Wednesday, May 10, 2023

வரவே வராது என்று நினைத்த பணமும் உங்களைத் தேடி வரும்.

 தடையில்லாத பணம் வரவிருக்கும், கொடுத்த பணத்தை திரும்ப பெறவும், தேங்காயை இப்படி பயன்படுத்தி பாருங்கள். நீங்கள் கேட்காமலே பணம் வாங்கியவர் உங்களை தேடி வந்து திருப்பி தரும் அதிசயம் நடக்கும்.*

*🔯பணம் என்பது இன்றைய வாழ்வில் மிகவும் பிரதானமான ஒன்று. பணம் இல்லாமல் எந்த ஒரு காரியமும் அவ்வளவு சுலபத்தில் நடந்து விடாது. இந்த பணத்தை சம்பாதிப்பதை காட்டிலும் முக்கியமானது சம்பாதித்த பணயத்தை வீண் விரையம் இல்லாமல் செலவு செய்வது மிகவும் கடினம். இந்த பணம் நமக்கு தடையில்லாமல் வந்து சேரவும், நாம் பிறருக்கு உதவியாக கொடுத்த பணம் நமக்கு திரும்ப கிடைக்காமல் இருந்தால், அதை திரும்பப் பெறவும் செய்ய வேண்டிய எளிய பரிகாரத்தை பற்றி தான் இப்போது நாம் பார்க்க போகிறோம். அது என்ன பரிகாரம் எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் பக்தி பதிவில் தொடர்ந்து பார்க்கலாம்.*
*🔯இந்த பரிகாரத்திற்கு ஒரு தேங்காய், ஒரு அகல் விளக்கு, நல்லெண்ணெய், பஞ்சுத்திரி இது தான் நமக்கு தேவையானது. இந்த பரிகாரத்தை நாம் சனிக்கிழமைகளில் தான் செய்ய வேண்டும். இதை பெருமாள் கோவிலில் செய்தால் மிக மிக நல்லது. பெருமாள் கோவில் அருகில் இல்லை என்றால் வேறு கோவில்களில் செய்யலாம்.*
*🔯வெள்ளிக்கிழமை மாலையே இந்த பரிகாரத்திற்கு தேவையான பொருட்களை எல்லாம் வாங்கி வந்து உங்கள் வீட்டில் வைத்து விடுங்கள். ஏனென்றால் இந்த தேங்காயானது உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து வெளியில் எடுத்து செல்லும் போது நிலைவாசலில் வைத்து தான் எடுத்துச் செல்ல வேண்டும். எனவே கோவிலின் அருகில் வாங்கி உடைக்காமல், முதல் நாளே வீட்டிற்கு வாங்கி வந்து வைத்து அடுத்த நாள் சனிக்கிழமை காலை கோவிலுக்கு செல்லும் போது எடுத்து செல்லுங்கள்.*
*🔯இழந்த பணத்தை திரும்ப பெற சக்தி வாய்ந்த பரிகாரம்*
*🔯சனிக்கிழமை காலை அல்லது மாலை இரண்டு வேளையில் ஏதாவது ஒரு நேரத்தில் அருகில் இருக்கும் பெருமாள் கோவிலுக்கு வீட்டு நிலைவாசலில் தேங்காய் வைத்து எடுத்த பிறகு அத்துடன் அகல் விளக்கு, நல்லெண்ணெய், பஞ்சு திரி என அனைத்தையும் எடுத்து சென்று அகல் விளக்கில் நல்லெண்ணெய் ஊற்றி பஞ்சுதிரி போட்டு தீபம் ஏற்ற வேண்டும்.*
*🔯தீபம் ஏற்றி வைத்த பிறகு அந்த தீபத்தின் முன் இந்த தேங்காய் உடைத்து வைத்து உங்களுடைய வேண்டுதலை மனமாற வேண்டிக் கொள்ளுங்கள். இதை வேண்டி முடித்தவுடன் நீங்கள் நேராக வீட்டிற்கு திரும்பி வந்து விடுங்கள் வேறு எங்கும் செல்ல கூடாது. இவ்வளவு தான் இந்த பரிகாரம்.*
*🔯இந்த பரிகாரத்தை இத்தனை நாள் தான் செய்ய வேண்டும் என்ற கணக்கில்லை. நமக்கு பண வரவு என்பது எப்போதும் தேவையான ஒன்று தானே, ஆகையால் இதை குறைந்தது ஆறு வாரங்கள் செய்யுங்கள்.*
*🔯அதன் பிறகு இதைத் தொடர்ந்து செய்து கொண்டே வந்தால் பண வரவானது எப்போதும் உங்களுக்கு இருந்து கொண்டே இருக்கும். இதில் நீங்கள் கொடுத்த பணம் மட்டுமல்லாமல், எப்போதும் உங்கள் கையில் பணப்புழக்கம் இருக்கும் என்று சொல்லப்படுகிறது.*
*🔯இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது உங்கள் வாழ்வில் பெரிய பெரிய மாற்றங்கள் எல்லாம் நிகழ்ந்து, வரவே வராது என்று நினைத்த பணமும் உங்களைத் தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அது மட்டும் இன்றி தடையில்லாமல் பணம் வரவானது உங்களுக்கு இருந்து கொண்டுடே இருக்கும். இந்த எளிய பரிகாரத்தை செய்து தடையில்லா பண வரவை பெற்று உங்கள் வாழ்க்கையை என்னாலும் சந்தோஷமாகவும், மகிழ்ச்சியாகவும் வாழுங்கள்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...