Sunday, August 21, 2011

நான் திரைப்படத் தணிக்கைக் குழுவில் இருந்தால்

பெரிய பெரிய விஷயங்களையெல்லாம் பெரியவங்க பார்த்துப்பாங்க.என் சிற்றறிவுக்கு எட்டிய வரை நான் தணிக்கை செய்ய விரும்பும் விஷயங்களின் பட்டியல் :

ரஜினி ஷூ காலை கேமரா முன்னால் சுழட்டுவது.அவரை வாழவைத்த கேமராவை மட்டும் அவர் அவமதிக்கவில்லை,ரசிகர்கள் முகத்துக்கு நேரே நீட்டி அவர்களையும் அவமதிப்பதாக அமைந்திருக்கிறது என்பதை ரஜினி ஏன் உணரவில்லை.இவரைப்பார்த்து குட்டி குட்டி நடிகர்கள் கூட காலாட்டுகின்றனர்.ரஜினி ராணாவிலாவது ,இதைத் தவிர்க்கட்டுமே

பாதி சாப்பாட்டில் அல்லது முழுச்சாப்பாடிலேயே கோபம் வந்து தட்டிலேயே கைகழுவும் காட்சிகள் காட்டப் படக்கூடாது .குழந்தைகள் மனதில் பதியாதா இந்த காட்சி?.உணவை மதிக்க வேண்டும் என்று உணர்த்தவில்லையென்றால் கூட பரவாயில்லை,அவமதிக்காமல் இருக்கலாமே.

வாத்தியக்கருவிகளைப் போட்டு உடைப்பது .இது என்ன கூத்து?கதாநாயகி பிரிந்து போனால் வீணையும் வயலினும் கிடாரும் என்ன செய்யும்?தெய்வீகம் என்று போற்றப்படும் இசையை மதிக்க வேண்டாமா?

விவேக் சமீபத்தில் கையாளும் நகைச்சுவை காட்சிகள் அனைத்துமே ஊனமுற்றோரின் மனம் வேதனைப் படவைக்கும்படி அமைந்திருக்கின்றன.கண் தெரியாதவர்கள் போல் நடித்து சாலையைக் கடக்க இளம் பெண்ணின் வருகைக்காகக் காத்திருந்து வக்கிரமான புத்தியைக் காட்டும் வண்ணம் அமைந்த காட்சிகளை அனுமதிக்கக் கூடாது.இவை போன்ற காட்சிகளை ,விழி அற்றவர் அறிய முடியவில்லையென்றாலும் பார்த்தவர்கள் கூற மாட்டார்களா?
முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் அவர்களின் நட்பைப் பெற்று சமீபத்தில் நாட்டைப் பசுமையாக்கும் முயற்சியில் ஈடுபடுபவருக்கு ஒரு வேண்டுகோள்,திரைப்படத்தில் ’பச்சை பசுமை ’வேண்டாமே.

பள்ளியில் ஆசிரியரைக் கேலி செய்யும் காட்சிகள் இப்பொழுதெல்லாம் ரொம்பவே அதிகமாகி வருகின்றன.நிறுத்தினால் நல்லது.

அப்பாவை மதிக்காதபடி வசனங்களும் காட்சிகளும் நகைச்சுவை என்ற பெயரில்  வலம் வருகின்றன.இது போன்ற காட்சிகளைப் பெரியவர்கள் பார்த்து சிரித்துவிட்டு போகலாம், சிறுவர்கள்?இயக்குனர்கள் யோசிக்க வேண்டாமா?

பழம்பெறும் நகைச்சுவை நடிகர்களை இமிடேட் செய்வதுபோல் அவர்களின் பெயரைக் கெடுக்கும் வண்ணம் சமீபத்தில் ஒரு படம் .ஒரு நடிகர், சுருளிராஜன் போல் நடிப்பார்.சுருளிராஜன் கொஞ்சம் கூட விரசம் கலக்காத நகைச்சுவையை நம்பி வெற்றி பெற்ற ஒரு  நல்ல நகைச்சுவை நடிகர்.அவருக்கு மரியாதை செலுத்தவில்லையென்றாலும் பாதகமில்லை அவரது வேஷத்தில் தன் பாணியைப் புகுத்தி ,மறைந்த ஒரு நல்ல நடிகரின் இமேஜைக் கெடுக்கலாமா?

உங்கள் கருத்தையும்  பகிர்ந்து கொள்ளுங்களேன் .திரைப்படங்கள் கொஞ்சம் சுத்தமாகட்டும்

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...