Saturday, August 27, 2011

கருணாநிதி மகள் செல்வியின் மருகமன் மீது நில மோசடி புகார்! .

கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் மீது நில மோசடிபுகார் ஒன்று சென்னை காவற்துறை
ஆணையரிடம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர ரியல் எஸ்டேட் அதிபர் சோமசேகர் என்பவர்,  சென்னை காவற்துறை ஆனையர் திரிபாதியை சந்தித்து வழங்கியுள்ள இப்புகார் மனுவில்,

தியாகராயநகர் ஜி.என். செட்டி சாலை‌யி‌ல் எனது மனைவி கீதா பெயரில் 1.5 கிரவுண்ட் நிலம் வாங்கினேன்.

இந்த நிலையில், கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் உமா மகேஸ்வரி என்பவர் என்னிடத்தில் செல்போனில் பேசினார். தன்னை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் மகள் செல்வியின் மருமகன் ஜோதி மணியின் சகோதரி என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர், நான் வாங்கிய இடத்தின் அருகே இருந்த 4.5 கிரவுண்ட் நிலத்தை மருத்துவமனை கட்ட ஜோதிமணியும், உமா மகேஸ்வரியும் வாங்க திட்டமிட்டு இருப்பதாகவும், அதற்காக என்னிடம் உள்ள 1.5 கிரவுண்ட் நிலமும் தேவைப்படுவதாக கூறினார்.

ஆனால், ரூ.3 கோடி மதிப்புள்ள நிலத்தை ரூ.40 லட்சத்திற்கு என்னிடம் கேட்டு மிரட்டினார்கள். அதன்பின்னர், அவர்களிடம் உள்ள 4.5 கிரவுண்ட் நிலத்தை ரூ.15 கோடிக்கு வாங்கிக் கொள்ளுமாறு என்னிடம் கூறினர். நான் என்னுடைய சொத்தை காப்பாற்றுவதற்காக, எனது உறவினர்களுக்காக அந்த சொத்தை விலைக்கு வாங்க சம்மதித்தேன். அதற்காக, அவர்களிடம் ரூ.1 கோடி முன்பணம் கொடுத்தேன். ஒரு வார காலத்திற்குள் நிலத்தை பத்திரம் செய்து தருவதாக கூறினார்கள். ஆனால், 3 மாதங்கள் ஆகியும் சொன்னபடி பத்திரம் முடித்து தரவில்லை.

கடந்த பிப்ரவரி மாதம் இதுகுறித்து கேட்டபோது, குடும்பத்தோடு உயிரோடு இருக்க முடியாது என்று மிரட்டினார்கள். அந்த சொத்தும் அவர்களிடம் இல்லை என்பது தெரியவந்தது. எனவே, அவர்களிடம் நான் கொடுத்த ரூ.1 கோடி பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் எ‌ன தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...