Monday, July 11, 2011

கலைஞர் டி.வி.நி்ர்வாகம் : கடனை அடைத்ததாக கலைஞர் டி.வி.கணக்கு காட்டுகிறது.

கலைஞர் தொலைக்காட்சிக்கு ‘கடன்’ கொடுத்த கொல்கட்டா நிறுவனங்களிடம் மத்திய வருமான வரித்துறையின் புலனாய்வுப் பிரிவு விசாரணை நடத்தி வருகிறது.


2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டை பெற்ற ஸ்வான் நிறுவனத்தின் உரிமையாளரான டி.பி.ரியால்டி நிறுவனம், கலைஞர் தொலைக்காட்சி நிர்வாகத்திற்கு ரூ.200 கோடி பல்வேறு நிறுவனங்கள் வழியாக அனுப்பி வைத்தது. இது குறித்து ம.பு.க. புலனாய்வு செய்யத் தொடங்கியதும், அதனை கடன் என்று கலைஞர் டி.வி.நி்ர்வாகம் கூறியது.

தாங்கள் வாங்கிய கடனை வட்டியும் முதலுமாக திருப்பி செலுத்திவிட்டதாகவும் தெரிவித்தது. அதாவது ரூ.200 கோடி கடனிற்கு ரூ.230 கோடி வட்டியும் முதலுமாக செலுத்தப்பட்டதாகத் தெரிவித்தது.

இந்த ரூ.230 கோடியை செலுத்த கொல்கட்டாவைச் சேர்ந்த அடையாளமற்ற பல நிறுவனங்களிடம் கலைஞர் டி.வி. கடன் பெற்றது. 19 அடையாளமற்ற அந்த நிறுவனங்களிடம் கடன் பெற்றது எப்படி என்பது பற்றி வருமான வரித்துறை புலனாய்வு செய்து வருகிறது.
இந்த 19 நிறுவனங்களும் அளித்த நிதியை சபையர் மீடியா என்ற நிறுவனம் அஞ்சுகம் பிலிம்ஸ் லிமிடெட் எனும் நிறுவனத்திற்கு ரூ.83 கோடி கடனாக அளித்துள்ளது. அந்த நிறுவனம் ரூ.69.61 கோடியை கலைஞர் தொலைக்காட்சிக்கு செலுத்தியுள்ளது. இந்தப் பணத்தைக் கொண்டு சினியுக் நிறுவனத்திற்கு கடனை அடைத்ததாக கலைஞர் டி.வி.கணக்கு காட்டுகிறது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...