சினிமாவில் யானை துதிக்கையை மேல் தூக்கிப் பிளிறினால் “புவ்வாய்ய்ங்.. புவ்வாய்ய்ங்” என்று பின்னணி ஊதுவார்கள். டில்லி சுதந்திர/குடியரசு விழாக்களில் ராணுவ வீரர்கள் இதை (bugle?)ஊதிக்கொண்டு ”லெப்ட் ரைட்” போட்டு நடப்பார்கள். இதற்க்குத்தான் ட்ரம்பெட்(Trumpet) என்னும் இசைக்கருவி என்பது என் பள்ளி வயது அறிவு.
மன்னர்கள் காலத்தில் போர் அறிவிக்க இதை(துந்துபி) கோட்டையின் மீது நின்று ஊதுவதைப் பார்த்திருக்கிறேன்(படம் &சினிமா).
இதில் (ராணுவ & போலீஸ்)மிடுக்கு மற்றும் ராயல்னெஸ் உணர்ச்சிகளை கொடுக்க தோதுவாக இருக்கிறது.
இந்தக் கருவி மேல் நாட்டு ஜாஸ் இசையில் நிறைய பயன்படுத்தப்படுகிறது.வேறு வகை இசைகளிலும் இது உண்டு.அருமையான இசைக்கோர்ப்புகளும் நெட்டில் இருக்கிறது.
இந்திய சினிமாவைப் பொறுத்தவரை இது பெரும்பாலும்
கொண்டாட்ட மனநிலைக்குத்தான் பயன்படுத்தப்பட்டுள்ளது.
கேளிக்கைப் பார்ட்டி,அஜால் குஜால்,கலாய்த்தல் போன்றவை.
இளையராஜாவும் விதிவிலக்கு அல்ல. உதாரணமாக சொர்க்கம் மதுவிலே,ஆசை நூறு,பள்ளியறைக்குள்,ஆகாயம் மேலே,வா வா பக்கம்,இளமை இதோ,தண்ணீ கொஞ்சம்,கொம்புல பூவ...........
(இந்திய சினிமா கிளப் டான்ஸ் பாடல்களில் ஒருவர் சாக்ஸ்போனை மகுடி போல் ஊத ஒரு மங்கை அரைகுறை ஆடையில் அங்கங்களை குலுக்கி அதற்கேற்றார் போல் நெளிந்து ஆடுவார்)
விதி விலக்காக மேஸ்ட்ரோ கோபம் மற்றும் தாபம்/சோக உணர்ச்சிகளுக்கு அற்புதமாக இசைத்துள்ளார். என்னடி மீனாட்சி மற்றும் மன்றம் வந்த தென்றல்,தினம் தினம்(பயம்?),அஞ்சலி இன்னும் சில பாடல்கள் உள்ளது.
கொண்டாட்ட மனநிலை பாடல்களிலும் இது வித்தியாசமாக ஒலிக்கிறது.

வழக்கமாக ராஜா இதை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் சென்றிருக்கிறார். மற்ற இசைக்கருவி நாதங்களுடன் இதைத் தொடுத்து வித்தியாசமாகக் கொடுப்பது.
சம்பிரதாயமாக ”பொய்ங்ங்” என்று ஊதிவிட்டு போகாமல்
சிக்கலாக கோர்த்து பிரமிக்க வைக்கிறார்.
கிழ் வரும் ஒவ்வொரு இசை துண்டும் ஒவ்வொரு ரகம்.எல்லாமே சிறப்பு வாய்ந்தது.

SAXOPHONE |
No comments:
Post a Comment