Tuesday, May 16, 2023

நல்ல செயல்.

 எங்கள் வீட்டிற்கு இன்று காலை 8 மணிக்கு வயதான தாத்தா ஒருவர் வந்தார் அம்மா பசிக்கிறது சாப்பாடு இருந்தால் கொஞ்சம் போடுங்க என்றார்...

தான் 10 நிமிடம் இங்கேயே உட்காருங்க சாப்பாடு கொண்டு வருகிறேன் என்று சொல்லிட்டு சமையலறைக்குள் சென்று காலை டிபன் இட்லியும் -சட்னி அவசரமாக தயார் செய்து உணவு பரிமாற எடுத்துக் கொண்டு வெளியே வந்தேன் .
எனக்கு ஒரே ஆச்சர்யம் 10 நிமிடத்தில் வீட்டை சுற்றியுள்ள குப்பை புல் மற்றும் தேவையற்ற செடிகளை பிடிங்கி கொண்டு இருந்தார்..
என் தாத்தாவை விட பெயரியவாரக இருப்பார் நடக்கவும் முடியவில்லை கை கால் நடுக்கம் வேறு...
தாத்தா இங்கே வாங்க என்று கூறியதும் அவர் வந்தார் நான் தட்டில் 5 இட்லி கொடுத்தேன் உடனே தாத்தா மா எனக்கு 2 இட்லி போதுமானது என்னால் சாப்பிட முடியாது வயதாகிவிட்டது என்றார் தாத்தா
2 இட்லி சாப்பிடவா வீட்டை சுற்றி சுத்தம் செய்து உணவு கேட்கிறார் மிகவும் வருத்தமாக இருந்தது..
தாத்தா சாப்பிட்டு விட்ட உடனே நான் அவருக்கு 💯 ரூபாய் தந்தேன் மகிழ்ச்சியில் "இன்னொரு முறை இந்த பகுதியில் வந்தால் இங்கே வருகிறேன் மா ஏதாச்சும் வேலை இருந்தால் சொல்லுங்கள் என்றார் தாத்தா...
ஏனென்றால் எனக்கு உழைக்காமல் சாப்பிட பிடிக்காது மா என்றார்.
🏡 வீட்டின் வெளியே சுத்தம் செய்து உணவு கேட்கும் தாத்தாவின் நேர்மை மனம் சிலிர்க்க வைத்தது...
உங்களுக்கு உணவு மற்றும் உங்கள் தேவைகளை செய்து தந்த உங்கள் தாய்.தந்தையை வீதியில் விட்டுவிடாதீர்கள்....!
May be an image of 1 person, smiling and text
All reactions

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...