Friday, May 19, 2023

இது ஏமாற்று வேலையா யாராவது சொல்லுங்க.

 நான் சமீபத்தில் டெல்லி சென்று இருந்தபோது நடந்தது இது. இது ஒரு ஏமாற்று வேலையா, இல்லை சாமர்த்தியமா என்று என்னால் நிச்சயமாகச் சொல்லத் தெரியவில்லை. அன்பர்கள் கூறினால் மகிழ்ச்சி அடைவேன்.

ஒரு டூரிஸ்ட் பஸ்ஸில் டெல்லியில் உள்ள இடங்களைச் சுற்றிப் பார்த்தேன்.
தாமரைக் கோவில் என்று ஒரு ஸ்தலம். Lotus Temple.
.இது ஒரு மிகப் பெரிய வளாகம்.
ஒரு பெரிய க்யூவில் நின்று உள்ளே போக வேண்டும். பிறகு கோவிலுக்குள் போக வேண்டும்.
நான் அந்த க்யூவில் நின்ற போது க்யூவின் கடைசியில் சிலர் மாஸ்க் விற்றுக் கொண்டு இருந்தனர். ஒற்றை லேயர் ஐந்து ரூ, இரட்டை லேயர் ₹10 என்று விற்றுக் கொண்டு இருந்தனர். No mask no entry என்றும் கூவிக் கொண்டு இருந்தனர். நான் பையில் வைத்து இருந்த மாஸ்க்கை எடுத்து அணிந்து கொண்டேன். வாங்கவில்லை.
இதில் கூத்து என்னவென்றால். அந்த கேட்டின் அருகே சென்றபோது, ஸ்பீக்கரில் அறிவித்துக் கொண்டு இருந்தனர். "உள்ளே செல்ல. மாஸ்க் தேவை இல்லை. தின்பண்டங்களுக்கு அனுமதி இல்லை. இதுவும் உள்ளே சுத்தமாகப் பராமரிக்கவே." என்று ஹிந்தியிலும் ஆங்கிலத்திலும் மாறி மாறி அறிவித்துக் கொண்டு இருந்தனர்.
நான் க்யூவில் நின்றது ஒரு ஐந்து ஆறு நிமிடங்கள் மட்டுமே.
அதற்குள்ளே மாஸ்க் வாங்கியவர் ஏராளம். ஏதொ மாஸ்க் பற்றி அறிவிக்கிறார்கள் என்று மட்டும் புரிந்து கொண்டு மாஸ்க் வாங்கி அணிந்து கொண்டனர்.
டெல்லியில் நான் பார்த்த வேறு எந்த சுற்றுலா தலத்திலும் மாஸ்க் பற்றிய பேச்சே இல்லை. இங்கே மட்டும் ஏன் மாஸ்க் தேவை இல்லை என்று அறிவிக்க வேண்டும்? அதுவும் தொடர்ச்சியாக? இதில் எல்லோருமே உள்கையோ?
ஒன்றும் புரியவில்லை?

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...