Wednesday, August 31, 2011

செலிபிரட்டிஸ் சீக்ரெட்ஸ் – ஏமாந்த சோனகிரி

உலக மகா உத்தம கட்சித்தலைவரிடம் விண்ணப்பம் என்ற கோதாவில் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கிய ஸ்மக்ளர்,  படமெடுக்க ஆர்வமாய் இருப்பதாகவும், அதற்கொரு திரைக்கதை வேண்டுமென்றும் கேட்க, ஆகா ஏமாந்தாண்டா ஒரு லூசுப்பயல் என்று நினைத்து குஷியோடு கதை ஒன்றினைக் கொடுத்தார் அந்தத் தலைவர்.
இதில் ஏமாந்தது தலைவர்தான். ஸ்மக்ளர் அல்ல. எப்படி என்றுச் சொல்கிறேன் கேளுங்கள். ஸ்மக்ளரின் சித்து விளையாட்டுக்கள் கொஞ்ச நஞ்சமல்ல என்று சினிமா உலகில் பேசிக் கொள்வார்கள். அதெல்லாம் உண்மையா இல்லையா என்பதைக் காலம் தான் சொல்ல வேண்டும்.
அந்தக் காலத்தில் லாட்டரியில் கொடிகட்டிப் பறந்த ஒரு பிரபலம் ஒருவர் தலைவரிடம் நெருங்க முயன்று கொண்டிருந்தார். அதைக் கேள்விப்பட்ட ஸ்மகளர் அவரைத் தன்னிடம் வரவழைத்தார். தலைவரின் அபிமானம் பெற வேண்டுமானால் அவரின் திரைக்கதையைப் படமாக்கினால் போதும். விரைவில் தன்னுடன் இணைத்துக் கொள்வார் என்று ஐடியா கொடுக்க, லாட்டரி அதிபரும் பல்லை இளித்துக் கொண்டு 50 கோடி ரூபாயைதூக்கிக் கொடுத்தார்.
திரைப்படமும் உருவாகியது பிரமாண்ட சைசில். தயாரிப்பாளர் யாரென்று பார்த்த லாட்டரி அதிபருக்கு சகலமும் அப்போதுதான் புரிந்தது. ஆப்பை அடித்த ஸ்மக்ளர் கடைசி வரையில் லாட்டரி அதிபரை தலைவரின் அருகிலேயே விடவில்லை. தலையில் துண்டைப் போட்டுக் கொண்டு “அய்யோ அம்மா, ஆத்தா” என்று அரற்றிக் கொண்டிருக்கிறார் லாட்டரி அதிபர்.
விதி வலியது லாட்டரி அதிபரே. செய்யும் தொழில் பிறரைக் கெடுக்காத வண்ணம் இருக்க வேண்டும். ஆனால் நீங்கள் பலரின் உழைப்பை உறிஞ்சியவரல்லவா? இன்று அனுபவிக்கின்றீர்கள். எத்தனை கோயில் ஏறி இறங்கினாலும் பாபக் கணக்கிற்கு விடை இருக்கிறது அதிபரே.
இந்த ஸ்மக்ளர் தற்போது அப்பணத்தினை வைத்து பலப்பல வேலைகளைச் செய்து வருகிறார் என்று கேள்விப்பட்டேன்.
விரைவில் குஜய் பற்றிய அதிமுக்கிய சீக்ரெட்ஸ் ஒன்றினை எழுதப் போகிறேன். இந்தச் சம்பவம் அதிர்ச்சியாய் இருக்காது. மக்கள் எப்படி ஏமாந்து கொண்டிருக்கிறார்கள் என்பதை பட்டவர்த்தனமாய் சொல்லும். அதுவரை இந்த நாவலுக்கு சற்று இடைவேளை.

குறிப்பு : இது ஒரு நாவல் யாரையும் எவரையும் குறிப்பிடுவன அல்ல.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...