பதிவின் நோக்கம்- இது ஒட்டு மொத்த இந்தியரையும் தாக்கி எழுதும் பதிவல்ல. இந்தியாவில் பிறந்தே பலர் மறந்து விட்ட ஒரு கதை பற்றியது.
இன்று அனைத்து ஊடகங்களையும் ஆக்கிரமித்திருக்கும் ஒரு விடயம் தான் ராஜீவ் கொலையாளிகளின் கருணைமனு நிராகரிப்பு சம்பந்தமானதாகும்.
கொலையாளி கொலையாளி என்கிறார்களே எந்த வகையில் அவர்கள் கொலையாளிகள். சிபிஐ ன் சிரேஸ்ட புலனாய்வாளரே சொல்கிறார் புலிகள் செய்யும் விடயங்களில் உச்ச ரகசியம் காக்கப்படும் என்று. அப்படியானால் மின்கலம் வாங்கிக் கொடுத்த பேரறிவாளனுக்கு எப்படித் தெரியும் தான் ஒரு வெடிகுண்டுக்குத் தான் வாங்கிக் கொடுக்கிறேன் என்று. அது இருக்கட்டும் சாந்தன் சிவராசனின் கூட்டாளி என்ற குற்றச்சாட்டை சொல்கின்றனர் அதனால் கொலைக்கு உடந்தையாகியிரப்பாராம். மற்றவர் கதைகளும் இதே மாதிரித் தான்.
ராஜீவ் செய்த கொலைகள், கற்பழிப்போடு ஒப்பிடுகையில் அவர் குடும்பமும் சம்பந்தப்பட்டிருக்கும் தானே அவர்களை ஏன் தூக்கில் விடக் கூடாது.
எத்தனை கொலைகள் ?
எத்தனை கற்பழிப்புக்கள் ?
எத்தனை பேரை உயிரோடு தாட்டார்கள் ?
எத்தனை பேரை உயிரோடு கொளுத்தினார்கள்?
செய்தது யார் எமக்கு அமைதி தர வந்த அமைதிப்படை.
சரி தலைப்பிற்கு வருவோம். இதே கொலையாளிகளுக்கு மேன்மைதகு ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்கள் இவர்கள் கருணை மனுவை ஏற்கிறேன் எனவும் அவர்கள் அனுபவித்த தண்டனை போதும் எனவும் பகிரங்கமாக தெரிவித்திருந்தார். அதை ஏன் யாருமே கண்டு கொள்ளவில்லை. ஆட்சியில் இருக்கும் போது தானே சொன்னார். இப்போ பிரதீபா பட்டேல் நிராகரித்ததும் பெரிதாக கதைப்பவர்கள் ஏன் அதை மறந்தீர்கள். அப்படி ஒரு கோமகன் சொல்லை அவமதித்தவர்கள் (முக்கியமாக கங்கிரஸ்) தான் இந்த ஜனநாயக தேசத்தின் குடிமக்களா ?
பிரியங்கா ஏதோ பாசத்தில் நளினியை பார்க்கப் போனதாக பல ஊடகங்கள் பீற்றிக் கொண்டது. அது தானா உண்மை. தனது புத்தகத்துக்கு கொஞ்ச பக்கம் நிரப்பவும். தமிழ் நாட்டில் கொஞ்ச நல்ல அபிப்பிராயம் பெறவுமேயாகும். எங்கள் சாபம் உங்கள் வம்சத்தை என்றுமே வாழ விடாது.
அமெரிக்காவில் இருந்தே சிகிச்சைக்காக இந்தியா தேடி பலர் ஓடிவர தன் தேசத்து மருத்துவர் மிது நம்பிக்கையில்லாமல் அந்நிய நாட்டுக்கு ஓடுகிறார் ஒரு தேசத்தின் ஆளுங்கட்சிக்குத் தகுதியான சீமாட்டி.
யாரோ செய்த கொலைக்கு யாரையோ கொன்று வஞ்சம் தீர்க்கத் துடிக்கும் ஒரு கொலைகார ரத்த வெறிபிடித்த குடும்பம் தான் இந்தக் குடும்பம். வடநாட்டானுக்கு வால் பிடித்து அழிந்தவர் தான் அதிகம் உதாரணத்துக்கு தமிழ் நாட்டில் பல அரசியல்வாதிகள் இருக்கிறார்கள்.
இந்தப் பதிவு பலருக்கு கோபத்தைக் கிளறலாம். ஆனால் 20 வருடம் நரகத்தில் வாழும் அந்த அற்ப உயிர்களின் இடத்தில் இருந்து பாருங்கள் புரியும். இந்த ஈவிரக்கமற்ற குடும்ப அரசியலில் இருந்து எப்போ அரசாங்கம் விடுபடுகிறதோ அன்று தான் இந்தியா ஒரு ஜனநாயக நாடு என நான் எற்றுக் கொள்வேன். இவையனைத்தும் அங்கே நரகத்தில் வாழும் ராஜீவிற்குத் தெரியும். தெரியாவிடினும் விரைவில் சோனியா போய் சொல்வார் என்ற நம்பிக்கையில் மனதில் பல ஆதங்கம் இருந்தாலும் அடக்கிக் கொண்டு இப்பதிவை சுருக்கமாகவே முடிக்கிறேன்.
குறிப்பு- இப்பதிவை யார் வேண்டு மென்றாலும் எடுங்கள் எது வேண்டுமென்றாலும் செய்யுங்கள். என்னை திட்ட விரும்புவோர் ஆசை தீரத் திட்டுங்கள். என் மன ஆதங்கத்தை நான் திட்டித் தீர்த்தது போல உங்கள் ஆதங்கத்தை என் மீது கொட்டுங்கள். பாதிக்கப்பட்ட எம் மண்மிதோ அல்லது மக்கள் மிதோ திட்ட வேண்டாம்
மிக முக்கிய குறிப்பு- பேரறிவாளனுக்கு மட்டும் குரல் கொடுக்கும் ஆர்வலர்களே அவர் மட்டும் உயிரல்ல மற்றவர்களதும் உயிர் தான் அநாதைகள் போல குரல் கொடுக்க யாருமே இன்றி தாவிக்கும் அவர்களையும் கணக்கிலெடுங்கள்.
அவர்களை காப்பாற்ற விரும்பினால் இங்கே போய் உங்கள் பதிவை பதியுங்கள் உறவுகளே
அவர்களை காப்பாற்ற விரும்பினால் இங்கே போய் உங்கள் பதிவை பதியுங்கள் உறவுகளே
No comments:
Post a Comment