Sunday, July 10, 2011

தி, மு, க , என்றால் ?


தி காரில் முடிந்த ழகம்,,,?
       இன்று தி.மு.க வின் நிலை இதுதானே.?ஒவ்வொருவராக திகார சிறையை நிரப்பிக்கொண்டிருக்க கருணாநிதியோ கையறு நிலையில் புலம்பிக்கொண்டிருக்கிறார்.
 கூடா நட்பு எது எனத் தெரிந்தும் அவர் காங்கிரசைக் கழற்றி விடாமல் கையை பிடித்துக்கொண்டிருப்பது தான் மிக அவலம்.
 ஏன் இன்னும் காங்கிரசின் உறவு.சி.பி.ஐ. இவ்வளவு முரட்டுத்தனமாக கனிமொழிக்கு பிணை கொடுப்பதை  கூட தடுக்கிறது.அதன் முதலாளிகள் ஆணை இல்லாமல் இப்படி நடந்துகொள்ளாது.
 சி,பி.ஐ ,சுதந்திரமான அமைப்பு எங்கள் கையில்ஒன்றும் இல்லை என சோனியா- மன்மோகன் சொன்னால் என்றால் அதை இந்தையாவில் உள்ள மனநலன் இல்லாதவர்கள் கூட நம்பமாட்டார்கள்.
 அணுசக்தி ஒப்பந்தத்திற்கு லாலு-முலாயம்-மாயாவதி மூவரும் எதிர்ப்பு தெரிவித்து விட்டு கடைசியில் இடது சாரிகள் காலை வாரி விட்டு வாக்களித்ததற்கு  காரணம்சி.பி.ஐ.மிரட்டல்தானே.அதைத்தானே காங்கிரஸ் ஆயுதமாகப் பயன் படுத்தியது.
  கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் சிறையில் இருக்கக்கூடாது என்ற காரணம்தானே இதுவரை காங்கிரசின் மிரட்டலுக்கு பயந்து கூட்டணி வைத்தது.
 இப்போதுதான் வரிசையாக குடும்பத்தினர்கள் திகாரை நிரப்பிக்கொண்டிருக்கிறார்களே .காங்கிரசுதான் கைகழுவிவிட்டதே பின்னும் ஏன் கையைப்பிடித்து தொங்குகிறீர்கள்.
 நெஞ்சுக்கு நீதி இன்னும் கிடைக்க வேண்டியதிருக்கிறதா?
 இளக்கோவன் மட்டுமல்ல காங்கிரசினர் தி.மு.க.உறவை வேண்டா உறவாகத்தான் நினைக்கிறார்கள்.அதேபோல் தி.மு.க.தொண்டனும் காங்கிரசை கூடாநட்பாகத்தான் கருதுகிறான்.
 அதை கட்டிபிடித்து அழுவது நீங்களும்-அழகிரியும்தான்.
 ஒன்று மட்டும் நிச்சயம்.காங்கிரசினர் தி.மு.க.வை அழிக்க 1967 லில் ஆரம்பித்து  முடியாததை  இப்போது முடித்து விடஎண்ணியே காரியங்களை செய்கின்றனர்.அவர்களுக்கு நீங்கள் நிபந்தனையின்றி ஆதரவளித்து தி.மு.கழகம் என்ற கட்சி யை சமாதிக்கு அனுப்ப முடிந்த உதவிகளை செய்கிறீர்கள்.
     
 இனி தி.மு.க என்றால்                  திகாரில் முடிந்த ட்சி என்றுதான்  வரலாறு சொல்லும்.
   இதற்குத்தான் ஆசை பட்டீர்களா   கலைஞர் மு.கருணாநிதி    அவர்களே??  

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...