இந்த துணிச்சலான செயலுக்கு நிச்சயம் முதலமைச்சர் செயலலிதாவை பாராட்டியே ஆக வேண்டும். தவறு அது தேவையில்லை என்று தெரிந்தால் உடனே தைரியமாய் முடிவு எடுக்கும் ஒரு முதலமைச்சரை பெற்றுள்ளது தற்போதைய தமிழக அரசு.
என்டோசல்பான் என்ற பூச்சிக்கொல்லி மருந்தால் நிகழும் உயிர்கொல்லி கொடுமைகளை கடந்த 6 ஆண்டுகளாக பத்திரிக்கைகளில் எழுதி வந்தேன். கோவை அருகே எனது சொந்த ஊரான அட்டப்பாடியில் நிகழ்ந்த கொடுரங்களை படம்பிடித்து காட்டியிருந்தோம்.
இந்த பகுதிகளுக்கு என்டோசல்பான் மருந்தை தமிழக அரசு மானிய விலையில் அளித்தது தான் கொடுமையின் உச்சகட்டம். கேரள அரசு இந்த மருந்தை ஏற்கனவே தடை செய்திருந்தது. இதற்கு தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் தடை விதிக்க வேண்டும் என்று கேரள முன்னாள் முதலமைச்சர் உண்ணாவிரதம் இருந்தது நினைவிருக்கும்.
என்டோ சல்பான் மருந்தின் உயிர்கொல்லி ஆபத்தை பல முறை தமிழகத்தின் கருணாநிதி அரசின் பார்வைக்கு கொண்டு சென்றும் செவிடன் காதில் ஊதிய சங்கு கதை தான் மிச்சம். சுடாலின் ஈழப்பிரச்சனை போல இதும் ஒரு பெரிய விசயமே கிடையாது என்றுவிட்டார். பணம் பதவியை தவிர எதுவுமே தெரியாத இவர்களை நினைத்து நொந்துகொண்டேன்.
ஆனால் பதவி ஏற்ற மூன்று மாதத்தில் என்டோசல்பான் மருந்து குறித்த விசாரனைகளை துரிதப்படுத்தியது செயலலிதா தலைமையிலான அரசு. இன்று தமிழகத்திலும் என்டோசல்பான் மருந்து தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. முதலமைச்சர் செயலலிதாவை மனதார பாராட்டுகிறேன். காரணம் என்டோசல்பான் கொடூரங்களை அருகில் இருந்து பார்த்தவர்களுக்கு தான் அதன் வலி தெரியும்.
No comments:
Post a Comment