Tuesday, August 30, 2011

தூக்கு: தமிழக தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று கூறும் மத்திய அரசின் மூக்குடைக்கும் வழி என்ன?


"முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தி கொலை வழக்கில் 3 பேருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைக்க வேண்டும் என்று கோரி தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது என்று மத்திய சட்டத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறினார்.

இது குறித்து குர்ஷித் கூறுகையில், சட்டமன்றத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானம் யாரையும் கட்டுப்படுத்தாது. இதை எவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ள வேண்டுமோ, அவ்வளவு முக்கியமானதாக எடுத்துக் கொள்ளப்படும். அவ்வளவு தான்." என்று செய்திகள் கூறுகின்றன.
இந்திய அரசியல் அமைப்பின் 72 ஆம் பிரிவின் கீழ் நடுவண் அமைச்சரவை முடிவைத்தான் குடியரசு தலைவர் பின்பற்ற முடியும். மாநில சட்டமன்ற தீர்மானம் குடியரசு தலைவரைக் கட்டுப்படுத்தாது. மூன்று பேரின் தூக்கு தண்டனையில் நடுவண் அமைச்சரவை முடிவு என்ன என்பது எல்லோரும் அறிந்ததுதான்.
அதேநேரத்தில், இந்திய அரசியல் அமைப்பின் 161 ஆம் பிரிவின் கீழ் தூக்கு தணடனையை மாநில ஆளுநரும் குறைக்கலாம் என்பதும், மாநில ஆளுநர் மாநில அமைச்சரவை முடிவையே பின்பற்ற வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதும் - தமிழ்நாடு அரசுக்கு எளிய வாய்ப்பை அளித்துள்ளது.

“The power under Articles 72 and 161 of the Constitution can be exercised by the Central and State Governments, not by the President or Governor on their own. The advice of the appropriate Government binds the Head of the State.”

Maru Ram Etc. Etc vs Union Of Lndia & Anr on 11 November, 1980

மூன்று பேரும் மீண்டும் மாநில ஆளுநருக்கு கருணை மனு அளிக்கச் செய்து, அந்த மனு மீது மாநில அமைச்சரவை தூக்குதண்டனையைக் குறைக்க வேண்டும் என பரிந்துரை செய்தால் - மூன்று பேரின் உயிரும் காப்பாற்றப்பட்டுவிடும். 

இது அரசியல் அமைப்பு மாநில அரசுக்கு அளித்துள்ள அதிகாரம் என்பதால், நடுவண் அரசு இதில் தலையிட முடியாது.
காண்க:

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...