Monday, August 22, 2011

ஹிட்லரும், கருணாநிதியும்!

கல்வித்துறை விவாதத்தின்போது, அமைச்சர் சண்முகம் குறிப்பிட்டதாவது: நாடகத் தமிழை வளர்த்தவர்கள் என, அண்ணாதுரையையும், கருணாநிதியையும் பாடப் புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளனர்.


 எம்.ஆர்.ராதா, சிவாஜி கணேசன் போன்றவர்கள் எல்லாம் நாடகத் தமிழை வளர்க்கவில்லையா? கருணாநிதியை கைது செய்தபோது, "அய்யய்யோ' என கத்துவார். அது கூட சிறந்த நடிப்பாகத் தான் இருக்கும் என, இப்போது நினைக்கிறேன். அதனால் தான், தன்னை நாடகத் தமிழை வளர்த்தவர் என, அவரே கூறிக் கொண்டிருக்கிறார்.ஹிட்லரைப்போல், பாசிச வெறியை மெல்ல, மெல்ல பாடப் புத்தகங்களில் பரப்பும் வேலையைத் தான் கருணாநிதி செய்தார். தி.மு.க.,வின் தோற்றம் குறித்து கேள்வி எழுப்பி, அதற்கு விடை அளித்துள்ளனர். பல இடங்களில் கட்சியையும், தங்களைப்பற்றியும் சேர்த்துள்ளனர். சமச்சீர் கல்வி திட்டத்தால், சிறுபான்மை பிரிவைச் சேர்ந்த மாணவர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழை ஒரு கட்டாய பாடமாக படிக்கும் சட்டத்தை, 2006ல் கொண்டு வந்தனர். அதன்படி, இந்த ஆண்டு ஆறாம் வகுப்பிற்கு வருகிறது.
ஆனால், ஒரே நேரத்தில் பத்தாம் வகுப்பு வரை சமச்சீர் கல்வி திட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், ஏழாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை சிறுபான்மை மொழியில் பயிலும் மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். திடீரென, தமிழ் பாடத்தை படிக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அமைச்சர் கூறினார்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...