Wednesday, May 10, 2023

சமையல் கட்டில் இதை மட்டும் செய்யாதீர்! பண கஷ்டம், வறுமை வருமாம்!

 நாம் வீட்டில் பொதுவாக சில விஷயங்களை செய்யாமல் இருக்கும்போது அல்லது சில இடங்களை முறையான பராமரிக்காமல் இருக்கும் போது அதனால் நம் வீட்டிற்கு நமக்கும் பணக்கஷ்டம் அதனால் என்பார்கள். ஆனால் சமையலறைக்கும் நமது வீட்டில் உண்டாகும் வறுமைக்கும் தொடர்பு உண்டா என்று பார்க்கும்போது ஆம் நிச்சயமாக உண்டு நம் வீட்டு சமையல் அறையை எப்பொழுதும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்றும் அது மட்டுமில்லாமல் இரவு நேரங்களில் பாத்திரங்களை சுத்தம் செய்யாமல் அப்படியே போட்டு வைக்க கூடாது என்றும் சாஸ்திரங்கள் கூறுகின்றனர். இப்படி சமையலறையையும் ஆன்மீகத்தையும் தொடர்பு படுத்தி பல விஷயங்கள் உள்ளன. அதனால் இன்று இந்த ஆன்மீகம் குறித்தது தொகுப்பில் தெளிவாக காணலாம் வாருங்கள். அன்னபூரணி பொதுவாக நாம் சாப்பிடும் உணவுகளுக்கு சொந்தக்காரி அன்னபூரணி தாயார் தான். அன்னபூரணி தாயாரின் அருள் இருக்கும் வீட்டில் என்றுமே உணவுக்கு பஞ்சமும் வீட்டில் வறுமையும் இருக்கவே இருக்காது. அதனால் நீங்கள் வீட்டில் சமையல் செய்யும் போது அன்னபூரணி தேவையை வழிபட்டுவிட்டு சமையல் செய்தால் நீங்கள் செய்யும் உணவுகளின் ருசி கூடுதலாகவும் இருக்கும் என்பார்கள். அதை போல் சமையலறையில் அன்னபூரணி தாயாரின் படம் கண்டிப்பான முறையில் வைக்க வேண்டுமாம். நீங்கள் வீட்டில் சோறு ஆக்குவதற்காக உலக்கில் அரிசி எடுத்து போடும் பொழுது அதை தொட்டு வணங்க வேண்டுமாம். அதனால் உங்கள் வீட்டில் எப்பொழுதும் வறுமை வராது என்று சாஸ்திரங்கள் நமக்கு கூறுகின்றனர். பூஜை நாம் வெள்ளிக்கிழமை வீடுகளில் பூஜை செய்யும் போது உலக்கில் அரிசி எடுத்து வைத்து பூஜை செய்வது நமக்கு ஏராளமான நன்மைகளை கொடுக்குமாம். ஒரு ஆழாக்கு உலக்கில் கோபுரம் போல் அரிசியை நிரப்பி அதை ஒரு தட்டில் வைத்து அந்த தட்டை பூஜை அறையில் நீங்கள் பூஜை செய்யும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள். இப்படி பூஜை அறையில் வைத்து உலக்கில் மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் நீங்கள் வழிபட்டு வரும் போது உங்கள் குடும்பத்தில் பணக்கஷ்டம் என்ற வார்த்தைக்கு இடம் இருக்காது முக்கியமாக உங்கள் வீட்டில் உபயோகப்படுத்தும் தானியங்களுக்கு பஞ்சம் ஏற்படாது. சாதம் வீணாகக்கூடாது அதை போல் நாம் வீட்டில் சோறு ஆக்கும் போது கடைசியாக ஒரு தட்டு வைத்து சாதத்தை வடித்து எடுப்போம். இப்படி நீங்கள் சாதம் வடிக்கும் போது சரியான மூடி போட்டு சாதம் வீணாகாமல் சாதம் வடிக்க வேண்டும். நீங்கள் சாதத்தை வீணாக்கும் போது அன்ன தோஷம் ஏற்படுவதற்கு அதிக அளவு வாய்ப்பு உண்டு. அதேபோல் நீங்கள் சோறாக்கும் பொழுது அதற்கு பயன்படுத்தும் அரிசியை எச்சில் படாமல் உலையில் போட வேண்டும் இல்லையென்றால் உங்கள் வீட்டில் தரித்திரம் பிடித்துக் கொள்ளும் இதை நினைவில் வைத்துக் கொண்டு செயல் படுங்கள். -விளம்பரம்- ருசி பார்த்தல் பொதுவாக நம் வீட்டில் குழம்பு கிரேவிகள் போன்றவை செய்யும்போது அதில் நாம் சேர்த்த உப்பு காரம் சரியாக இருக்கிறதா என்று பார்ப்பதற்காக கரண்டியில் சிறிதளவு எடுத்து அதன் ருசி பார்ப்போம். அப்படி பார்க்கும் பொழுது நேரடியாக கரண்டியை வாயில் வைத்து ருசி பார்க்கக் கூடாது. சிறிது கரண்டியில் எடுத்து கையில் வைத்து தான் ருசி பார்க்க வேண்டும். நான் மாறாக கரண்டியை வாயில் வைத்து ருசி பார்த்தால் அது நமக்கும் நம் வீட்டுக்கும் தோஷங்களை சேர்க்கும் என சாஸ்திரங்கள் கூறுகின்றனர். சமையல் செய்யும்போது அதை சந்தோஷமாக செய்ய வேண்டும் அப்போதுதான் சாப்பிடுபவரின் மனதும் வயிறும் சேர்ந்து நிறையும். சமையல் கலை அதனால் வீட்டில் யார் சமையல் செய்தாலும் சமையல் செய்யும்போது மேல் சொன்ன அனைத்து விஷயங்களையும் மனதில் வைத்துக் கொண்டு சமையல் வேலைகளை செய்து வந்தால் நமது வீட்டில் பணக்கஷ்டம் வறுமை என எதுவுமே வராது. மாறாக நம் சமையல் அறையை அசுத்தமாக வைத்துக் கொண்டு மேல் சொன்ன விஷயங்களை செய்து கொண்டு வீட்டில் சமையல் வேலைகள் பார்த்துக் கொண்டிருந்நால். நமது வீட்டில் தரித்திரம் வந்து ஒட்டிக் கொள்ளும். அது நமக்கு பணக்கஷ்டம், வறுமை, கடன் தொல்லை என பல கஷ்டங்களை நமக்கு சேர்த்து தரும். அதனால் மேல் சொன்ன விஷயங்களை மனதில் வைத்துக் கொண்டு சமையல் கலையை சந்தோசமாக செய்யுங்கள் நல்ல பலனே கிடைக்கும்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...