ஒரு தப்பை தொடர்ந்து செய்யனும்னா பல தப்புகள் நடக்கனும் பல பலிகள் ஏற்படனும்.
இல்லைன்னா எதுக்கு நல்ல சாராயம் அரசே விக்குறப்போ கள்ளச் சாராயம் காய்ச்சனும். குடிச்சி பல உயிர்கள் போகனும். ஏன் அரசு ஓடிப் போய் 10 லட்சம் நிவாரணம் தரனும்.
இத்தனை வருஷமா இல்லாத கள்ளச் சாராயம் இப்ப எப்படி திடீர்னு? நூற்றுக்கணக்கான வியாபாரிகள் பிடிபட்டனர். எப்போது?. மரணம் நிகழ்ந்த பிறகு. அப்படின்னா இதுக்கு முன்னாடியே இது இருந்திருக்கு. DGPக்கு தெரியாமலா இருந்திருக்கும்.
போதைப் பொருள் பிடிபட்டது தூத்துக்குடியில் அதே சமயம் கேரளாவில் 25 ஆயிரம் கோடி போதைப் பொருள் சிக்குகிறது.
இரண்டு நிகழ்வுகளையும் (கள்ளச் சாராயம் & போதைப் பொருட்கள்) ஒரு நேர் கோடுல இணைச்சி பாருங்க.
தி கேரளா ஸ்டோரி தமிழகத்துல திரையிட்டும் ஏன் ஓட்டல?
ஃபர்ஹானா ஏன் நிறுத்தப்பட்டது.?
நல்லா யோசிச்சா இதன் பின்னனி என்னன்னு புரியும்
ஒவ்வொரு நிகழ்வும்
ஒவ்வொரு செய்தியும்
வெவ்வேறாக தோன்றும்
தொடர்பில்லாதது போல் தோன்றும்
ஆனால் அவைகள் ஒவ்வொன்றின் பின்னாலும் ஒரு பெரிய அரசியல் ஒளிந்திருக்கும்
காரணமின்றி காரியமில்லை.
No comments:
Post a Comment