால் தமிழ்படித்து தமிழரோடு தமிழராய் இந்துக்களாய் வாழ்ந்தவர்கள்
எல்லீஸ் தமிழ் படித்தான் திருவள்ளுவருக்கு சிலை வடித்து தங்க நாணயம் அடித்தான், தன் எல்லீஸ் எனும் பெயரை எல்லீசன் என கொண்டான், அனுதினமும் சிவனை வணங்கினான், இந்துக்களோடு இந்துக்களாய் வாழ்ந்தான் வரலாற்றில் மிகபெரும் இடம் அவனுக்கு உண்டு
சென்னையில் வாழ்ந்த கலெக்டர்களில் பெரும் இடம் அவனுக்கு உண்டு
மதுரை கலெக்டராக இருந்தான் பீட்டர், 1820களில் அனுதினமும் மதுரை ஆலயத்துக்கு சென்று வணங்கினான், அரசு கஜானாவில் இருந்து அம்மனுக்கு நகைகள் வழங்கினான், ஏழை எளியவருக்கு அள்ளி கொடுத்தான்
பீட்டர் பாண்டியன் என அவன் மதுரைகாரனாக கொண்டாடபட்டான்,
(மக்கள் "பீட்டர் பாண்டியன் அம்மானை" என ஒரு காவியமே எழுப்பினர், பின்னாளில் மிஷனரிகளால் அது காணாமல் செய்யபட்டது)
ஒரு கட்டத்தில் அவன் கீழ் அதிகாரிகளிடம் கொடுக்க சொன்ன நிதியில் கால்வாசிதான் மக்களுக்கு போனது மற்றது அதிகாரிகளுக்கு, இதனால் நிர்வாகம் சீர்கெட்டது என ஆங்கில அரசு அவனை பதவி நீக்கியது
அப்பொழுதும் மதுரையினை விட்டு போகமாட்டேன் என மக்களோடு மக்களாய் வாழ்ந்தான், அவனின் பிரதான பக்தி மீனாட்சி அம்மன் மேலான பக்தி
அம்மன் தன்னிடம் அடிக்கடி பேசுவதாகவும், இடியில் இருந்து தன்னை காத்ததாகவும் அவனே சொன்னான், அம்மனின் பக்தனாக மதுரையில் நின்றான்
பதவி போனபின்பும் அம்மன் அடியாராக வாழ்ந்து மதுரையில் மரித்தான், அவன் கல்ல்றை இன்றும் அங்கு உண்டு, மதுரை தெற்கு ஆவணி மூல வீதியில் வெள்ளை சலவை கல்லறை உண்டு
எல்லீசன், பீட்டர் பாண்டியனோடு ஒப்பிடும் பொழுது கால்டுவெல் அவர்கள் கால்தூசிக்கு கூட வரமாட்டான்
ஆனால் கருணாநிதி கால்டுவெல்லுக்கு சிலைவைப்பார் , எல்லீசனையும் பீட்டர் பாண்டியனையும் வசமாக மறப்பார், காரணம் அவர்களை தொட்டால் இந்துமதத்தை தொட வேண்டிவரும்..
திருகுறள் படித்து திருவள்ளுவராக வாழ்ந்த எல்லீசன் எங்கே, திருகுறளை திருத்தமுயன்று அடிவாங்கிய கால்டுவெல் எங்கே?
மதுரை மக்களோடு மீனாட்சி அம்மன் பக்தனாக வாழ்ந்த பீட்டர் பாண்டியன் எங்கே? தமிழரை இந்துக்கள் அல்ல என சொல்லி குழ்ப்பிய கால்டுவெல் எங்கே?
பீட்டர் பாண்டியன் கல்லறை யாருக்கும் தெரியாது, ஆனல் கால்டுவெல் கல்லறை ஐரோப்பாவரை புகழ்பெற்றது. எனினும் இந்தியருக்கு எக்காலமும் சிறந்தவன் பீட்டர் பாண்டியனே
கால்டுவெல் இங்கு குழப்பம் ஏற்படுத்த வந்த கலகக்காரன்., திராவிட இனம் மொழி என இங்கு பிரிவினை கோடிட்ட அயோக்கியன்
அவன் குழப்பிவிட்டதைத்தான் திராவிட கும்பல்கள் வசமாக பிடித்து தொங்கி அரசியல் செய்து ஆட்சிக்கும் வந்தன
கால்டுவெல்லை கொண்டாடும் திராவிட கோஷ்டிகள் கால்டுவெல்லின் இன்னொரு கூற்றை மறைக்கும்
ஆம், கால்டுவெல் சொன்னான் "ஆரியர் மட்டுமல்ல, திராவிடரும் வந்தேறிகளே"
ஏன் அப்படி சொன்னான்? அவன் அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா , நியூசிலாந்து போல தென்னகம் யாருக்கும் சொந்தமான பகுதி அல்ல, எல்லோரும் குடியேறிகளே, இங்கு தமிழருக்கு இருக்கும் உரிமை வெள்ளையனுக்கும் உண்டு என்பதை நிறுவ விரும்பினான்
திராவிட கூட்டம் அதை மறைத்து எது தங்களுக்கு தேவையோ அதை எடுத்து கொண்டன
கால்டுவெல்லின் உள்நோக்கம் தென்னகத்தில் எல்லோரும் குடியேறிகளே, பிராமணன் கைபர் வழி வந்தவன், நாடார் ஈழத்தில் இருந்து வந்தவன் அப்படி பிரிட்டிஷ்காரன் லண்டனில் இருந்து வந்தவன் எல்லோரும் இங்கு வாழ உரிமை உண்டு என்ற நோக்கிலே இருந்தது
இதை ஆங்கிலம், கல்வி, சாதிமறுப்பு, மதபோதனை என எதையோ சொல்லி விஷத்தை பழத்தில் கலந்து கொடுப்பது போல் கொடுத்து கொண்டிருந்தான்
இன்று அவனின் பிறந்தநாள் என ஒரு கோஷ்டி சொல்கின்றது
பிழைப்புவாத கோஷ்டிகளுக்கு, இந்திய திருநாட்டை நேசிக்கா பிரிவினைவாதிகளுக்கு, திராவிடம் என சொல்லி பிரிவினை வாதம் பேசி வயிறும் சொத்தும் வளர்ப்பகர்களுக்கு அவன் நல்லவனாக இருப்பதில் ஆச்சரியமில்லை
ஆனால் வள்ளுவனுக்கு சிலை அமைத்து, தமிழ் படித்து, பஞ்சாங்கம் எழுதி, 27 நட்சத்திரம் பெயரில் 27 கிணறுகள் வெட்டி, தமிழையும் சமஸ்கிருதத்தையும் வளர்க்க உதவிய அந்த எல்லீசை விட
மதுரை அம்மனின் பக்தனாய் இருந்து தமிழ் வளர்த்து, இந்நாட்டு இந்துக்களில் ஒருவனாக வாழ்ந்து செத்த பீட்டர் பாண்டியனை விட கால்டுவெல் ஒருகாலமும் உயர்ந்தவனாய் இருக்க முடியாது
இந்த இருவரும் இந்திய பாரம்பரியத்தில் மதத்தில் அதன் இனிமையில் தமிழின் அழகில் மயங்கி இங்கு இந்துக்களாய் மதம் மாறி வாழ்ந்தவர்கள்
ஆனால் கால்டுவெல் மதம் இனம் மொழியால் இந்நாட்டை குழப்பி அடித்து குழப்பம் விளைவிக்க வந்த குழப்பவாதி
ஒரு காலம் வரும் அன்று எல்லீசனும், பீட்டர் பாண்டியனும் கொண்டாடபடுவார்கள், தன் ஒப்பற்ற பக்தனான பீட்டர் பாண்டியன் வரலாற்றை அன்னை மீனாட்சி பாரதம் அறிய செய்வாள் அவன் புகழ் ஓங்கும் நிலைக்கும்.
கால்டுவெல் தமிழில் சிறந்தவர் என்றால் பைபிள் தமிழ் தரம் உயர்ந்திருக்கும். ஆனால் பைபிள் தமிழ் அப்படி இல்லை. இவன் நம் கலைச்செல்வங்களை - ஓலைச்சுவடிகள் & ஏடுகளை கடத்தி சென்றான்.இவன் ஒரு திருடன். இதனால் தான் தமிழ் தாத்தா களம் இறங்கினர்.
அயோக்கிய கால்டுவெல் பட்ட மண் கூட கடலில் எறியபடும், அவன் நினைவும் அவனின் பிரிவினை கொள்கையும் எரிக்கபட்டு அதன் சாம்பல் லண்டனுக்கே அனுப்பபடும்.
No comments:
Post a Comment