தமிழ் புத்தாண்டை சித்திரைக்கு மாற்றி பண்பாட்டை காத்தவர் ஜெயலலிதா என்று மதுரை ஆதீனம் பாராட்டியுள்ளார். இது குறித்து மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
சித்திரை முதல் நாளை தமிழ்ப்புத்தாண்டு என்று அறிவித்து தமிழ் பாரம் பரியத்தையும், மரபுகளையும் கட்டிக்காத்த வீரமங்கை தமிழக முதல்-அமைச்சர் ஜெயலலிதா தான். நமது பாரம்பரியத்தையும், மரபுகளையும் அழிந்து போகாமல் காப்பாற்றி மனமகிழ்ச்சியையும், மன நிறைவையும் சட்டப்பூர்வ மாக தனி மசோதா மூலம் நிறைவேற்றி இருப்பதை பாராட்டுகின்றோம்- வாழ்த்துகின்றோம்.
நமது தமிழ் பண்பாடு என்பது ஆயிரம் ஆயிரம் ஆண்டு காலப்பயிராகும். இதை அழித்து ஒழித்து விட நான் ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன் என்று சூளுரைத்து சட்டமாக்கி வெற்றிக்கொடி நாட்டியுள்ள தமிழக முதல்வரின் நூறு நாள் ஆட்சியில் தமிழ் மக்களுக்கு ஆற்றிய சாதனைகள் தமிழ்நாட்டின் ஆட்சி வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப் பெற்று நல்ல உள்ளங்களின் சிம்மாசனத்தில் அமர்ந்து அருளாட்சி செய்து வருகிறார்.
உங்கள் ஆட்சியில் சாதனைகள் மென்மேலும் சிறந்து ஓங்கட்டும்.
இவ்வாறு மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment