Saturday, July 9, 2011

இதயம் இனித்தது, கண்கள் பனித்தன

தன்னால் வளர்ந்து சாம்ராஜ்யத்தை கட்டியவர்கள், தன் சொந்த மகனை ரவுடி என்று தொலைக்காட்சியில் செய்தி போட்டதை மறக்கக் கூடிய அளவுக்கு கருணாநிதி என்ன பெருந்தன்மை படைத்தவரா ? நிச்சயமாக இல்லை.
தி.மு.க.புதிய மந்திரி யார்?
மத்திய மந்திரி சபை 11-ந் தேதி  மாற்றம்;கருணாநிதியுடன் பிரணாப்முகர்ஜி ஆலோசனை
சகோதரர்களைப் பார்த்து கருணாநிதி பயந்தார் என்பதுதான் உண்மை. சகோதரர்களோடு பிணக்கு ஏற்பட்டவுடன், தயாநிதி மாறனை மந்திரி பதவியை விட்டு ராஜினாமா செய்ய உத்தரவிட, கட்சியின் செயற்குழுவை கூட்டி முடிவெடுத்த கருணாநிதி, குடும்பம் ஒன்று சேர்கையில் வசதியாக செயற்குழுவை கூட்ட மறந்து விட்டார்.“இதயம் இனித்தது, கண்கள் பனித்தன” என்று ஒற்றை வார்த்தையில் முடித்து விட்டார். ஸ்பெக்ட்ரம் ஊழல் என்று எழுந்த கேள்விக்கு, “அது முடிந்து போன விவகாரம்“ என்று முற்றுப் புள்ளி வைத்தார். இந்த சகோதரர்கள் திமுக தொண்டர்களின் உழைப்பால் பிடித்த ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி, பகாசுர வளர்ச்சி கண்டவர்கள் என்பது தானே வரலாறு. அழகிரி, அதிரடி அரசியல் செய்து தனது பெயரை கெடுத்துக் கொண்டார் என்றால், சகோதரர்கள், அழகிரி செய்வதைப் போல பத்து பங்கு செய்தாலும் வெளியில் தெரியாமல் பார்த்துக் கொண்டார்கள். சகோதரர்களைப் போல திமுக ஆட்சியின் அதிகாரத்தை பயன்படுத்தியவர்கள், கருணாநிதி குடும்பத்தில் ஒருவருமே இல்லை. 2006ல் திமுக ஆட்சிக்கு வருவதற்கு முன்பே, ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலேயே தமிழகம் முழுக்க கேபிள் தொழிலை தங்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வந்தவர்கள் தான் சகோதரர்கள். 2006ல் திமுக ஆட்சிக்கு வந்ததும், பலத்தை பிரயோகித்து, ஹாத்வே நிறுவனத்தை சென்னை நகரத்தை விட்டே துரத்தினர். தமிழகம் முழுக்கவும், கேபிள் தொழில், சகோதரர்களின் கட்டுப் பாட்டில் வந்தது. 2004ல் தயாநிதி மாறன், தொலைத் தொடர்புத் துறை அமைச்சராக ஆனதும், கேபிள் தொழில் இவர்கள் கட்டுப் பாட்டில் கொண்டு வருவதற்கு பெரும் உதவியாக அமைந்தது மட்டுமல்ல, பல்வேறு சேனல்களில் செய்தி வெளியிடாமல் இருக்க பெரும் நெருக்கடி கொடுக்க உதவியது. விஜய் டிவியில் முன்பு, ஒரு ஐந்தாண்டுகளுக்கு முன்பு என்டிடிவி நிறுவனத்தோடு சேர்ந்து தயாரித்த செய்திகள் ஒளிபரப்பாகி வந்தன. அந்தச் செய்திகள், நடுநிலைமையாக, மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றதால், தனது அதிகாரத்தை பயன்படுத்தி, விஜய் டிவிக்கு செய்திகள் ஒளிபரப்பும் அனுமதியை பறித்தார் தயாநிதி மாறன். அப்போது பறிக்கப் பட்ட செய்திக்கான அனுமதி, விஜய் டிவிக்கு மீண்டும் வழங்கப் படவேயில்லை. இது மட்டுமல்லாமல், அப்போது ஓரளவு நடுநிலையோடு செய்திகளை வெளியிட்டு வந்த, ராஜ் டிவி நிறுவனம், விசா என்ற தனது தெலுங்கு தொலைக்காட்சிக்காக ஆன்லைன் ப்ராட்காஸ்டிங் எனப்படும், ஓபி வேனை வைத்து, செய்தி ஒளிபரப்பியதாக குற்றஞ்சாட்டி, இரண்டு வருடங்களுக்கு விசா தொலைக்காட்சியை செய்தி ஒளிபரப்ப விடாமல் தடுத்து விட்டனர். இதற்கு முழு முதற்காரணம், தயாநிதி மாறனே… எப்படிப் பட்ட அதிகார துஷ்பிரயோகம் பாருங்கள். தயாநிதி மாறன் மத்திய தொலைத்தொடர்புத் துறை அமைச்சரானதே ஒரு சுவையான கதை. அவரின் தந்தை முரசொலி மாறன் வர்த்தகத் துறை அமைச்சராக இருந்து, உலக வர்த்தக மைய மாநாட்டில் ஏழை நாடுகள் தொடர்பான நீண்ட உரையை ஆற்றி, இந்தியாவை பெருமைப் படுத்தினார். சென்டிமென்ட்டலாகவாவது, அந்தத் துறையை தேர்ந்தெடுத்திருக்க வேண்டும். ஆனால் இவர்கள் … தொலைத் தொடர்புத் துறைதான் வேண்டும் என்று, அத்துறையை கைப்பற்றினர். அந்தப் பொறுப்பை ஏற்பதற்கு சில நாட்களுக்கு முன், சன் டிவியின் தலைமை நிர்வாகியாக இருநதார் தயாநிதி மாறன். தயாநிதி மாறன் தரப்பில் சொல்லப் படும் ஒரு முக்கிய தியரி, டிவி சேனல்கள் தொடர்பாக தகவல் ஒளிபரப்புத் துறைதான் அனுமதி வழங்க வேண்டும், என்பது. ஆனால், தகவல் ஒளிபரப்புத் துறை ஒரு போஸ்ட் ஆபீஸ்தான். ஒரு தொலைக்காட்சி தனது ஒளிபரப்பை நடத்துவதற்கு ஸ்பெக்ட்ரம் தான் அடிப்படை. அந்த ஸ்பெக்ட்ரத்தை வழங்குவதற்கு அனுமதி வழங்க வேண்டியது தொலைத் தொடர்புத் துறை. இதை வைத்துத் தான், சன் டிவிக்கு போட்டியாக, உள்ள சேனல்களை வளர விடாமல் செய்தனர். ஒரு உதாரணத்தைக் கூற வேண்டுமானால், ஜெயா தொலைக்காட்சி, 24 மணி நேர செய்தி சேனல் தொடங்குவதற்காக விண்ணப்பித்தது. இதற்காக ஜெயா தொலைக்காட்சி புதிய ஸ்பெக்ட்ரம் கேட்கவில்லை. ஏற்கனவே ஜெயா தொலைக்காட்சிக்காக ஒதுக்கிய ஸ்பெக்ட்ரத்தை மேலும் வலுவாக பயன்படுத்தவே அனுமதி கேட்டது. மே 2004ல் சமர்ப்பிக்கப் பட்ட ஜெயா டிவியின் விண்ணப்பம், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக தயாநிதி மாறனால் கிடப்பில் போடப்பட்டது. ஜெயா டிவி நிர்வாகம் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. நீதிமன்றத்தில் ஜெயா டிவி போலவே, கைரளி டிவியும் செய்தித் தொலைக் காட்சி தொடர்வதற்காக கொடுத்த விண்ணப்பம், ஒரு சில நாட்களில் பரிசீலனை செய்யப் பட்டு ஒதுக்கப் பட்ட விவசாரமும் நீதிமன்றத்தில் சுட்டிக் காட்டப் பட்டது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...