Monday, July 4, 2011

துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைக்க முயலும் ராணுவத்தினர்

துப்பாக்கியால் சுடப்பட்டு சிறுவன் தில்ஷான் உயிரிழந்த சம்பவத்தில் தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. சிறுவன் மீது ராணுவத்தினர் யாரும் துப்பாக்கி சூடு நடத்தவில்லை என்று ராணுவ அதிகாரி சசிநாயர் கூறியுள்ளார்.
துப்பாக்கி சூடு சம்பவத்தை மறைக்க முயலும் ராணுவத்தினர்
இதனையே முதல் அறிக்கையாக ராணுவத்தினர் போலீசாரிடம் தாக்கல் செய்திருப்பதாக தெரிகிறது. சிறுவன் சுட்டுக்கொல்லப்பட்டு 24 மணி நேரத்திற்கு மேலாகியும், அவனை சுட்டுக்கொன்றவர் இன்னும் கைது செய்யப்படவில்லை.
 
இதுபோன்ற சம்பவங்களில் வேறு யாராவது ஈடுபட்டிருந்தால் போலீசார் விசாரணை நடத்த வேண்டிய விதத்தில் விசாரித்திருப்பார்கள். ஆனால் துப்பாக்கி சூடு சம்பவத்தால் ராணுவத்தினருக்கு தொடர்பு இருப்பதால் போலீசாரால் அவர்கள் இஷ்டத்துக்கு விசாரிக்க முடியவில்லை.
 
ராணுவத்தினர் தரப்பில் இருந்தும் இவர்தான் துப்பாக்கியால் சுட்டார் என்று இன்னும் அடையாளம் காட்டவில்லை. எனவே சிறுவனை சுட்டுக்கொன்றவரை காப்பாற்றும் முயற்சியில் ராணுவ அதிகாரிகள் ஈடுபட்டிருக்கிறார்களோ? என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...