Wednesday, July 6, 2011

தயாநிதி மாறனை நீக்க பிரதமருக்கு சரியான நேரம்: ஜெயலலிதா

மத்திய  அமைச்சர் தயாநிதி  மாறனை மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்க  பிரதமருக்கு சரியான நேரம் வந்துள்ளதாக தமிழக முதல்வர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார்.
 
தயாநிதி மாறனை  நீக்க  பிரதமருக்கு சரியான நேரம்: ஜெயலலிதா
2 ஜி ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி வரும் சி.பி.ஐ. விசாரணையின் தற்போதைய நிலைமை குறித்து சுப்ரீம் கோர்ட்டில் இன்று அறிக்கை தாக்கல் செய்தது. அதில் 2ஜி முறைகேடு வழக்கில், மத்திய அமைச்சர் தயாநிதியிடம் விசாரணை நடத்த உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டில் சி.பி.ஐ. தெரிவித்துள்ளது.
 
மேலும் இவ்விவகாரம் தொடர்பாக 2001-08 ஆண்டு வரை உள்ள காலகட்டத்திற்கான விசாரணையை நடத்தி முடிக்க 3 மாதம் கால அவகாசம் கோரி உள்ளனர்.
 
இந்நிலையில் நடப்பு நிதி ஆண்டுக்கான திட்டக்குழுவின் கூட்டத்தில் கலந்துகொள்ள முதல்-அமைச்சர் ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளார் . அங்கு முதல்வர் ஜெயலலிதா நிருபர்களிடம் கூறும் போது, சிபிஐ  நன்றாக பணியாற்றுவதாகவும் மத்திய அமைச்சரவையிலிருந்து தயாநிதி மாறனை  நீக்குவதற்கு  பிரதமருக்கு  இது சரியான நேரம் எனவும், இதில்  பிரதமர் விரைந்து செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார். 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...