Monday, August 22, 2011

ஜெயலலிதா உண்மையில் புரட்சித்தலைவிதான்

ஜெயலலிதா உண்மையில் புரட்சித்தலைவி;



ஜெயலலிதா உண்மையில் புரட்சித்தலைவிதான்.கலைஞர் 5 முறை முதல்வராக இருந்தபோது செய்ய துணியாத காரியத்தை ஜெயலலிதா முதல்வராக பொறுப்பேற்ற் இந்த முறை செய்யப்போகிறார்..ஆம்.தமிழகத்தில் பல கிராமங்களில் ஜாதி பெயர் அடையாளத்துடன் அழைக்கப்படும் ஊர்களின் பெயரை அழகு தமிழில் மாற்ற முடிவு செய்துள்ளார்.இதையும் அவர் இஷ்டப்படி வைக்கபோவதில்லை.அந்தந்த ஊர் பெரியவர்கள்,தலைவர்கள்,இளைஞர்கள் கூடி முடிவெடுக்கப்போகிறார்களாம்.நல்ல விசயம்தான்.

.இனி செட்டிபட்டி,கவுண்டம்பாளையம்,மேட்டு நாசுவம்பாளையம்,பெரிய நாயக்கன்பாளையம்,நாயுடுபுரம்,பள்ளனூர்,பள்ளபாளையம் என தமிழகம் முழுக்க எத்தனை எத்தனை ஜாதி பெயர் தாங்கிய ஊர்கள்..?அத்தனையும் இனி தமிழில் மாறுவது உண்மையில் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று.


கலைஞரின் பல்டி;
புதிய சட்டமன்ற கட்டிடம் மருத்துவமனையாக மாற்றப்படும் என சொன்னதும்,முதலில் வரவேற்றவர் முன்னாள் முதல்வர் கருணாநிதிதான்...உடனே பல்டியடித்து இரண்டு நாட்களாக ,அதையெப்படி மாற்றலாம் ..?மக்கள் வரிப்பணம் வீணாகிறதே என கண்ணீர் விடுகிறார்.தமிழக அரசை இத்தனை கோடி கடனில் தவிக்கவிட்டுவிட்டு,1000 கோடி மக்கள் பணத்தை வீணடித்து,சொகுசாக சட்டமன்றம் கட்டினீரே அப்போது தெரியவில்லையா மக்கள் வரிப்பணம் வீணாகிறது என்று..?

இன்று ஜெயலலிதா பழைய சட்டமன்றத்தில் ஆட்சி செய்கிறாரே அவரால் மட்டும் எப்படி முடிந்தது..?நாம்தான் இனி நிரந்தர முதல்வர் என நினைத்து சொகுசாக கட்டிக்கொண்டீர்...மக்களுக்கு சேவை செய்ய மருத்துவமனையாக வாவது மாறுகிறதே என சந்தோசப்படுங்கள்.நீங்களாக இருந்தால் நண்பர்கள் பூங்கா என பெயர் வைத்து லவ்வர்ஸ்க்கு வாடகைக்கு விட்ருப்பீங்க..


ஸ்டாலின் தவிப்பு;

ஸ்டாலின் பாவம் ரொம்ப முழக்கமிடுகிறார்...அவர் பேச்சு எதுவும் ஸ்வாரஸ்யம் இல்லாமல் பத்திரிக்கைகளில் நான்காம் பக்கத்தில் மூன்றாம் கால செய்திதான் ஆகிறது.சமச்சீர்கல்வி போன்று சட்டமன்ற கட்டிடத்திற்கும் தீர்ப்பு கிடைக்குமாம்.இதென்ன அவ்வளவு தலை போகிற வழக்கா..?ஒய்யார கொண்டையாம்..உள்ளே இருக்குமாம்.ஈரும் பேனும் என்பது போல சமச்சீர் என பெயர்தான் கவர்ச்சியாக இருக்கிறது...எங்கள் பக்கத்துவீட்டு குழந்தை 2 ஆம் வகுப்பு பாட புத்தகத்தை ஒரு வாரத்தில் படித்துமுடித்துவிட்டது..பின்னே அ,ஆ, மட்டும்தான் இருக்காம்.இவ்வளவுதான் தமிழ் புக்.இதுக்கு எத்தனை பில்டப்.மீதியெல்லாம் கலைஞர் அய்யா ரொம்ப நல்லவர் என்ற ரீதியான பாடம்தான்.

உயிர் பிச்சை கேட்கவில்லை;



வைகோ அவர்கள் சாந்தன்,முருகன்,பேரறிவாளனுக்காக போராடி வருகிறார்.ஜெயலலிதா இவர்களுக்கான தூக்கு தண்டனையை அமல்படுத்த உத்தரவிடமாட்டார் என்றே நினைக்கிறேன்.அவருக்கு ஈழத்தமிழர்கள் மத்தியில் ஏற்பட்டிருக்கும் நல்ல பெயரை உடனே கெடுத்துக்கொள்ள விரும்ப மாட்டார்.அதனால் வைகோ,சீமான் போன்றோர் முதல்வரை சந்தித்து,வேண்டுகோள் விடுக்க வேண்டும்.வைகோ ஜெ..மீதான தன் கோபத்தை மறந்து அந்த மூன்று தமிழர்களுக்காக பணிவதில் தவறில்லை.


சீமான் சொல்லும் விசயம் கவனிக்க வேண்டியது..ஜெ..ஈழத்தமிழர்களுக்காக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு கிடைத்த வரவேற்பையும்,ஈழ மக்களுக்காக போராடும் தலைவர்களின் ஒற்றுமையை உடைக்கவும்,கலைஞர் ஆட்சியில் கொடுக்காத தூக்கு தண்டனை உத்தரவை காங்கிரஸ் மத்திய அரசு இப்போது அமல்படுத்தியிருக்கிறது.இதில் சூழ்ச்சி இருக்கிறது என்கிறார்.இதுவும் ஒரு வகையில் உண்மைதான்.


அன்னாஹசாரே.. காமெடியனா..மக்கள் தலைவரா..?


அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதா போராட்டத்தில் வெற்றி பெறுவாரா என எனக்கு சந்தேகம்.பிரதமரை இந்த மசோதா வரம்பில் சேர்த்துவிட்டால் நம் ஆட்டம் க்ளோஸ் என காங்கிரஸ் நினைக்கும்வரை இந்த மசோதாவுக்கு எப்படி ஒத்து வரும்..?முடிந்தவரை பேச்சு வார்த்தை என்பார்கள்.அப்படியே இழுத்தடித்து,மறக்கடிப்பார்கள்.பிரதமர் மன்மோகன் சிங் இன்று கொடுத்த அறிக்கையை பாருங்கள்.நியாயமான பேச்சுவார்த்தைக்கு தயாராம்..இதில் தெரிகிறது இவர்கள் நடுக்கம்.அன்னா ஹசாரே கறுப்பு பணத்திற்கு எதிராகவும் போராட வேண்டும்.அப்போதுதான் அன்னா பின்னால்’’ எந்த தலையும் இல்லை என்பது நாட்டு மக்களுக்கு உறுதியாகும்.அதை விட்டுவிட்டு,இந்தியன் தாத்தா வேற போராட்டம் அறிவிச்சா,அன்னா காமெடியன் ஆகிவிடுவார்.


 

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...