Saturday, July 9, 2011

கோயம்பேடு,மணலியில் 54 பேருக்கு கடை-நிலம் ஒதுக்கீடு: பரிதி இளம்வழுதிக்கு ஐகோர்ட்டு நோட்டீசு

சென்னை கோயம்பேடு மார்க்கெட், மணலி, மறைமலைநகர் ஆகிய 3 இடங்களில் சி.எம்.டி.ஏ., சார்பில் கடைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் கோயம்பேடு மார்க்கெட்டில் 27 கடைகளும், மணலி, மறைமலைநகரில் 27 காலி மனைகளும் விருப்பு உரிமை கோட்டாவில் ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.  
கோயம்பேடு,மணலியில் 54 பேருக்கு கடை-நிலம் ஒதுக்கீடு:
 
 பரிதி இளம்வழுதிக்கு
 
 ஐகோர்ட்டு நோட்டீசு
சி.எம்.டி.ஏ. தலைவராக இருந்த முன்னாள் தி.மு.க. அமைச்சர் பரிதி இளம்வழுதி தனக்குள்ள அதிகாரத்தை பயன்படுத்தி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு கடை- இடத்தை ஒதுக்கி கொடுத்ததாக சீனிவாசன் என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார்.
 
அதில் சி.எம்.டி.ஏ. விதி முறைகளை பின்பற்றாமல் தலைவர் என்ற முறையில் பரிதி இளம்வழுதி தனக்கு வேண்டியவர்களுக்கு கடை- இடத்தை ஒதுக்கி கொடுத்துள்ளதால் அதை ரத்து செய்ய வேண்டும் என்று கூறி இருந்தார்.
 
தலைமை நீதிபதி இக்பால், நீதிபதி சிவஞானம் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. இதில் பரிதி இளம்வழுதிக்கும், கடைகளை பெற்ற 54 பேர்களுக்கும் நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டனர். இதேபோல் சி.எம்.டி.ஏ. உறுப்பினர் செயலரும் இது குறித்து பதில் அளிக்க கோர்ட்டு நோட்டீசு அனுப்பி உள்ளது

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...