"இந்தியாவைத் தகர்க்க வேண்டும்' என்ற ஒரே இலக்கோடு, மாலத்தீவில் இளைஞர்களுக்கு பயிற்சி அளிக்கிறது, அல்-குவைதா பயங்கரவாத இயக்கம். அப்படி பயிற்சி பெறுவோர் மூலம், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட போலி இந்திய ரூபாய் நோட்டுகள், கேரளாவுக்கு கடத்தி வரப்படுகின்றன என்று, புலனாய்வு நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.
இதுதொடர்பாக, புலனாய்வு நிறுவனங்கள் கூறியுள்ளதாவது:இந்தியப் பெருங்கடலில் லட்சத்தீவு கூட்டங்களுக்கு சற்று கீழே, மாலத்தீவு உள்ளது. இங்குள்ள ஹிமாந்து தீவை தலைமையிடமாகக் கொண்டு, அல்- குவைதா பயங்கரவாத அமைப்பினர், தற்போது செயல்பட்டு வருகின்றனர். இங்கு, வேலை இல்லாமல் வறுமையில் வாடும் இளைஞர்களை மூளைச் சலவை செய்து, அவர்களைத் தங்களின் பயங்கரவாத பயிற்சியில் சேர்த்து, பயிற்சியும் அளித்து வருகின்றனர்.
இப்படி பயிற்சி பெறும் இளைஞர்களைக் கொண்டு, முதலில் மாலத்தீவு அரசை தங்கள் வசமாக்க அல்-குவைதா திட்டமிட்டுள்ளது. இளைஞர்களுக்கு அல்-குவைதாவினர் அளிக்கும் பயிற்சிகள் குறித்த புகைப்படங்கள், வீடியோ காட்சிகள், இந்திய ராணுவத்தின் நுண்ணறிவுப் பிரிவுக்கு கிடைத்துள்ளன. மாலத்தீவில் அல்-குவைதாவினரால் பயிற்சி அளிக்கப்பட்ட இளைஞர்கள், அடிக்கடி கேரள மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு, ரகசியமாக சென்று வருகின்றனர். இதற்கான காரணங்கள் என்ன என்பது குறித்து, தீவிரமாக விசாரித்து வருகிறோம்.முதல்கட்டமாக நடத்திய விசாரணையில், கேரளாவுக்கு அடிக்கடி வரும் மாலத்தீவு இளைஞர்கள் மூலம் தான், பாகிஸ்தானில் தயாரிக்கப்பட்ட போலி இந்திய ரூபாய் நோட்டுகள் கொடுத்துவிடப்படுவதாகவும், அவர்கள் இங்குள்ள ஏஜன்ட்கள் மூலம் அவற்றை புழக்கத்தில் விடுவதாகவும் தகவல் கிடைத்துள்ளது.போலி இந்திய ரூபாய் நோட்டுகளை பெறுவோர், சந்தைகள் மற்றும் திருவிழா போன்ற மக்கள் திரளாக கூடும் இடங்களில் அவற்றை புழக்கத்தில் விடுகின்றனர். உதாரணத்திற்கு, மாடுகளை வாங்குவது போல் நடித்து, கள்ள நோட்டுகளை கொடுத்து மாடுகளை வாங்கி, அவற்றை வேறு இடங்களில் குறைந்த விலைக்கு விற்றுவிடுகின்றனர்.மேலும், திருவனந்தபுரம் விமான நிலையத்தை ஒட்டி உள்ள பல பகுதிகளை, வெளிநாட்டைச் சேர்ந்த சிலர் பினாமி பெயரில் வாங்கி குவித்து வருவதாகவும், கண்டறிந்துள்ளோம். அதிவேகமாக விற்பனையாகி வரும் நில விற்பனை குறித்தான முதல் கட்ட விசாரணையில், பல வியக்கத்தக்க விஷயங்கள் வெளிவந்துள்ளன.
இந்த நிலங்களில் பெரும் பகுதி, வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ளது. அவர்களால், இப்படி பல கோடிகளை செலவிட்டு வாங்க முடியாது. பயங்கரவாத அமைப்புகளும், பயங்கரவாதிகளும் தங்களின் சதி வேலைகளுக்கு, அவர்களைப் பயன்படுத்திக் கொண்டுள்ளது தெரியவந்துள்ளது. பினாமி பெயரில் நிலங்கள் விற்பனையாவது குறித்து, மாநில வருவாய் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு புலனாய்வு நிறுவனங்கள் கூறியுள்ளன.

No comments:
Post a Comment