தமிழக சட்டசபையில் நேற்று பட்ஜெட் மீதான விவாதத்தின் போத் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் ஏ.சவுந்தரராஜன் உரையாற்றினார். அப்போது, பட்ஜெட்டை பாராட்டி பேசிய அவர், மக்கள் நலத்திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
அப்போது குறுக்கிட்டு பேசிய தமிழக முதல்வர் ஜெயலலிதா
எல்லாவற்றுக்கும் அடிப்படை தேவை நிதி. மத்திய அரசு, மாநில அரசுக்களிடமிருந்த அதிகாரங்களை எல்லாம் பரித்துவிட்டது. வருவாய் வர கூடிய அத்தனை இனங்களையும் இன்று மத்திய அரசு தான் வைத்துக்கொண்டுள்ளது.
மாநில அரசுக்கு வருவாய் வரக்கூடிய ஒரே வழி வாட் வரி (மதிப்புக்கூட்டு வரி). அதை வைத்து கொண்டு தான் இத்தனை செலவுகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
செய்ய வேண்டும் என்ற மனம் எங்களுக்கு இருக்கிறது. நீங்கள் என்னென்ன கோரிக்கைகளை இங்கே முன்வைக்கிறீர்க்ளோ, அவற்றை விட நூறு மடங்கு, ஆயிரம் மடங்கு செய்ய வேண்டும் என்ற ஆசை எனக்கும் இருக்கிறது. ஆனால் நிதி பற்றாக்குறை தான் கைகளை கட்டி போட்டுள்ளது.
தமிழ்நாட்டை வாழ விடுவதில்லை என்ற ஒரு எண்ணத்துடன் மத்திய அரசு செயல்படுகிறது. அதையும் மீறி ஜனநயாக முறைகளுக்கு உட்பட்டு தமிழக மக்களுக்கு எங்களால் முடிந்த நன்மைகளை செய்தே தீருவோம் என தெரிவித்தார்.
மேலும்,
மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் கடந்த ஜூன் மாதத்தில் இருந்து நிறுத்தப்பட்டு விட்டதாகவும்இதுகுறித்து பிரதருக்கு கடிதம் மூலமும், நேரிலும் புகார் அளித்தும் மத்திய அரசு எவ்வித நடவடிக்கையும் எடுக்க வில்லை எனவும் அவர் குற்றம்சாட்டினார்.
இருப்பினும் தான் இது குறித்து பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு சென்றுள்ளதாகவும் மாநில உரிமைகளை விட்டுக் கொடுக்காமல் பெறுவதை உறுதி செய்ய தான் நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

No comments:
Post a Comment