என் இனிய வலைத்தமிழ் மக்களே..!
மே-13-ல் கிடைத்த தோல்வி சாசனத்திற்குப் பிறகு இன்றைக்குத்தான் தி.மு.க.வினர் வெளியில் தலைகாட்டியுள்ளனர்.

தி.மு.க. ஆட்சி பறிபோனதற்கு முக்கியக் காரணமாக இருந்து வந்த நில அபகரிப்பு, அதிகார துஷ்பிரயோகம், கட்சிக்காரர்களின் அடாவடித்தனம் இவற்றுக்கெல்லாம் இன்றைக்கு ஜெயல்லிதாவின் மூலமாக பதில் சொல்ல வேண்டிய கட்டாயம் தி.மு.க.வினருக்கு..!
ஒவ்வொரு மாவட்டத்தில் கண்ணீருடன் புற்றீசல்போல் கிளம்பி வந்து கொண்டிருக்கும் பொதுமக்களின் குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் இத்தனை ஆண்டு கால தி.மு.க.வின் வரலாற்றையே புரட்டிப் போட்டிருக்கிறது. இன்றைய தேர்தலில் ஏற்பட்டிருக்கும் அவப் பெயரை துடைத்தெறிந்து இனிவரும் காலங்களில் தி.மு.கழகமே இருக்குமா என்கிற சந்தேகத்தையே அக்கட்சியின் செயல்பாடுகள் ஏற்படுத்தியிருக்கிறது.
கண்ணீர்த்துளிகள் என்ற அவப்பெயரோடும், தலைவரான ஈ.வெ.ரா.பெரியாரின் கடும் கண்டனத்தையும், எதிர்ப்பையும் தாங்கிக் கொண்டும் 18 ஆண்டு காலம் இந்த்த திமுகவை வளர்த்தெடுக்க அண்ணா எத்தனை, எத்தனை தியாகங்களை செய்திருக்கிறார் என்பதையெல்லாம் வருங்கால தமிழ் சந்த்தியினர் நினைத்துப் பார்க்க முடியாத அளவுக்கு தமிழகத்துக்கு மட்டுமல்ல தி.மு.க.வுக்கு சேர்த்தே துரோகம் இழைத்திருக்கிறார் கருணாநிதி.
தி.மு.க. துவக்கப்பட்ட முதல் கூட்டத்தில் ஐம்பெரும் தலைவர்களில் தன்னை அமர வைத்துப் பார்க்காத தி.மு.க.வை அழித்தே விடுவது என்றே கங்கணம் கட்டி செயல்பட்டுக் கொண்டிருக்கிறார் கருணாநிதி.
கட்சியினரின் அராஜகத்தைக் கண்டும் காணாத்து போல் இருந்து.. நாட்டில் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் ஒருவர் இந்த லட்சணத்தில் ஆட்சியை நடத்தியிருக்கிறார் என்பதே தி.மு.க. கட்சிக்கே கேவலமானது..!
ஊழல் செய்தார்கள்.. கொள்ளையடித்தார்கள்.. கொலை செய்தார்கள்.. அராஜகம் நடத்தினார்கள் என்பதையெல்லாம்கூட அரசியல் என்று ஒத்துக் கொள்ளலாம். ஆனால் அதற்குப் பின்பு காவல்துறையில் புகார் கொடுக்க வந்தவர்களிடமிருந்து புகார்களைக்கூட வாங்க மாட்டோம் என்று காவல்துறையே மறுத்திருக்கிறது என்றால், கருணாநிதியின் நிர்வாக லட்சணத்தை இதிலிருந்தே நாம் தெரிந்து கொள்ளலாம்..!
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு ஜூலை 10-ம் தேதிவரையிலும் ஆயிரத்து 449 தமிழர்கள் நில மோசடி புகார்களைக் கொடுத்துள்ளனர். இந்த லிஸ்ட் இன்றைய தேதியில் நான்காயிரத்தைத் தாண்டிவிட்டதாக உறுதிபடுத்தாத தகவல்கள் தெரிவிக்கின்றன.
1. திருப்பூரில் நில மோசடி தொடர்பாக அளிக்கப்பட்ட 137 மனுக்கள் மீது விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வி.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். நில மோசடி தொடர்பாக 137 மனுக்கள் பெறப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.218.87 கோடி மதிப்பிலான, 551.78 ஏக்கர் நிலங்கள் மோசடி செய்யப்பட்டுள்ளதாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2. ஜூலை.20 - நில அபகரிப்பு மோசடி புகார் தொடர்பாக கடந்த 15 நாட்களில் சென்னை நகரில் மட்டும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நில அபகரிப்பு குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக இதுவரை 90 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன என்றும் 18 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்றும் போலீஸ் கமிஷனர் ஜே,கே. திரிபாதி தெரிவித்தார்.
3. திருவண்ணாமலை மாவட்டத்தில் நில மோசடி புகார் பிரிவு துவங்கப்பட்டதில் இருந்து, 55 புகார்கள் வந்துள்ளன. இதில், மூன்று வழக்கு பதிவு செய்து, 5 பேரை கைது செய்துள்ளோம். மூன்று பேருக்கு நிலத்தை மீட்டு கொடுத்துள்ளோம் என்று கூறியுள்ளார் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சாமுண்டீஸ்வரி.
4. தூத்துக்குடி மாவட்டத்தில் நில மோசடி வழக்கு தொடர்பான சிறப்பு பிரிவுக்கு இதுவரை 120 புகார்கள் வந்துள்ளன. அவைகளில் 8 புகார்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு 8 எதிரிகள் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர்.
5. காஞ்சீபுரம் மாவட்டத்தில் நில மோசடி, நில அபகரிப்பு தொடர்பாக 200&க்கும் மேற்பட்ட புகார்கள் வந்துள்ளன. அந்த புகார்கள் மீது விரைவான நடவடிக்கை எடுத்து, கோடிக்கணக்கான சொத்துக்களை மீட்டு, புகார்கள் மீது தீர்வுகான அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கடந்த 1ந் தேதி முதல் 9ந் தேதி வரை மட்டும் காஞ்சீபுரம் மாவட்டத்தில் சுமார் ரூ.3 கோடி மதிப்பிலான சொத்துக்கள் மீட்க்கப்பட்டுள்ளன. இது தொடர்பாக 15 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
6. கோவையில் சுமார் 55 புகார்கள் பெறப்பட்டுள்ளன. ஈரோட்டில் 134 புகார்கள் பெறப்பட்டு, 2 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. திருப்பூரில் 76 புகார்கள் பெறப்பட்டு 35 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேற்கு மண்டலத்தைப் பொருத்தவரை, நிலமோசடி தொடர்பாக 710 புகார்கள் பெறப்பட்டுள்ளன. இதன் மதிப்பு ரூ. 162.73 கோடியாகும். இதில் 59 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 29 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கோவையில் இருந்து பாலக்காடு செல்லும் வழியில் உள்ள கோவைபுதூர் என்னுமிடத்தில் ராக் இண்டோர் என்ற நிறுவனத்தினருக்காக சுமார் 950 ஏக்கர் நிலத்தினை அப்போதைய அமைச்சர் பொங்கலூர் பழனிச்சாமி தனது அதிகார பலத்தால் மிரட்டி, உருட்டி குறைந்த விலைக்கு வாங்கி, மிக அதிக விலைக்கு அந்நிறுவனத்திற்குத் தாரை வார்த்து கோடிகளை குவித்திருப்பதாகவும் இப்போது ஒரு புகார் எழுந்துள்ளது.
வாலுகளையெல்லாம் குறி வைத்து வழக்குகள் வந்து கொண்டிருந்தபோது இன்றைக்கு நல்ல நாள்.. தலையைக் குறி வைத்துவிட்டது ஜெயல்லிதா அரசு. தி.மு.க.வினர் தங்கள் மீது போடப்படும் நில பேர ஊழல் வழக்குகளெல்லாம் பொய்யானவை என்று அறைகூவல் விட்டு அறப்போராட்டத்தில் இறங்கிய இன்றைக்கு பார்த்து, தி.மு.க.வின் தலைவர் கருணாநிதி மீதே குற்றம்சுமத்தப்பட்டு ஒரு வழக்கு காவல்துறையில் பதிவாகியுள்ளது.
சென்னையில் உள்ள தர்மதோப்பு அறக்கட்டளையின் அறங்காவலர் ரெங்காரெட்டிதான் இன்றைக்கு ஒரு புகாரை போலீஸாரிடம் கொடுத்துள்ளார். அதில், “தர்மதோப்பு அறக்கட்டளைக்குச் சொந்தமான ஏழரை ஏக்கர் நிலத்தை அப்போதைய அமைச்சர் பரிதி இளம்வழுதியின் உதவியாளர் ககாரி என்பவர் போலி பத்திரம் தயாரித்து, தனி நபர் ஒருவரிடமிருந்து ஐந்தரை கோடி ரூபாய்க்கு இந்த நிலத்தை வாங்கியதாக கணக்குக் காட்டப்பட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது. உண்மையில் இதன் மதிப்பு ரூ.200 கோடியாகும். இந்த போலி பத்திரம் தயாரிக்க தாசில்தார் மற்றும் துணை தாசில்தார் ஆகியோர் உடந்தையாக இருந்துள்ளனர் என்றும், இந்த பத்திரத்தில் அப்போதைய அமைச்சர் பரிதிஇளம்வழுதி, மாவட்ட திமுக பிரதிநிதி சிப்கோ வாசு, முன்னாள் திமுக பகுதி செயலாளர் சிட்டிபாபு ஆகியோர் சாட்சி கையெழுத்து போட்டுள்ளனர்” என்றும் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், “சுகாரி உடனுக்குடன் இந்த நிலத்தை ஜோஷி பில்டர்ஸ் என்ற நிறுவனத்துக்கு விற்றுள்ளதாகவும், இது கருணாநிதியின் பேரன் உதயநிதி ஸ்டாலினின் பினாமி நிறுவனம் என்றும் கூறப்படு கிறது. இது குறித்து 2010-ம் ஆண்டே போலீஸ் கமிஷனரிடம் புகார் கொடுத்துவிட்டு வெளியே வந்த போது எங்களை கடத்திச் சென்று சிட்டிபாபுவின் வீட்டில் வைத்து மிரட்டினார்கள். இதில் தலையிடக்கூடாது. தலையிட்டால் விபரீதம் ஏற்படும் என்று எச்சரித்தனர். இதனால் பயந்துபோய் புகாரை வலியுறுத்தவில்லை. மேலும் அறங்காவலர் வீடுகள் மீது ரவுடிகள் தாக்குதல் நடத்தி மிரட்டினார்கள். மேலும் இந்த சொத்து கருணாநிதியின் குடும்பத்திற்குத்தான் சென்றுள்ளது. முதல்வர் உதவி இல்லாமல் இவ்வளவு பெரிய மோசடி நடந்திருக்க முடியாது. மேலும் தாசில்தார், துணை தாசில்தார் ஆகியோருக்கு பெருந்தொகையை கொடுத்துவிட்டு இந்த மோசடியை செய்துள்ளனர். தற்போது அந்த நிலத்தை சுற்றி காம்பவுண்டு போடப்பட்டு, அடுக்கு மாடி குடியிருப்பு கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே இதனை தடுத்து நிலத்தை மீண்டும் அறக்கட்டளைக்கு கிடைக்க செய்ய வேண்டும். அத்துடன் இந்த மோசடியில் ஈடுபட்ட பரிதி இளம்வழுதியின் உதவியாளர் ககாரி, பரிதிஇளம்வழுதி, உதயநிதி ஸ்டாலின் மற்றும் அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்றும் அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இதுவரையிலும் நில அபகரிப்பு வழக்கில் கைதான தி.மு.க. புள்ளிகள்
ஜூன் 28: நில மோசடி வழக்கில், சேலம் மாநகராட்சி 9-வது வார்டு திமுக கவுன்சிலரும், மாநகராட்சி நிதிக் குழுத் தலைவருமான ஆட்டோ மாணிக்கம் (எ) ராமசாமி செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார்.
ஜூன்-29 : ரியல் எஸ்டேட் நிறுவனம் மூலம் நில மோசடி செய்தது தொடர்பாக கோவையைச் சேர்ந்த ஆனந்த் என்கிற ஆனந்தன் என்பவரைக் கைது செய்தனர். இவர் முன்னாள் திமுக எம்.எல்.ஏ. சொக்கம்புதூர் இளங்கோவனின் மகன் ஆவார். மேலும் தற்போது தி.மு.க.வின் கோவை மாவட்ட பஞ்சாயத்து துணைத் தலைவராக உள்ளதும் தெரியவந்தது.
கொடைக்கானலில் திமுக நகராட்சித் தலைவர் உள்பட 3 பேரையும், சிவகங்கையில் 4 பேரையும் நில அபகரிப்புப் புகாரின் பேரில் போலீசார் கைது செய்துள்ளனர்.
ஜூலை 16 : ரூ.1 கோடி மதிப்புள்ள வீட்டை அபகரித்ததாக மத்திய அமைச்சர் அழகிரியின் ஆதரவாளர் என்று கூறப்படும் அட்டாக் பாண்டி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
ஜூலை, 26 - மதுரையில் நில மோசடியில் ஈடுபட்ட திமுக மாவட்டச் செயலாளர் கோ. தளபதி, பொட்டு சுரேஷ் உள்ளிட்ட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.
ஜூலை-27 - நில மோசடி வழக்கில் முன்னாள் பாமக எம்.எல்.ஏ. தமிழரசு கேரளாவில் வைத்துக் கைது செய்யப்பட்டார். பின்னர் அவர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம் அவரது தம்பி மகனும் 6 பேர் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான பாரப்பட்டி சுரேஷ்குமார், கவுசிக பூபதி ஆகியோர் உள்ளிட்ட 13 பேர் மீது அங்கம்மாள் காலனி நில அபகரிப்பு தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரிலும், சேலம் 5 ரோடு சென்னீஸ் கேட்வே ஹோட்டல் எதிரே உள்ள பிரிமியர் மில்ஸ் நிலம் அபகரித்து விற்பனை செய்யப்பட்டது தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில் முன்னாள் அமைச்சர் வீரபாண்டி ஆறுமுகம், தம்பி மகன் பாரப்பட்டி சுரேஷ்குமார், தி.மு.க. மாநகர துணை செயலாளர் அழகாபுரம் முரளி உள்ளிட்ட 13 பேர் மீதும் மாநகர மத்திய குற்றப் பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
ஜூலை. 30- நில மோசடி வழக்குத் தொடர்பாகத் திமுகவைச் சேர்ந்த ஆரணி முன்னாள் எம்.எல்.ஏ. ஆர்.சிவானந்தம் இரு மகன்களுடன் நீதிமன்றத்தில் நேற்று சரணடைந்தார்.
ஜூலை-30 - திருவல்லிக்கேணி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கைது! தென் சென்னை மாவட்ட திமுக செயலாளரும், திருவல்லிக்கேணி சட்டமன்ற தொகுதி திமுக எம்எல்ஏவுமான ஜெ.அன்பழகன் திருப்பூர் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளார். இவரும் நில மோசடி வழக்கிலேயே கைது செய்யப்பட்டுள்ளார். உடுமலைப்பேட்டையில் பல லட்சம் மதிப்புள்ள மில் ஒன்றை மிரட்டி குறைந்த விலைக்கு வாங்கியுள்ளதாக அவர் மீது புகார் தரப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.
ஜூலை-30 : சேலம் நிலவாரப்பட்டி நில அபகரிப்பு வழக்கில் வீரபாண்டி ஆறுமுகம் கைது!
இப்படி ஊர்தோறும் பந்தி வைப்பதுபோல் புகார்கள் முன்னாள் அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள், கட்சிக்கார்ர்கள் மீது கிளம்பி வந்து கொண்டிருக்கின்றன. புகார் கொடுப்பவர்களெல்லாம் எதிர்க்கட்சிக்காரர்களா? இல்லையே..? 90 சதவிகிதம் பொதுமக்கள்தான். பலரும் அப்பாவிகள்.. உலக நடப்பு தெரியாதவர்கள். சிலர் உயிருக்குப் பயந்தவர்கள்.. தங்களுக்காக இல்லையென்றாலும், தங்களது குடும்பத்துக்காக அதிகார வர்க்கத்தை எதிர்க்கத் துணியாமல் அமைதியாக இருந்தவர்கள்..!
மதுரையில் தி.மு.க.வின் முக்கியப் புள்ளிகள் நடத்திய அராஜகத்தின் ஒரு பகுதி பற்றி சென்ற வாரத்திய ஜூ.வி.யில்கூட பெயர் போடாமல் எழுதியிருக்கிறார்கள். வேறு வழி. அவமானப்பட்டவர்கள் மேலும் அவமானப்படுவார்களா என்ன..? இது போன்ற ரவுடிகளையெல்லாம் கட்சித் தொண்டர்கள், கட்சியின் தலைவர்களாக வைத்திருந்ததற்காக கருணாநிதிதான் வெட்கப்பட வேண்டும்..!
மதுரை வில்லாபுரத்தில் இருக்கும் மது தியேட்டர், வெற்றி தியேட்டராக கை மாறியதில்கூட தற்போது கைதாகியிருக்கும் மதுரையின் தி.மு.க. ரவுடிகளின் அராஜகம்தான் காரணம் என்று நேற்று மதுரையில் இருந்து போன் செய்த வலையுலக வாசகர் ஒருவர் தெரிவித்தார். அந்த தியேட்டரின் முன்னாள் உரிமையாளர் பற்றிய உண்மைகளை நான் சொல்ல.. அந்தத் தியேட்டர் கை மாறியபோது நடந்த நிகழ்வுகளை பற்றி அவர் சொல்ல.. எனக்குத் திக்கென்றானது.
இப்போதுதான் மதுரை மூச்சுவிட்டுக் கொண்டிருக்கிறது என்கிறார்கள் மதுரையில் உள்ள நண்பர்கள். தி.மு.க. ஆட்சியில் எந்த போலீஸ் ஸ்டேஷனுக்கு போனாலும் தி.மு.க. கட்சிக்காரனுக்கு எதிராக ஒரு புகாரைகூட பதிவு செய்ய முடியாது. கோர்ட்டிற்கு போய் ஆர்டர் வாங்கி வந்துதான் எஃப்.ஐ.ஆர். பதிவு செய்ய வேண்டியிருந்த்து என்றார் ஒரு மதுரை வக்கீல் நண்பர்..! இவர்களெல்லாம் இந்த அளவுக்கு ஆட்டம் போட இடம் கொடுத்த்து கருணாநிதியின் மகன். அந்த மகன் இளவரசாக வலம் வர இடம் கொடுத்தவர் கருணாநிதி. ஆக மொத்தம், கோவை பொதுக்குழுவில் அவரே சொன்னதுபோல தி.மு.க.வின் இந்த்த் தோல்விக்கு கருணாநிதியேதான் காரணம்..
இன்றைக்கு நடந்த ஆர்ப்பாட்டத்தில் தி.மு.க.வினர் கூட்டம் எதிர்பார்த்த்தைவிட அதிகமாக இருந்ததாக உளவுத்துறை ஆத்தாவிடம் அறிக்கை கொடுத்திருக்கிறதாம். வழக்கமாக காங்கிரஸ்காரர்கள் மட்டும்தான் ஜெயில் என்றால் பயப்படுவார்கள். ஆனால் இப்போது தி.மு.க.வினரும் ஜெயில் என்றாலே, உச்சா போகும் நிலையில் இருக்கிறார்கள். எப்படியும் தத்தமது பலத்தைக் காட்டி நின்றால் மட்டுமே உள்ளே போகாமல் இருக்க முடியும் என்பதால் தங்களால் முடிந்த அளவுக்கு தொண்டர்களைத் திரட்டிக் கணக்குக் காண்பித்திருக்கிறார்கள் தி.மு.க.வின் இரண்டாம் கட்டத் தலைவர்கள்.
ஆனால் இது மக்களின் மனதில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்பதை அவர்கள் உணர வேண்டும். “ஆடுறவரைக்கும் ஆடிட்டு இப்போ அவங்களுக்கு அடி விழுந்தவுடனேயே ஐயோ, அம்மான்னு ஓடி வர்றாங்க பாருங்க..” என்ற டயலாக்குதான் தமிழகம் முழுக்கவே கட்சி சாராத பொதுமக்களின் கருத்தாக இருக்கிறது..!

மணிக்கணக்கில், நாள் கணக்கில் நின்று கொண்டே நிதியுதவிகளை வழங்கினேன் என்று ஓயாமல் சொல்லிக் கொண்டிருந்த ஸ்டாலின் அந்த நின்ற நேரத்தில் சில மணித்துளிகள் செவிமடுத்து தனது கட்சிக்கார்ர்களின் மீதான புகார்கள் மீது அக்கறை கொண்டு நீதி வழங்க ஆவண செய்திருந்தால் இன்றைக்கு அவர் மீதாவது லேசான ஒரு கரிசனம் மக்களுக்கு ஏற்பட்டிருக்கும்.
செய்ய வேண்டிய நேரத்தில் செய்ய வேண்டியதைச் செய்யாமல் விட்டுவிட்டு இன்றைக்கு செய்த தவறுகளுக்குத் தண்டனை கிடைக்கும் நேரத்தில் இது அராஜகம், தங்களது கட்சியினரை அழிக்கும் முயற்சி என்றெல்லாம் தி.மு.க.வினர் ஒப்பாரி வைப்பது காலம் கடந்த செயல். தி.மு.க.வை அழிக்க தற்போதைய நிலையில் ஜெயலலிதா தேவையே இல்லை. வாக்காளப் பெருமக்களே போதும்..!
காவல்துறையில் தொடுக்கப்படும் புகார்களில் சிக்கியிருக்கும் கட்சியினரை அப்புறப்படுத்தி, தன்னைச் சுற்றியிருக்கும் குடும்ப ஊழல் உறுப்பினர்களைத் துரத்தியடித்து தான் கைப்பற்றிய அண்ணாவின் தி.மு.க.வை, அவர்தம் உண்மையான தொண்டர்களிடம் சேர்ப்பித்தால் மட்டுமே வருங்காலத்தில் தி.மு.க. என்ற பெயரோடு கருணாநிதியின் பெயரும் நிலைத்திருக்கும்..!

ஆனால், இதையெல்லாம் விட்டுவிட்டு குற்றவாளிகளைக் காப்பாற்றும் விதமாகவே தி.மு.க.வின் தலைமை செயல்பட்டால் இந்த ஆர்ப்பாட்டம் ஒரு மோசடியாகவும், தி.மு.க. என்னும் அமைப்புக்கே தானே குழி தோண்டியதாகவும் அமைந்துவிடும்..!
No comments:
Post a Comment