Thursday, August 18, 2011

உள்ளாட்சி தேர்தல் 2011;கேப்டன் போடும் ப்ளான்

ஜெயலலிதா முதல்வர் ஆவார்.எதிர்கட்சி தலைவர் வரிசையில் மாண்புமிகு கேப்டன் விஜயகாந்த் அமர்வார் என கோவை பொதுக்கூட்டத்தில் பண்ருட்டி ராமச்சந்திரன் சொன்னதுதன் பலித்தது.சட்டசபையில் முதல்வருக்கு இணையான அதிகாரங்கள் கொண்ட பதவி எதிர்கட்சி தலைவர் பதவி.சட்டசபை உறுப்பினர் பேசிக்கொண்டிருக்கும்போது,முதல்வர் கருத்து சொல்ல எழுந்தால்,அந்த உறுப்பினர் உடனே அமரவேண்டும்.


அதே போல எதிர்கட்சி தலைவரும் உறுப்பினர் பேசும்போது குறுக்கிட்டு பேச முடியும்.அப்போது அந்த உறுப்பினர் அமர்ந்துவிட வேண்டும்.முதல்வரை கேள்வி கேட்க கூடிய உரிமை சட்டசபையில் எதிர்கட்சிதலைவருக்கே உண்டு.இன்று அந்த உரிமைகள் எதையும் பயன்படுத்தாமல் விஜயகாந்த் சும்மா இருக்கிறார்.முக்கியமான பட்ஜெட் கூட்டத்திற்கே எதிர்கட்சி தலைவர் வரவில்லை.கட்டாயம் எதிர்கட்சிதலைவர் பேசியாக வேண்டும் என்ற சூழலில் சட்டசபை வந்த விஜயகாந்த்,பட்ஜெட்டில் உள்ள இலவச திட்டங்களை ஆஹா ஓஹோ என புகழ்ந்தார்.கருணாநிதிக்கு இதெல்லாம் நல்ல திட்டமாக தெரியவில்லையா.இதில் குறை கண்டுபிடித்தால் அவர் கன் இருந்தும் குருடர் என ஒரே போடு போட்டார்.ஜெயலலிதா இதை கண்டு பூரித்து போனார்.முகம் மலர்ந்தது.



அரிசி ரெண்டு ரூபாய்க்கு போட்டால் போதுமா..குழம்பு செலவு 25 ரூபா ஆகுதே என முழங்கியவர் விஜயகாந்த்.இன்று இலவச லேப்டாப்,இலவச கறவை மாடு,இலவச ஆடு,என 50க்கும் மேற்பட்ட இலவச திட்டங்களை மகத்தான திட்டம்,அடித்தட்டு மக்களை முன்னேற்றும் திட்டம் என்கிறார்.மனசுல என்ன தோணுதோ அதை வெள்ளந்தியாக அதிரடியாக பேசும் விஜயகாந்த் இன்று இல்லை.காரணம் என்ன..?

உள்ளாட்சி தேர்தல்.இதுதான் ஒவ்வொரு கட்சிக்கும் அஸ்திவாரமே.இதில் நல்ல பரவலான வெற்றி கிடைத்துவிட்டால் ஓட்டு வங்கி பலப்படும்.இன்னும் சில மாதங்களில் உள்ளாட்சி தேர்தல் வரும் சூழலில் ஜெவை பகைத்துக்கொள்ள விஜயகாந்த் நினைக்கவில்லை.இதுதான் காரணம்.கேப்டன் ப்ளான் செம ப்ளான் தான்.
---------------------------------------
சும்மா கிடந்த சங்கை ஊதிக்கெடுத்தானாம் ஆண்டி;வேலியில போறதை எடுத்து வேட்டிக்குள்ள விட்டுகிட்டு குடையுதேன்னு புலம்பின கதையெல்லாம் இப்ப காங்கிரஸ்க்கு கச்சிதமா பொருந்துது.அவருக்கு உலகம் முழுவதும் உள்ள இந்தியர்கள் மத்தியில் பெரும் ஆதரவு.அடுத்த காந்தி.வாழும் மகாத்மா,காந்தி மறுபடி பொறந்துட்டாரு என பட்டங்கள் குவிகின்றன...காங்கிரஸ் மண்டையை பிச்சுக்குது.மூளை இருந்தாதானே ஐடியா வரும்.?


ம......ன்... மண்டையில மண்ணுதான் இருக்கு.
----------------------------
மட்டன் பிரியாணி,சிக்கன் பிரியாணி எல்லாம் இனி களை கட்டும் உள்ளாட்சி தேர்தல் வந்தாச்சுல்ல.இப்பவே அவனவன் யாரை கவுக்கலாம்னு எங்க திட்டம் போட ஆரம்பிச்சிட்டாய்ங்க..தி.மு.க தான் எல்லா பஞ்சாயத்துலியும் வலுவா இருக்குது.அதையும் வாஷ் அவுட் செய்தால்தான் அ.தி.மு.க வுக்கு முழுமையான வெற்றியாகும்.தி.மு.க வுக்கு உள்ளாட்சி தேர்தலில் ஓரளவு வெற்றி கிடைத்தால்தான் சமாளிக்க முடியும்.அதனால் எல்லோருக்கும் அடுத்த பரீட்சை ஆரம்பமாகிவிட்டது.வெற்றி மமதையில் ஜெ...அசால்டாக இருந்தால் அவ்வளவுதான்.கேப்டன்கூட மிலஆய் அரைத்து விடுவார்.
-------------------------------------
திருவண்ணாமலை கிரிவலம்,சதுரகிரி பயணம் இரண்டுக்கும் நண்பர்கள் அழைத்துக்கொண்டே இருக்கிறார்கள்.அடுத்த மாதம் 10 ஆம்தேதி சதுரகிரி பயணம் அநேகமக இருக்கலாம்.என் ஜோதிட புத்தகங்கள் இரண்டு ரிலீஸ் ஆகிவிட்டதால் புது வாடிக்கையாளர்கள் அதிகம் வருவதால் பிஸியாக போய்க்கொண்டிருக்கிறது...இன்று காலையில் போட வேண்டிய பதிவு இப்பதான் டைப் செய்றேன்.தபாலில் அனுப்பப்படும் ஜாதகங்கள் எழுத நேரம் ஒதுக்கணும்.



 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...