கருணாநிதி இந்த சமூகத்துக்கு எதாவது நன்மை செய்வார் என்றோ அல்லது மத்திய அல்லது மாநில அரசுகள் மாணவர்களின் கல்விநிலையை உயர்த்துவதன் மூலம் சமூகத்தை முன்னேற்ற தீர்மானமான சித்தம் கொண்டிருப்பார்கள் என சொன்னால் அதை நீங்கள் நம்பினால் உங்களை விட முட்டால் வேறு யாரும் இருக்கமுடியாது .
ஏனெனில் கல்வி என்பது பண்டமாகி விட்டது அதை விற்பவன் வியாபாரி வாங்குபவன் மாணவன் உற்பத்தி
எந்திரங்கள் அதன் ஆசிரியர்கள் .கல்வியை விற்பனை செய்வதன் மூலம் தரமான கல்விகொடுக்க போட்டா போட்டி நிகழும் ஒரு சூழலில் கல்வியை இலவசமாக வழங்கும் அரசோ ஒரு அளவுக்கு மேல் கல்விக்கு நிதி ஒதுக்க முடியாது என கைவிரிக்கிறது தரமற்ற பாடசாலைகள் , உபகரணங்கள் பள்ளிகள் ,
அக்கறையற்ற வாத்தியார்கள் கண்டுகொள்ளாத அரசு எனும் இந்த சூழலை மாற்ற முயலாத அரசு
கல்வியின் பாடதிட்டத்தை மட்டும் தனியார் அளவுக்கு உயர்த்த நினைப்பது ஒரே உள்நோக்கம் மட்டும் கொண்டது அதுதான் தனியார் பள்ளிகளின் பாடதிட்டத்தில் கைவைப்பது .
நாம் எதற்காக போராடவேண்டும் பாடதிட்டத்துக்கு மட்டுமல்ல மொத்த கல்வி வளர்ச்சிக்கும்தான்
பாடதிட்டத்தை மாற்றுவதன் மூலம் கல்வியை உயர்த்திவிட முடியும் என அரசு சொல்லுதாம்
அதை புரட்சிகர அமைப்பு (?) நம்புதாம் சமச்சீர் கல்வி பாடபுத்தகங்களை ஆய்வு செய்து ஆகா
இதுவல்லவோ நல்ல கல்வி என சபாஸ் போடுகிறார்கள் அய்யா நீங்கள் சிபி எஸ்சி அல்லது மெட்ரிகுலேசன் பாடத்தில் என்ன இருக்குன் பார்த்தீர்களா ?
அதெப்படி ஒரு பாடதிட்டத்தை மட்டும் பார்த்து தீர்ப்பு சொல்வீர்கள் இதுதான் அறிவு நாணயமான செயலா?
இல்லை இதற்கு பெயர்தான் திருத்தல் வாதம் புரட்டு வாதம் இது புரட்சிவாதமல்ல
சமூகத்தில் வளர்ந்து வரும் கல்வி என்பது இப்போது தனியார் பள்ளிகளில் மைய்யம் கொண்டுள்ளதும்
அதன் சேவை போட்டியின் காரணமாகவென்றாலும் ஒப்பீட்டு அளவில் அரசு பள்ளிகளை விட அதிகம்
இருப்பதாலும் அதன் வளர்ச்சி தவிர்க்க முடியாதது இந்த நிலையில் அனைத்து துறைகளையும் தனியாருக்கு தாரைவார்த்த அரசு மக்களின் நலனில் அக்கறை இருப்பதை போல நடிப்பதுதான் இந்த சமச்சீர் கல்வி நன்றாக ஓட முடியாதவனை நல்லா ஓடும் நபருடன் போட்டி போட செய்ய இரண்டாமவனின் காலில் கல்லை கட்டுவது இது .
பாடத்தின் அளவை சமப்படுத்த நினைப்பவர்கள் பாடம் வழங்கப்படும் முறை அது சொல்லிதரப்படும் சூழலை மாற்ற ஏன் முற்படுவதில்லை வெறும் பாடத்தை மாற்றி விட்டால் கல்வி உயர்ந்து விடுமா ஆசிரியர்கள் சொல்லி தரவில்லை என்றால் மாணவன் படிக்கிறானா என்பதை பார்க்காத ஆசிரியர் இருந்தால் புத்தகங்களை மட்டும் வைத்து கொண்டு என்ன செய்வது ஆக அரசு பள்ளிகளின் சூழல் படிப்புக்கான அரசு ஒதுக்கும் நிதியை அதிகப்படுத்துதல் பொறுப்பான ஆசிரியர்கள் தரமான பள்ளி கூடங்களை கட்டி
சி பி எஸ் சி அளவுக்கு போதனையை கொடுக்க வேண்டிய அளவுக்கு ஆசிரியர்களின் மனநிலையை பள்ளியின் சூழலை உயர்த்தாமல் வெறும் பாடதிட்ட மாற்றம் என்பது வீண் வேலை அல்லது ஏமாற்று
இந்த ஏமாற்று முன்மொழிபவன் புரட்சிகாரன் அல்ல
No comments:
Post a Comment