Saturday, July 9, 2011

ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் நிதி அமைச்சக பரிந்துரையை தயாநிதிமாறன் ஏற்கவில்லை; பாராளுமன்ற கூட்டுக்குழு தகவல்

ஸ்பெக்ட்ரம் ஊழல் குறித்து பாராளுமன்ற இரு சபைகளின் கூட்டுக்குழு விசாரணை நடத்தி வருகிறது. இந்த குழுவின் தலைவராக காங்கிரஸ் பாராளு மன்ற உறுப்பினர் பி.சி. சாக்கோ உள்ளார். இதுவரை நடத்தப்பட்டுள்ள விசாரணை குறித்து அவர் கூறியதாவது:-
 ஸ்பெக்ட்ரம் விலை நிர்ணயம் நிதி அமைச்சக பரிந்துரையை
 
 தயாநிதிமாறன் ஏற்கவில்லை;
 
 பாராளுமன்ற கூட்டுக்குழு தகவல்
2ஜி அலைக்கற்றை உரிமத்துக்கு எவ்வளவு விலை நிர்ணயம் செய்யலாம் என்று மத்திய நிதி அமைச்சகம் கடந்த 2006-ம் ஆண்டு விவாதித்து முடிவு செய்தது. அதை மத்திய தொலைத் தொடர்பு அமைச்சகத்துக்கு பரிந்துரை செய்தனர். மேலும் விலை நிர்ணயம் செய்வது தொடர்பாக மத்திய மந்திரி சபை கூட்டத்தில் விவாதித்து இறுதி முடிவு எடுக்கலாம் என்று நிதி அமைச்சகம் தனது பரிந்துரையில் தெரிவித்திருந்தது.
 
மத்திய அரசுக்கு கணிசமான அளவுக்கு வருவாய் தரும் வகையில் இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது.   நிதி அமைச்சகத்தின் இந்த பரிந்துரையை தயாநிதி மாறன் ஏற்கவில்லை. அவற்றை நிராகரித்த தயாநிதி மாறன் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு செய்ய எவ்வளவு கட்டணம் நிர்ணயிப்பது என்ற முடிவை எடுக்க தனது அமைச்கத்துக்கு மட்டுமே முழு உரிமை உண்டு என்றார்.
 
இதை மத்திய மந்திரி சபை ஏற்றுக் கொண்டது. இதனால் ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு, அவற்றுக்கான விலை நிர்ணயம் எதுவும் மந்திரி சபை கூட்டத்தில் இடம் பெறவில்லை. இந்த தகவல்களை கூட்டுக் குழுவிடம் நிதி அமைச்சக பொருளாதார விவகாரத்துறை செயலாளர் ஆர்.கோபாலன் தெரிவித்தார். அடுத்த கட்டமாக தொலைத் தொடர் புத்துறை அதிகாரிகளிடம் விசாரணை நடத்த திட்ட மிட்டுள்ளோம்.
 
இவ்வாறு கூட்டுக்குழு தலைவர் பி.சி. சாக்கோ கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...