பசியின் கொடுமையை வருடக்கணக்காக.....
அனுபவித்தவன்
முன்....
பதார்த்தங்கள் வைக்கப்பட்டபோது...
அவனையுமறியாமல்...
அவன் நாவில் சுரந்த உமிழ்நீரை...
மட்டந்தட்டிப் பேசிப்பேசியே...
அந்த மாளிகையில்
அன்றாடங்கள் காலாவதியாகி கொண்டிருந்தன....
மற்றவர்களைத் திட்டித்திட்டி....
மதிப்பழித்து...
வெறுப்புமிழ்ந்து...
விஷங்கக்கி...
மக்கள்நலப்பணி... செய்துகொண்டிருந்தவர்..
தானே பணங்கொடுத்துத் தயாரித்த...
மாபெரும்... விளம்பரபதாகையில்..
முகம் மலரச்.. சிரித்துக்கொண்டிருந்தார்..
மேடுபள்ளமாய் ...
காலிடறிக் ...
கீழே விழச் செய்யக்
காத்திருக்கும் வீதியில்...
அடிப்பிரதட்சணமாய்.. நடந்துகொண்டிருந்த...
எளிய மனிதர் ...
அதைப் பார்த்து...
மெல்ல முறுவலித்துச்.. சொல்லிக்கொள்கிறார்..
முணுமுணுப்பாய் –
குண்டுசட்டியில்...
குதிரையோட்டிக்கொண்டிருக்கும்...
ஆன்லைன் அரண்மனை வாசிகளுக்கு...
தொடுவானமாகும்.. சிறுகுன்றேற்றமும்...
..

No comments:
Post a Comment