Monday, February 29, 2016

உங்களுக்கு சொத்தைப் பல் இருக்கா? அதை வீட்டிலேயே ஈஸியா சரிசெய்யலாம்!!!

கண்டிப்பாக ஒவ்வொருவரும் பல் சொத்தை பிரச்சனையை சந்தித்திருப்போம். பற்களில் சொத்தை ஏற்படுவதற்கு முக்கிய காரணம் இனிப்புப் பொருட்களை அதிகமாக சாப்பிடுவதும், எந்த ஒரு உணவுப் பொருளை உட்கொண்ட பின்னரும் வாயை நீரில் கொப்பளிக்காமல் இருப்பதும் தான். பற்களில் உள்ள மஞ்சள் கறைகளைப் போக்கும் சில எளிய வழிகள்!!! இதனால் பாக்டீரியாக்கள் பற்களை சொத்தையாக்கிவிடும். இப்படி சொத்தையான பற்களை ஆரம்பத்திலேயே கவனிக்காமல் விட்டால், பற்களில் பெரிய ஓட்டை உருவாகி, நாளடைவில் ஈறுகளில் நோய்த்தொற்றுகள் ஏற்பட்டு, அதுவே பல பிரச்சனைகளை உண்டாக்கிவிடும். அதற்காக சொத்தைப் பற்களை பிடுங்கி எடுக்க வேண்டும் என்பதில்லை. பற்களின் பின்னால் உள்ள கறைகளைப் போக்குவதற்கான எளிய வழிகள்!!! உண்ணும் உணவில் ஒருசில மாற்றங்களுடன், அன்றாடம் ஒருசில பொருட்களைக் கொண்டு பற்களைப் பராமரித்து வந்தால், சொத்தைத் தடுக்கலாம்.
1=ஆயில் புல்லிங்
~~~~~~~~~~~~~~~~~
ஆயில் புல்லிங் என்பது தினமும் காலையில் நல்லெண்ணெயை வாயில் ஊற்றி, 10 நிமிடம் வாயினுள் வைத்து கொப்பளிக்க வேண்டும். இப்படி செய்வதால், வாயில் உள்ள அனைத்து பாக்டீரியாக்களும் வெளியேறி, வாயின் ஆரோக்கியம் மேம்படும். குறிப்பாக இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் உருவாவதைத் தடுக்கலாம்,
2=கிராம்பு
~~~~~~~~~~~~~
2-3 துளிகள் கிராம்பு எண்ணெயை 1/4 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெயுடன் கலந்து, காட்டனில் அந்த எண்ணெயை தொட்டு, இரவில் படுக்கும் போது அந்த காட்டானை சொத்தைப் பல் உள்ள இடத்தில் வைத்து தூங்க வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், சொத்தைப் பற்கள் விரைவில் குணமாகும்,
3=உப்பு தண்ணீர்
~~~~~~~~~~~~~~~~~~~
அன்றாடம் காலையில் வெதுவெதுப்பான நீரில் உப்பு கலந்து, பற்களை துலக்கம் முன் அதனை வாயில் ஊற்றி 1 நிமிடம் வாயைக் கொப்பளிக்க வேண்டும். இப்படி தினமும் மூன்று வேளையும் உணவு உண்பதற்கு முன் செய்து வந்தால், பல் சொத்தையில் இருந்து விடுபடலாம்,
4=பூண்டு
~~~~~~~~~~~
3-4 பற்கள் பூண்டை தட்டை, அதில் 1/4 டீஸ்பூன் உப்பு சேர்த்து, அக்கலவையை பாதிக்கப்பட்ட பற்களின் மீது வைத்து 10 நிமிடம் கழித்து, அக்கலவையை சொத்தைப் பல்லின் மீது அழுத்தவும், இப்படி தினமும் 2 முறை செய்து வந்தால், சொத்தைப் பற்களை உருவாக்கிய பாக்டீரியாக்கள் அழிக்கப்பட்டு வெளியேற்றப்பட்டு, நாளடைவில் சொத்தைப் பற்களை போக்கிவிடும்,
5=மஞ்சள்
~~~~~~~~~~~~~
மஞ்சள் தூளை பாதிக்கப்பட்ட பற்களில் தடவி 5 நிமிடம் கழித்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இது சிறந்த கிருமிநாசினியாக செயல்பட்டு, கிருமிகளை அழித்துவிடும்,
6=வேப்பிலை
~~~~~~~~~~~~~~
வேப்பிலை சாற்றினை சொத்தைப் பற்களின் மீது தடவி 10 நிமிடம் ஊற வைத்து, பின் வெதுவெதுப்பான நீரில் வாயை கொப்பளிக்க வேண்டும். முடிந்தால் தினமும் வேப்பங்குச்சி கொண்டு பற்களை துலக்கி வந்தாலும், சொத்தைப் பற்களைப் ,
7=உணவுமுறைகளில் மாற்றம்
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சொத்தைப் பற்கள் உருவாவதற்கு போதிய கனிமச்சத்துக்கள் நிறைந்த உணவுகளை உண்ணாமல் இருப்பது மற்றும் கொழுப்பில் கரையாத வைட்டமின்களான ஏ, டி, ஈ, கே போன்றவற்றின் குறைபாடு மற்றும் சில ஊட்டச்சத்துக்கள் குறைவாக இருப்பது தான் காரணம். இதற்கு சரியான தீர்வு, நல்ல சத்துக்கள் நிறைந்த உணவுப் பொருட்களை அன்றாடம் உட்கொண்டு வர வேண்டும்.
8=சர்க்கரையைத் தவிர்க்கவும் 
~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~
சுத்திரிக்கரிக்கப்பட்ட சர்க்கரை கலந்த உணவுகளை உட்கொண்டால், கெட்ட பாக்டீரியாக்களின் வளர்ச்சி அதிகரித்து, அதனால் பற்களில் சொத்தையும் அதிகரிக்கும். உணவுகளில் இனிப்பு வேண்டுமானால், தேனைக் கலந்து கொள்ளலாம்.

ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர்,

பட்டா: ஒரு நிலம் இன்னார் பெயரில் உள்ளது என்பதை குறிக்கும் வகையில் வருவாய்துறை அளிக்கும் சான்றிதழ்.
சிட்டா: குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடையகட்டுபாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
அடங்கல்: நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்த பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த்துறை ஆவணம்.
கிராம நத்தம்: ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்பு பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.
கிராம தானம்: கிராமத்தின் பொது பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.
தேவதானம்: கோவில் பயன்பாட்டுக்காக குறிப்பிட்ட நிலத்தை தானமாக அளித்தல்.
இனாம்தார்: பொது நோக்கத்துக்காக தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்க பயன்படுத்தும் சொல்.
விஸ்தீரணம்: நிலத்தின் பரப்பளவு. எல்லைகளை குறிப்பது.
ஷரத்து: பிரிவு.
இலாகா: துறை.
வில்லங்க சான்று: ஒருநிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்து கொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.
புல எண்: நில அளவை எண்.
இறங்குரிமை: வாரிசுரிமை.
தாய்பத்திரம்: ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தய பரிவர்த்தன ஆவணங்கள்.
ஏற்றது ஆற்றுதல்: குறித்தவகை பொறுப்பை நிறைவற்றுவதற்கு உறுதி அளித்தல்.
அனுபவ பாத்தியதை: நிலத்தை பயன்படுதிகொள்ளும் உரிமை.
சுவாதீனம் ஒப்படைப்பு: நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.
ஜமாபந்தி: வருவாய் தீர்வாயம்.
நன்செய்நிலம்: அதிக பாசன வசதி கொண்டநிலம்.
புன்செய்நிலம்: பாசன தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.
குத்தகை: ஒரு நிலத்தை பயன்படுத்தும் உரிமையை குறிப்பிட்ட காலத்துக்கு சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

எங்கள் இனம் காக்க தவறிய உங்களுக்கே எங்கள் வாக்கு.

கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் வேண்டுமென்றே நழுவ விட்டு
40 எம். பி. க்களை வைத்திருந்தும்....மத்தியிலே ஆட்சியில் பங்கிருந்தும்...ஒற்றை கல்லை கூட தூக்கி போடாத தலைவா உங்களுக்கே எங்கள் வாக்கு.




வயதான நோயாளியான அப்பாவியான பார்வதி அம்மாவை எங்கள் தலைவனின் தாய் என்ற ஒற்றை காரணத்திற்காக சிகிச்சை கொடுக்காமல் திருப்பி அனுப்பி கொன்றீர்களே நிச்சயமாக உங்களுக்கே எங்கள் வாக்கு.
.
முள்ளிவாய்க்கால் இன அழிப்பில் எங்கள் இனம் கதறி கதறி ஓலமிட முக்காடு போட்டு கொண்டு முதுகு வலி நாடகமாடிய தமிழின் தலைவா உங்களுக்கு தான் எங்கள் வாக்கு.
.
எம் இனமே அழிந்து புதைந்து சாம்பலான பின் ...9க்கு 1 என கூட்டணி பேரம் பேசிய கர்ண பெருமானே உங்களுக்கே எங்கள் வாக்கு.
வாக்குறுதிகள் மறந்து போனாலும் மறக்காமல் வாக்கு கேட்டு வருவகின்ற அறிவின் சிகரமே உங்களுக்கே எங்கள் வாக்கு.
.
எங்கள் பெண்கள் சிதைக்கப்பட்ட பொழுதோ கொன்றபின் சிதைக்கப்பட்ட பொழுதோ எள்ளளவும் கலங்காது சோனியாவோடு கும்மி அடித்து சேர்ந்து தாளம் போட்டு எங்கள் இனத்தை கொன்ற பொழுது கலங்காத விழிகள்..கனிமொழி ஜி 2ஜி வழக்கில் கைதான பொழுது கதறி கதறி அழுதனவே.. உங்கள் ஈர விழிகளுக்கும் கனிந்த அன்புக்கும் தாய்க்கு தாயான தலைவா... உங்களுக்கே எங்கள் வாக்கு.
.
.எமக்காக போராடிய உறவுகளை சிறையில் அடைத்த பெரியவரே உங்களுக்கே எங்கள் வாக்கு.
.
இனத்தை கச்சிதமாக அழித்துமுடித்துவிட்டு...அதே இனத்தின் நலன்காக்க "காங்கிரஸின் கூட்டணியில் இருந்து விலகி"......இன்று மிச்சம் மீதி இனத்தவரையும் கருவறுக்க கை பிடித்து உலா வர துடிக்கும் நடிகர் திலகமே உங்களுக்கே எங்கள் வாக்கு.
அது சரி எதற்கு வாக்கு என யாருமே கேட்கவில்லையே? அதை எதற்கு இங்கு.. ?? நிச்சயமாக தேர்தலில் வாக்களிக்க என எவரும் மறந்தும் நினைத்து வாக்களித்து தமிழர்க்கு துரோகம் இளைத்து விடாதீர்கள்.

ஆஸ்துமாவை விரட்டும் வெல்லம்

ரத்த சோகைக்கு தீர்வு நம் வீட்டு சமையல் அறையிலேயே இருக்கிறது என்பது ஆச்சரியமாக இருக்கிறதா? ஆம், வெல்லத்தில் இரும்புச் சத்து அதிகம் இருப்பதால் ரத்த சோகைக்கு மிகவும் நல்லது. தவிர இதிலுள்ள சத்துக்கள் பொட்டாஷியம், சோடியம், கால்ஷியம், பாஸ்பரஸ், மற்றும் ஜின்க் ஆகும். வெல்லத்தில் மினரல்ஸும் அதிகம் இருப்பதால் சத்துணவாக இது அமைந்துள்ளது. இதில் மேக்னிஷியம் இருப்பதால் நரம்பு மண்டலத்தை உறுதிப்படுத்தும், தசைகளை ரிலாக்ஸ் செய்யும்
எலுமிச்சைச் சாறு பிழிந்து அதில் வெல்லத்தை தட்டிப் போட்டு பருகினால் உடனடியாக சோர்வு நீங்கி உடல் புத்துணர்ச்சி அடையும். பொதுவாக அஸ்கா சர்க்கரை உட்கொள்ளும்போது அதிலுள்ள சத்துப் பொருட்கள் உடனடியாக உடலில் சேர்ந்துவிடும். ஆனால் வெல்லம் சத்துக்களை உடலில் தேக்கி வைத்து தேவைப்ப்டும் போது தகுந்த பயனை அளிக்கும்.
சித்த மருத்துவத்தில் சில வியாதிகளுக்கு மருந்து தயாரிக்க வெல்லத்தைப் பயன்படுத்துவார்கள்.
பெண்களுக்கு மாதவிடாய் பிரச்சனையின் போது உடல் சோர்வாகவும், காரணமின்றி படபடப்பாகவும் இருக்கும். சிலருக்கு தலைசுற்றலும் இருக்கும் அந்நிலையில் வெல்லம் சாப்பிட சரியாகிவிடும்.
ஒவ்வாமையால் ஏற்படும் ஆஸ்துமா நோய்க்கு வெல்லம் ஒரு வரப்பிரசாதம். வெல்லம் ஒரு ஆன்டி அலர்ஜிக் என்று பலருக்கும் தெரியாது

நண்பர்களுக்கும் பகிர்ந்து உதவுங்கள்...

ஒரு முக்கிய தகவல்
வேலை தேடும்
நண்பர்களுக்கு ஓர்
தகவல் !!
வேலை தேடுவதற்கு
உதவும்
இணையதளங்களை
கொடுத்துள்ளோம்.
இந்த
தளங்களில் உங்கள்
தகவல்களை பதிவு
செய்து உங்கள்
தகுதிக்கும்
திறமைக்கும் உரிய
வேலையை பெற்று
வாழ்வில்
வெற்றி பெற
வாழ்த்துகள்....
www.facebook.com/karaikall (GLUF JOBS)
www.careerbuilder.co.in
www.clickjobs.com
www.placementpoint.com
www.careerpointplacement.com
www.glassdoor.co.in
www.indtherightjob.com
www.employmentguide.com
www.JOBSTREET.com
www.JOBSDB.COM
www.AE.TIMESJOBS.COM
www.NAUKRIGULF.COM
www.NAUKRI.COM
www.GULFTALENT.COM
www.BAYAT.COM
www.MONSTER.COM
www.VELAI.NET
www.CAREESMA.COM
www.SHINE.COM
www.fresherslive.com
www.jobsahead.com
www.BABAJOBS.com
www.WISDOM.COM
www.indeed.co.in
www.sarkarinaukriblog.com
www.jobsindubai.com
www.jobswitch.in
www.jobs.oneindia.com
www.freshersworld.com
www.freejobalert.com
www.recruitmentnews.in
www.firstnaukri.com
www.freshnaukri.com
www.mysarkarinaukri.com
www.freshindiajobs.com
www.freshersopenings.in
www.freshersrecruitment.in
www.chennaifreshersjobs.com
அரசு வேலைகள்
பற்றி அறிந்துகொள்ள::

www.govtjobs.allindiajobs.in
www.timesjobs.com
www.naukri.com
www.tngovernmentjobs.in
www.sarkariexam.co.in
www.govtjobs.net.in
www.indgovtjobs.in
இந்த
பதிவை வேலை தேடும்
உங்கள்
நண்பர்களுக்கும்
பகிர்ந்து உதவுங்கள்...

இப்படிப்பட்ட நிகழ்வை எந்த ஒரு பத்திரிக்கையிலும் செய்தியாகக் கூட வெளியிடவில்லை

பிரதமர் மோடி அவர்களின் தாயார் ஹிரபா அவர்களுக்கு நேற்று முன்தினம் மாலை உடல்நிலை சரியில்லாததால்...
"108 ஆம்புலன்ஸில் கொண்டு செல்லப்பட்டு காந்திநகர் அரசுமருத்துவமனையில்" சேர்க்கப்பட்டு சிகிச்சைக்கு பின் இரவு வீடு திரும்பினார் .
இன்று கவுன்சிலர் கூட நூற்று கணக்கில் செலவாகும் மருத்துவத்திற்க்கு கூட பல லட்சங்கள் வாங்கும் அப்போலோ மற்றும் அமெரிக்க மருத்துவமனை என சிகிச்சைக்கு செல்லும் இன்றைய காலகட்டத்தில்....
பிரதமரின் தாயார் அரசுமருத்துவமனைக்கு சாதாரண ஆம்புலென்ஸில் செல்லவேண்டியுள்ளது. இந்த நிகழ்வை பார்க்கும் போது பெருந்தலைவர் காமராஜர் ஐயா அவர்கள் தான் நினைவுக்கு வருகிறார்.
ஆனால் இப்படிப்பட்ட நிகழ்வை எந்த ஒரு பத்திரிக்கையிலும் செய்தியாகக் கூட வெளியிடவில்லை.
ஒருவேளை யாராவது ஒரு நடிகை குளியலறையில் வழுக்கி விழுந்திருந்தால் புகைப்படத்துடன் செய்தி வெளியிட்டு வியாபாரமாக்கியிருப்பார்கள்.

ஆயுர்வேதம் மற்றும் சித்த மருத்துவம்.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம் என்ற பழமொழி உண்டு. இந்த பழமொழியின் பொருளை நோயின் பாதிப்பினால் தினமும் மருந்து மாத்திரைகளுடன் அவதியுறுபவர்கள் நன்கு உணர்வார்கள்.
னித உடலானது எண்ணற்ற தசை, தமனி, எலும்பு, நரம்புகளால் பின்னிப் பிணையப்பட்ட ஒரு உருவமாகும். உடலின் செயல்பாடுகள் அனைத்தும் வாத, பித்த, கபம் என்னும் முக்குற்றங்களால் செயல்படுகிறது. இதில் ஏதேனும் ஒன்றின் ஆதிக்கம் அதிகரித்தாலோ, குறைந்தாலோ அது நோயாக மாறிவிடுகிறது. இதற்கு ஆதாரமாக செயல்படுபவை தச வாயுக்கள்தான். இவற்றின் செயல்பாடுகளில் சீற்றம் கண்டால் அவை உடலைப் பாதிக்க ஆரம்பிக்கும். பொதுவாக மனிதனுக்கு நோய் ஏற்படக் காரணம் உண்ணும் உணவும், மன பாதிப்பும்தான்.
நம் முன்னோர்கள் நோயின்றி நீண்ட ஆயுளுடன் வாழ்ந்தார்கள். அதற்குக் காரணம் அவர்கள் உடலுக்கும், மூளைக்கும் சமமாக போதிய அளவு வேலை கொடுத்தார்கள். ஆனால் இன்று மூளைக்கு மட்டுமே அசுர வேலை கொடுக்கப்படுகிறது. உடல் அசைவின்றி ஒரே இடத்தில் அமர்ந்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். இயந்திர மனிதர்கள் போல் மாறிவிட்டனர். உணவைக்கூட மறந்து இயங்குபவர்களுக்கு உடற்பயிற்சி என்ற வார்த்தையே மறந்து போய்விட்டது.
நோய்கள் என்றால் நீரிழிவு, இரத்த அழுத்தம், இதயநோய் என்ற பெரிய நோய்கள் மட்டுமல்ல. நம் வேலையை சற்று ஸ்தம்பிக்கச்செய்து உடலைக் கஷ்டப்படுத்தும் அனைத்துமே நோய்கள்தான்.
அப்படிப்பட்ட நோய்களில் அனேக மக்களை வாட்டிவதைக்கும் நோய்தான் கால் மூட்டுவலி.
இந்த நோய் நடக்க இயலாமல் செய்வதுடன் பயங்கரமான வலியை உண்டாக்கும். சிலருக்கு கால் மூட்டுகளில் வீக்கமும் வலியும் உண்டாகி இதனால் இவர்கள் சிறிது தூரம் கூட நடக்க முடியாமல் செய்துவிடும். மாடிப்படிகளில் ஏற முடியாது.
இதற்கு சிலர் மருந்துமாத்திரைகளை உட் கொண்டும், அறுவை சிகிச்சை செய்துகொண்டும், வருகின்றனர்.
மூட்டுவலி பெரிய நோய்களில் ஒன்றாகவே தற்போதைய காலக்கட்டத்தில் கருதப்படுகிறது.
மூட்டுவலி என்பது மூட்டுத் தேய் மானத்தால் மட்டும் வருவதல்ல. மலச் சிக்கலாலும் இது ஏற்படும்.
ஓதுகின்ற மலக்கட்டை ஒழியவைத்தால் …
என்ற சித்தர் பாடலில் மலச்சிக்கலால் கை, கால் மூட்டுகளில் வலி ஏற்பட வாய்ப்புண்டு எனக் கூறப்பட்டுள்ளது.
இந்த மூட்டுவலி வயதான ஆண், பெண் இருபாலரையும் பாதிக்கும். இது ஆயுர்வேத மருத்துவத்தில் சந்திவாதம் என்று அழைக்கப்படுகிறது.
முழங்காலில் உள்ள இணைப்பிலும், எலும்புகளுக்கிடையிலும் ஒருவித சவ்வு உள்ளது. இதற்கு கார்டிலேஜ் என்று பெயர் இந்த சவ்வுதான் மூட்டுகளின் அசைவிற்கு உதவுகிறது. இந்த சவ்வுகளில் வாய்வு சேர்ந்து அது வாத நீராக மாறி மூட்டு வலியை ஏற்படுத்துகிறது. அதோடு மட்டுமல்லாமல் குடல் அழற்சி, பித்த அதிகரிப்பு, பித்த எரிச்சல், நெஞ்செரிச்சல் இவைகளால் மூட்டு வலி உண்டாகும். பொதுவாக பெண்களுக்கு மாதவிலக்குக் காலங்களில் அதிக ஓய்வில்லாமல் வேலை செய்வதாலும், மாடிப்படிகளில் ஏறி இறங்குவதாலும் கூட மூட்டுகளில் பாதிப்பை ஏற்படுத்தும். மாதவிலக்கான பெண்களை பழங்காலத்தில் ஓரிடத்தில் அமரச் செய்து ஓய்வு கொடுத்ததன் அர்த்தம் தற்போது புரிகிறது.
தற்போதைய காலகட்டத்தில் சந்தர்ப்ப சூழ்நிலை, வேலைப்பளு, ஓய்வில்லாமல் உழைக்கும் பெண்களுக்கு அதிகம் மூட்டுவலி வருவதை நாம் காணமுடிகிறது.
கால் மூட்டுவலிக்கான அறிகுறிகள்.
காலையில் எழுந்தவுடன் தலைவைலி, தலைச்சுற்றல், மயக்கம், வாந்தி போன்றவை உண்டாகும். மலம் சீராக வெளியேறாமல் மலச்சிக்கல் ஏற்படும். உண்ட உணவு செரிமானம் ஆகாமல் அஜீரணக் கோளாறு ஏற்பட்டு வாயுத்தொல்லைகள் உண்டாகும். இதனால் பசியின்மை, நெஞ்சு எரிச்சல் உண்டாகும்.
கால் மூட்டுகளில் வீக்கம் உண்டாகி வலியை ஏற்படுத்தும். கால் நடுக்கம் ஏற்படும். சிறிது தூரம் நடந்தாலே மூட்டுகளில் வலி உண்டாகும். நாளடைவில் கால்களை மடக்கி உட்கார்ந்து எழுந்திருக்க முடியாமல் செய்துவிடும். மேலும் தோள்பட்டை வலி, முதுகுவலி, கழுத்து வலியும் ஏற்படும்.
மூட்டுவலி ஏற்படக் காரணம்
நேரத்திற்கு உணவு அருந்தாமை யாலும், நேரம் கழித்து உணவு அருந்துவதாலும் ஒரே நேரத்தில் அதிக உணவு உட்கொள்வதாலும் நீண்ட பட்டினி இருப்பதாலும், அஜீரணக் கோளாறு உண்டாகிறது. இதுபோல் இரவில் அதிக காரம், புளித்த தயிர் போன்றவற்றை சேர்த்துக் கொள்வதாலும், குடலில் உள்ள அபானவாயு சீற்றம் கொள்கிறது. பொதுவாக அபான வாயு கீழ்நோக்கி பாயும் குணம் கொண்டதாகும். ஆனால் அது சீற்றம் கொள்ளும்போது மேல்நோக்கி பாய்ந்து சிரசை அடைகிறது. அங்கிருந்து பின்கழுத்து வழியாக கீழ் இறங்கி உடலின் அனைத்துப் பாகங்களுக்கும் வேகமாகச் செல்கிறது. அப்போது கால் மூட்டுகளிலும், தசை நார்களிலும் செல்லும் வாய்வு அங்கேயே தங்கிவிடுகிறது. இந்த வாய்வு நீராக மாறி நரம்புகளை உலரவைத்து நீர் கோர்க்கச் செய்கிறது. இவ்வாறு சேரும் நீரானது, வாத நீர், பித்தநீர் இரண்டுடன் கலந்து மூட்டுகளில் சளியாக மாறி மூட்டுகளை வீங்கச் செய்கிறது. இதனால் வாத, பித்த, கப உடற்கூறுகளுக்கு ஏற்ப உலர்ந்தும், இறுகியும் தாங்க முடியாத வலியை உண்டு பண்ணி நடக்க இயலாமல் செய்யும்.
மூட்டுவலி ஏற்படாமல் தடுக்க
· நேரம் தவறாமல் சாப்பிட வேண்டும்.
· எளிதில் ஜீரணமாகக்கூடிய உணவுகளை உண்பது நல்லது.
· குறிப்பாக இரவு வேளைகளில் நாம் உட்கொள்ளும் உணவு மென்மையானதாகவும், எளிதில் செரிமானமாகக் கூடியதாகவும் இருக்க வேண்டும்.
· அரைவயிறு உணவே இரவில் நல்லது.
· நீண்ட பட்டினி, அதிகமான டீ, காபி, மது, புகை, போதை வஸ்துக்கள் இவைகளால் குடல் அலர்ஜி ஏற்பட்டு வாயு சீற்றமாகி அதுவே கால் மூட்டுவலியை உண்டாக்கும். இதனால் இவற்றை தவிர்ப்பது நல்லது.
· மலச்சிக்கலும் மனச்சிக்கலும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். இவை இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை. மலச் சிக்கலைத் தவிர்ப்பது நல்லது.
· அதிக உஷ்ணத்தையும், வாயுவையும் கொடுக்கும் உணவுகளைத் தவிர்க்க வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களை சாப்பிடக்கூடாது.
· அதிக புளிப்பு காரங்களைத் தவிர்ப்பது நல்லது.
கீரைகள், பழங்கள், காய் கறிகள், மூலிகை சூப் போன்றவற்றை அதிகம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
தினமும் 1/2 மணி நேரமாவது நடைப்பயிற்சி செய்வது நல்லது. கை, கால்களை நன்கு வீசி நடக்க வேண்டும். குறிப்பாக கணினி முன் அதிக நேரம் அமர்ந்து வேலை செய்பவர்கள் கட்டாயம் நடைப்பயிற்சி செய்யவேண்டும்.
கால் மூட்டுவலிக்கு அறுவை சிகிச்சை முறையில் முழு நிவாரணம் கிடைப்பது அரிது. ஆனால், இந்திய மருத்துவ முறைகளில் பூரண குணமடைய மருந்துகள் உள்ளன.
உணவுப் பழக்கமும், உடற்பயிற்சியும் சீராக இருந்தால் நோயில்லா வாழ்க்கை வாழலாம்.

வெங்காயம் -- எதனுடன் சேர்த்தால் நோய் நீக்கும் மருந்தாக மாறும் - தீரும் நோய்கள் என்ன.?

1. நாலைந்து வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும்.
2. சமஅளவு வெங்காயச் சாறு, வளர்பட்டை செடி இலைச் சாற்றை கலந்து காதில்விட காதுவலி, குறையும்.
3. வெங்காயச் சாறு, கடுகு எண்ணெய் இரண்டையும் சம அளவில் எடுத்து சூடாக்கி இளம் சூட்டில் காதில்விட, காது இரைச்சல் மறையும்.
4. வெங்காயத்தைத் துண்டுகளாக நறுக்கி, சிறிது இலவம் பிசினைத்தூள் செய்து சேர்த்து, சிறிது கற்கண்டு தூளையும் எடுத்து, அனைத்தையும் பாலுடன் சேர்த்து சிறிது சாப்பிட எல்லா மூலக்கோளாறுகளும் நீங்கும்.
5. வெங்காய நெடி சில தலைவலிகளைக் குறைக்கும். வெங்காயத்தை வதக்கிச் சாப்பிட உஷணத்தால் ஏற்படும் ஆசனக் கடுப்பு நீங்கும்
6. வெங்காயத்தைச் சுட்டு, சிறிது மஞ்சள், சிறிது நெய் சேர்த்து, பிசைந்து மீண்டும் லேசாக சுடவைத்து உடையாத கட்டிகள் மேல் வைத்துக்கட்ட கட்டிகள் உடனே பழுத்து உடையும்.
7. வெங்காயச் சாறு சில வயிற்றுக் கோளாறுகளை நீக்கும். இதை மோரில் விட்டுக் குடிக்க இருமல் குறையும்.
8. வெங்காயச் சாற்றையும், வெந் நீரையும் கலந்து வாய் கொப்பளித்து, வெறும் வெங்காயச் சாறை பஞ்சில் நனைத்து பல் ஈறுகளில் தடவிவர பல்வலி, ஈறுவலி குறையும்.
9. வெங்காயப், வெங்காயத்தை சமைத்து உண்ண உடல் வெப்பநிலை சமநிலை ஆகும். மூலச்சூடு தணியும்.
10. வெங்காயத்தை அவித்து தேன், கற்கண்டு சேர்த்து சாப்பிட உடல் பலமாகும்.
11. வெங்காயத்தை வதக்கி வெறும் வயிற்றில் சாப்பிட்டுவர நரம்புத் தளர்ச்சி குணமாகும்.
12. வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு, பின் பசும் பால் சாப்பிட ஆண்மை பெருகும்.
13. படை, தேமல் மேல் வெங்காயச் சாற்றை சிவர மறைந்துவிடும்.
14. திடீரென மூர்ச்சையானால் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மூர்ச்சை தெளியும்.
15. வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும்,
குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும்.
16. வெங்காய ரசத்தை நீர் கலந்து குடிக்க நன்கு தூக்கம் வரும்.
17.பனைமர பதநீரோடு வெங்காயத்தை நறுக்கிப் போட்டு சூடுபடுத்தி குடித்து வர மேகநோய் நீங்கும்.
18. வெங்காயம், அவரை இலை இரண்டையும் சம அளவு எடுத்து அரைத்து சாப்பிட மேகநோய் குறையும்.
19. வெங்காயம் குறைவான கொழுப்புச்சத்து உள்ளது. எனவே குண்டானவர்கள் தாராளமாக வெங்காயத்தைப் பயன்படுத்தலாம்.
20. பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை தரும். பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது.
21. வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது. ஜீரணத்துக்கும் உதவுகிறது.
22. வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும், இழந்த சக்தியை மீட்கும்.
23. தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காயச் சாற்றை நாள் ஒன்றுக்கு அரை அவுன்ஸ் வீதம் மூன்றுவேளை சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
24. வெங்காயச் சாற்றுடன், கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுக்களில்ஏற்படும் வலி நேரத்தில் தடவிவர வலி குணமாகும்.
25. நறுக்கிய வெங்காயத்தை முகப்பரு உள்ள இடத்தில் தேய்த்தால் முகப்பரு நீங்கும்.
26. வெங்காயச் சாற்றோடு சிறிது உப்பு கலந்து அடிக்கடி சாப்பிட்டுவர, மாலைக்கண் நோய் சரியாகும்.
27. வெங்காயச் சாறையும், தேனையும் சம அளவு கலந்து கண்வலிக்கு ஒரு சொட்டுவிட கண்வலி, கண் தளர்ச்சி நீங்கும்.
28. ஜலதோஷ நேரத்தில் வெங்காயத்தை முகர்ந்தால் பலன் கிட்டும்.
29. வெங்காயத்தை அரைத்து தொண்டையில்பற்றுப்போட ஏற்படும் தொண்டை வலி குறையும்.
30. பாம்பு கடித்துவிட்டால் நிறைய வெங்காயத்தைத் தின்னவேண்டும். இதனால் விஷம் இறங்கும்.
31 ஆறு வெங்காயத்தை ஐநூறு மில்லி நீரிலிட்டு, கலக்கிப் பருக சிறுநீர் கடுப்பு, எரிச்சல் நீங்கும்.
32. வெங்காயம் சோடா உப்பு இரண்டையும் சேர்த்து அரைத்து நாய் கடித்த இடத்தில் தடவி, வெங்காய சாறை குடிக்க நாய் விஷம் இறங்கும். பிறகு டாக்டரிடம் செல்லலாம்.
33. வெங்காயச் சாறோடு சர்க்கரை சேர்த்துக்குடிக்க மூலநோய் குணமாகும்.
34. காலரா பரவியுள்ள நேரத்தில் பச்சை வெங்காயத்தை மென்றுதின்ன காலரா தாக்காது.
35. ஒரு பிடி சோற்றுடன் சிறிது உப்பு, நான்கு வெங்காயம் இவற்றை சேர்த்து அரைத்து, ஒரு வெற்றிலையில் வைத்து நகச்சுற்றுள்ள விரலில் காலை, மாலை வைத்துக்கட்ட நோய் குறையும்.
36. சிறிய வெங்காயத்தில் இன்சுலின் உள்ளது. நீரிழிவு நோயாளிகள் இதை அதிகமாகப் பயன்படுத்தலாம்.
37. தலையில் திட்டுத்திட்டாக முடி உதிர்ந்து வழுக்கை விழுந்திருந்தால் சிறு வெங்காயத்தை இரு துண்டாக நறுக்கி தேய்த்துவர முடிவளரும்.
38. காக்காய் வலிப்பு நோய் உள்ள வர்கள் தினசரி ஓர் அவுன்ஸ் வெங்காயச் சாறு சாப்பிட்டுவர வலிப்பு குறையும்.
39. வெங்காயத்தை தினமும் சாப்பிட்டுவர டி.பி.நோய் குறையும்.
40. வெங்காயச் சாற்றோடு சர்க்கரை சேர்த்து சாப்பிட வாதநோய் குறையும்.
41. தேள்கொட்டிய இடத்தில் வெங்காயத்தை நசுக்கித் தேய்க்க விஷம் இறங்கும்.
42. வெங்காயத்தை பசும் தயிருடன் சேர்த்து சாப்பிட்டுவர தாது பலமாகும்.
43. வெங்காயம் சாப்பிட தொண்டை கரகரப்பு நீங்கி குரல் வளமாகும்.
44. தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டுவர பெண்களுக்கு ஏற்படும் உதிரச் சிக்கல் நீங்கும்
45. வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட, மலச்சிக்கல் குறையும்.
46. வெங்காயத்தை அரைத்து முன் நெற்றி, பக்கவாட்டு நெற்றியில் பற்றுப் போட தலைவலி குறையும்.
47. மாரடைப்பு நோயாளிகள், ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது நல்லது.
48. சின்ன வெங்காயச் சாறு கொழுப்பை உடனே கரைக்கும்.
49. வெங்காயத்தை ஒரு மண்டலம் தொடர்ந்து சாப்பிட்டுவர உடல் குளிர்ச்சி யும், மூளை பலமும் உண்டாகும்.
50. வெங்காயத்தை வதக்கிக் கொடுத்தால் பிள்ளைகள் விரும்பி சாப்பிடுவர். ஊட்டச்சத்து கிடைக்கும்.

அன்னதான சிறப்புக்கு மஹா பெரியவர் சொன்ன கதை




பல வருடங்களுக்கு முன்பு, காஞ்சி மஹா ஸ்வாமிகள் கலவையில் தங்கியிருந்த நேரம். அன்று ஞாயிற்றுக் கிழமை. தரிசனத்துக்கு ஏகக் கூட்டம். ஒவ்வொருவராக நமஸ்கரித்து ஸ்வாமிகளிடம் ஆசி பெற்று நகர்ந்தனர். ஒரு நடுத்தர வயதுத் தம்பதி, ஆச்சார்யாளை நமஸ்கரித்து எழுந்து, கை கூப்பி நின்றனர். அவர்களைக் கூர்ந்து நோக்கிய ஸ்வாமிகள், "அடடே...யாரு...பாலூர் கோபாலனா ! ஒரு வருஷத்துக்கு முன்னாலே வந்திருந்தே. அப்போ....என்னமோ கஷ்டத்தையெல்லாம் சொல்லிண்டு வந்தயே...இப்ப சௌக்கியமா இருக்கியோல்லியோ ?" என்று சிரித்துக் கொண்டே வினவினார்.

உடனே அந்த பாலூர் கோபாலன், "பரம சௌக்கியமா இருக்கோம் பெரியவா. நீங்க உத்தரவு பண்ணபடியே நித்யம் மத்யான வேளைல ஒரு 'அதிதி' க்கு (எதிர்பாரா விருந்தாளி என்று சொல்லலாம்) சாப்பாடு போட ஆரம்பிச்சதுலேர்ந்து நல்லதே நடந்துண்டு வர்றது பெரியவா !
வயல்கல்லே விளைச்சல் நன்னா ஆறது....முன்ன மாதிரி பசு மாடுகள் மறிச்சுப் போறதில்லை! பிடிபடாம செலவாயிண்டிருந்த பணம் இப்போல்லாம் கைல தங்கறது. எல்லாம் நீங்க அநுக்கிரகம் பண்ணி செய்யச் சொன்ன அதிதி போஜன மகிமை தான் பெரியவா....தினமும் செஞ்சுண்டிருக்கேன். வேற ஒண்ணும் இல்லே " என்று கண்களில் நீர் மல்கக் கூறினார்.
அருகில் நின்றிருந்த அவர் மனைவியிடமும் ஆனந்தக் கண்ணீர். உடனே ஆச்சார்யாள், "பேஷ்...பேஷ். அதிதி போஜனம் பண்ணி வெக்கறதாலே நல்லது உண்டாறதுங்கறதை புரிஞ்சுண்டா சரி தான்...அது சரி. இன்னிக்கு நீங்க ரெண்டு பெரும் கெளம்பி இங்கே வந்துட்டேளே...அங்க பாலூர்ல யார் அதிதி போஜனம் பண்ணி வெப்பா ?" என்று கவலையுடன் விசாரித்தார்.
உடனே கோபாலனின் மனைவி பரபரப்போடு, "அதுக்கெல்லாம் மாத்து ஏற்பாடு பண்ணி வெச்சுட்டுத் தான் பெரியவா வந்திருக்கோம். ஒரு நாள் கூட அதிதி போஜனம் விட்டுப் போகாது !" என்றாள்.
இதைக் கேட்டவுடன் மஹா ஸ்வாமிகளுக்குப் பரம சந்தோஷம். "அப்படித் தான் பண்ணனும். பசிக்கிறவாளுக்கு சாப்பாடு பண்ணி வெக்கறதுலே ஒரு வைராக்கியம் வேணும். அதிதிக்கு உபசாரம் பண்றது, அப்டி ஒரு அநுக்கிரகத்தைப் பண்ணிக் குடும்பத்தைக் காப்பாத்தும்!
ஒரு நாள் சாட்சாத் பரமேஸ்வரனே அதிதி ரூபத்துலே வந்து ஒக்காந்து சாப்பிடுவார், தெரியுமா ?" - குதூகலத்துடன் பேசினார் ஸ்வாமிகள். இந்த அநுக்கிரக வார்த்தைகளை கேட்டு மகிழ, கியயூவில் நின்றிருந்த அனைவரும் விரைந்து வந்து ஸ்வாமிகளைச் சூழ்ந்து நின்று கொண்டனர்.
அனைவரையும் கீழே அமரச் சொல்லி ஜாடை காட்டினார் ஆச்சார்யாள். பக்தர் கூட்டம் கீழே அமர்ந்தது.

இத்தலம் ஐராவத நகரம் என்றும் பெயர் ஏற்பட்டது.

கும்பகோணத்திலிருந்து தஞ்சை செல்லும் வழியில் அரசலாற்றைக் கடந்தால் தெற்கே தாராசுரம் உள்ளது. இக்கோயில் மிகச்சிறந்த கலைவளம் கொண்ட கோயிலாகும். இங்குள்ள சிற்பங்கள் உயிருடன் நம்முடன் கொஞ்சுபவை.


இக்கோயிலில் உள்ள பலிபீடம் இசையொலியெழுப்பும் கல்லால் அமைந்தும் பரதத்தின் நுட்பங்களை விளக்கும் நுண்ணிய சிற்பங்களும் 63 நாயன்மார்களின் வரலாறும் சிற்பவேலைப்பாட்டின் சிகரமாக விளங்குகிறன.
இத்தலத்திற்கு புராணக்கதை ஒன்று உண்டு. அதாவது இந்திரனின் வாகனமான ஐராவதம் என்னும் யானை துர்வாச முனிவரின் கோபத்திற்கு ஆளாகி சாபத்தால் வெள்ளை நிறம் மாறி கருமையாகிறது. எனவே சாபம் நீங்க இத்தலம் வந்து இறைவனை வழிபட்டு சாபம் நீங்கப்பெற்றது. ஆகவே ஐராவதம் வந்து வழிபட்டதால் இத்தலம் ஈஸ்வரர் ஐராவதேஸ்வரர் என்றும் இத்தலம் ஐராவத நகரம் என்றும் பெயர் ஏற்பட்டது.
மேலும் தாரன் என்ற அரசன் என்றும் மரணமில்லாது வாழவும் தேவர்களை வெற்றிகொள்ளவும் இத்தல இறைவனை பூசித்து அருள் பெற்றான். ஆதலின் தாராசுரம் எனப்பெயர் பெற்றது என்றும் கூறுவர். மேலும் தாரன் அசுரனின் மகன் மேகதாரன் வைகாசி மாதத்தில் பெரும் விழா ஒன்றை இத்தலத்தில் சிவபெருமானுக்கு எடுத்ததாகவும் கூறப்படுகிறது.

Tuesday, February 23, 2016

இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு.

வாத்தியார் வகுப்பறைக்குள் நுழைந்தார். மேஜை மீதிருந்த கண்ணாடி டம்ப்ளரை எடுத்து தூக்கிக் காட்டினார்.
“இது எவ்வளவு வெயிட் இருக்கும்?”
100 கிராம், 50 கிராம் என்று மாணவர்கள் ஆளாளுக்கு ஒரு எடையை சொன்னார்கள்.
“இதோட சரியான எடை எனக்கும் தெரியாது. ஆனா என்னோட கேள்வி அதுவல்ல”
வாத்தியார் தொடர்ந்தார். “இதை அப்படியே நான் கையிலே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா என்ன ஆகும்?”
“ஒண்ணுமே ஆகாது சார்”
”வெரிகுட். ஆனா ஒரு மணி நேரம் இப்படியே பிடிச்சிக்கிட்டிருந்தேன்னா…?”
“உங்க கை வலிக்கும் சார்”
“ஒருநாள் முழுக்க இப்படியே வெச்சிருந்தேன்னா…”
“உங்க கை அப்படியே மரத்துடும் சார்”
“வெரி வெரி குட். ஒரு மணி நேரத்துலே என் கை வலிக்கறதுக்கும், ஒரு நாளிலே மரத்துப் போகிற அளவுக்கு மாறுறதுக்கு இந்த தம்ப்ளரோட வெயிட் கூடிக்கிட்டே போகுமா என்ன?”
“இல்லை சார். அது வந்து…”
“எனக்கு கை வலிக்காம, மரத்துடாம ஆகணும்னா நான் என்ன பண்ணனும்?”
“கிளாஸை உடனே கீழே வெச்சுடணும் சார்”
”எக்ஸாக்ட்லி. இந்த கிளாஸ்தான் பிரச்சினை. ஒரு பிரச்சினை நமக்கு வந்ததுன்னா அதை அப்படியே மண்டைக்கு ஏத்தி ஒரு மணி நேரம் வெச்சிருந்தோம்னா வலிக்க ஆரம்பிக்கும். ஒரு நாள் முழுக்க அப்படியே வெச்சிருந்தா மூளை செயலிழந்து மரத்துடும். அதனாலே உங்களுக்கு ஏதாவது பிரச்சினை வந்துடிச்சின்னா தூக்கி ஒரு ஓரமா கடாசிடுங்க. அதுவே சரியாயிடும். சரியா?”
இது தான் மனவியல் ரீதியுலான தீர்வு. 

திமுகவுக்கு, அதிமுக பதிலடி : கருணாநிதியை சட்டசபைல பாத்துருக்கிறீங்களா?

மிழகத்தின் அனைத்து பத்திரிகைகளிலும் இன்று காலை முதல் பக்கத்தை ஒரு விளம்பரம் அலங்கரித்தது. அதில், ''அம்மாவை ஸ்டிக்கர்ல பாத்துருக்கிறீங்க, பேனர்ல பாத்துருக்கிறீங்க, ஏன் டிவியில கூட பார்த்துருக்கிறீங்க... ஆனா நேர்ல பார்த்துருக்கிறீங்களா?'' என்று அந்த விளம்பரம் கேட்கிறது. உச்சக்கட்டமாக 'என்னமா இப்படி பண்றீங்களேம்மா? என்ற லட்சுமி ராமகிருஷ்ணனின் புகழ்பெற்ற வார்த்தையும் ஸ்லோகனாக அந்த விளம்பரத்தில் இடம் பெற்றிருக்கிறது. திமுக தரப்பில் இருந்து  கொடுக்கப்பட்ட இந்த விளம்பரம்தான் முதல்வரை இப்படி கிண்டலுடன் கேட்கிறது. 

தமிழகத்தில் இன்னும் தேர்தல் தேதி அறிவிக்கப்படவில்லை. ஆனால் அதற்கு முன்னரே திமுக விளம்பரங்களை தட்டி எறிய ஆரம்பித்திருக்கிறது. இப்போதே விளம்பரம் கொடுக்கப்பட்டால், அது தேர்தல் கணக்கு செலவில் வராது. அதனை கருத்தில் கொண்டு மக்கள் மனதில் பதிந்த குறிப்பாக இளைஞர்களையும் இளைஞிகளையும் கவரும் விதத்தில்  'என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா ' என்ற வார்த்தையை பயன்படுத்தி இந்த விளம்பரம் கிரியேட்டிவிட்டியாக தயாரிக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் இந்த விளம்பரம் மக்களிடம் எடுபடும் என்று கருதிய திமுக, இந்த ஒரு நாள் விளம்பரத்திற்காக சுமார் 18  கோடி ரூபாய் வரை செலவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. அது மட்டுமல்ல தொலைகாட்சிகளிலும் அடிக்கடி இந்த விளம்பரத்தை பார்க்க முடிகிறது. 

இது இப்படியிருக்க, இந்த விளம்பரம் வெளியிடப்பட்ட அடுத்த நிமிடமே அதிமுக வாட்ஸ்அப் வழியாக திமுகவுக்கு பதிலடி கொடுக்க ஆரம்பித்து விட்டது. வாட்ஸ்அப் பெஞ்ச் என்ற அந்த ஆடியோவில்,'' என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா... அதை காப்பியடிச்சு திமுக காரங்க ஒரு விளம்பரம் கொடுத்துருக்கிறாங்களே... அவங்களை நெனைச்சாலே சிரிப்பு சிரிப்பா வருது. அண்ணே இந்த விளம்பரத்துக்கு 18 கோடினே , 18 கோடி செலவழிச்சுருக்காங்க.


முதல்வரை நான் நேர்ல பார்த்துருக்கேன், நீங்க பார்த்துருக்கிறீங்களானு  கேட்க, 18 கோடியானே. வேற வழி இல்ல சமூக வலைதளங்களில் அதிமுகவ அடிச்சுக்க முடியல.  வேற என்னணே செய்ய, கும்மிடிப்பூண்டி முதல் கன்னியாகுமரி வரை செயல்வீரர்களை நியமனம் பண்ணி அதிமுககாரங்க அமர்க்களமாக போய்ட்டுருக்காங்க. அதான் திமுகவுக்கு விளம்பரம் கூட கொடுக்கத் தெரியாம இப்படியெல்லாம் செய்யுறாங்களோனு தோணுது. இத பார்த்தா கட்சி விளம்பரம் மாதிரி தெரியலையே, சோப்பு விளம்பரம் மாதிரிலா இருக்குனு ''  என்று திமுக விளம்பரத்தை நக்கல் அடிக்கிறது. 

இப்படி தேர்தல் தேதி வெளியிடுவதற்கு முன்னரே இரு கட்சியினரும் விளம்பரத்தில் குதித்தாகி விட்டது. திமுக இன்னும் பேப்பர் விளம்பரத்தை நம்பிக் கொண்டிருக்க ,அதிமுகவோ வாட்ஸ் அப்பில் பட்டையை கிளப்பும் விதத்தில் ஆடியோவை வெளியிட்டுள்ளது. இப்போது திமுகவின் விளம்பரம் படுத்து விட,  அதிமுகவின் ஆடியோதான் சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறதாம். அதுபோல் வாட்ஸ் அப்பில் மற்றொரு விளம்பரத்தையும் அதிமுக பரப்பி வருகிறது. ''கருணாநிதியை நடிகைங்க கல்யாணத்துல பாத்துருப்பீங்க, கலை விழால பாத்துருப்பீங்க, மானாட மயிலாடல பாத்துருப்பீங்க, ஆனா கருணாநிதிய சட்டசபைல பாத்துருக்கிறீங்களா? ஏன் திருவாருர் தொகுதியிலயாவாவது பாத்துருக்கிறீங்களா?னு அதிமுகவின் அந்த விளம்பரம் திமுகவை பார்த்து கேட்கிறது. 

திமுக கொடுத்துள்ள இந்த விளம்பரத்தில் இன்னொரு விஷயமும் இருக்கிறது. என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா? என்ற வார்த்தை ஜீ டி.வியில் வரும் 'சொல்வதெல்லாம் உண்மை' என்ற நிகழ்ச்சியின் முந்தைய தொகுப்பாளர் லட்சுமி ராமகிருஷ்ணன் பயன்படுத்தியது. இந்த வார்த்தை தமிழகம் முழுவதுமே ரொம்ப பாப்புலர். இதனை கிண்டல் செய்து விஜய் டி.வி. நிகழ்ச்சியும் நடத்தியது. அந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பக் கூடாது என லட்சுமி ராமகிருஷ்ணன், சென்னை காவல் ஆணையர் வரை சென்று புகார் கொடுத்தார். அது மட்டுமல்ல நல்ல நோக்கத்தில் பயன்படுத்தப்பட்ட இந்த வார்த்தையை இப்போது ஒருவரை ஒருவர் கிண்டலடிக்க பயன்படுத்துகிறார்களே என்றும் லட்சுமி ஒரு முறை  வேதனை தெரிவித்திருந்தார். தற்போது  லட்சுமி ராமகிருஷ்ணனின் வார்த்தையை தமிழகத்தில் அதிகார உச்சத்தை பார்த்து கேட்க, திமுக தனது  விளம்பரத்தில் பயன்படுத்தியிருக்கிறது. 

இப்போது லட்சுமி ராமகிருஷ்ணன் என்ன செய்யப் போகிறார்?  தமிழகத்தின் சர்வ வல்லமை படைத்த அம்மாவையே பார்த்து கேட்க,  தான் பயன்படுத்திய வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கிறது என்று திருப்தி பட்டுக் கொள்வாரோ?

இடைகால பட்ஜெட் முக்கிய அம்சங்கள்:

* தமிழகத்தில் பொருளாதார வளர்ச்சி 8.01 சதவீதம் எட்டி உள்ளது
* நாட்டில் 2-வது பெரிய பொருளாதாரத்தை கொண்ட மாநிலமாக தமிழகம் உருவெடுத்துள்ளது:
* 60, 610 கோடி ரூபாய் இடைகால நிதியாக ஒதுக்கீடு
* முதுமை முயற்சி திட்டங்களுக்கு ரூ 150 கோடி ஒதுகீடு
* வனத்துறைக்கு ரூ677.93 கோடி நிதி ஒதுக்கீடு
* புதுவாழ்வு திட்டம் முன்னுதாரணமாக விளங்குகிறது.நாட்டிலேயே இரண்டாவது இடம் பிடித்து உள்ளது.9.8 லட்சம் குடும்பங்கள் புதுவாழ்வு திட்டத்தால் பயனடைந்து உள்ளன.
* புதுவாழ்வுத் திட்டத்துக்கு உலக வங்கி ரூ900 கோடி நிதி- ஓபிஎஸ்
* அண்டை மாநிலங்களை விட தமிழகம் பொருளாதார வளர்ச்சியை எட்டி உள்ளது.
* தமிழ்நாடு நகரபுற வளர்ச்சிக்காக இடைக்கல பட்ஜெட்டில் ரூ.100 கோடி ஒதுக்கபட்டு உள்ளது
* மாநில சமச்சீர் வளர்ச்சி நிதியம் உருவாக்கப்பட்டு ஆண்டுதோறும் ரூ100 கோடி ஒதுக்கீடு
* 1,13.000 இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு முகாம் மூல தனியார் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு வழங்கபட்டு உள்ளது.
* திறன் மேம்பாடு திட்டத்திற்கு ரூ.150 கோடி ஒதுக்கீடு
* தமிழ் மொழி வளர்ச்சிக்கு ரூ.32.27 கோடி ஒதுக்கபட்டு உள்ளது.
* இடைக்கால பட்ஜெட்டில் காவல் துறை மேம்பாட்டிற்கு ரூ.6099 கோடி ஒதுக்கீடு
* தீயணைப்பு துறைக்கு ரூ.227 கோடி ரூபாய் ஒதுக்கீடு
* அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை நிறைவேற்ற மத்திய அரசுக்கு திருத்திய கருத்துரு அனுப்பபடும். இந்த திட்டத்திற்குகான ஆரமப கட்ட பணிகள் உடனடியாக தொடங்கப்படும்.
* மகாமகம் சிறப்பாக நடைபெற ரூ135 கோடி நிதி ஒதுக்கீடு
* மின்சார துறைக்கு ரூ13,819 கோடி நிதி ஒதுக்கீடு
* 10,000க்கும் மேலான இசேவை மையங்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
* இலங்கை போரில் பாதிக்கப்பட்ட தமிழரை மீள்குடியேற்றம் செய்ய வேண்டும்
* தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு நிலைநாட்டப்பட்டு சீராக உள்ளது
* போர்க்கால அடிப்படையில் வெள்ள மீட்பு நிவாரணப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன
* அம்மா திட்டம் மூலம் 3 ஆண்டுகளில் 50.50 லட்சம் கோரிக்கை மனுக்கள் மீது நடவடிக்கை
* இடைக்கால பட்ஜெட்டில் வேளாண்துறைக்கு ரூ6,938.57 கோடி நிதி ஒதுக்கீடு
*சுகாதாரத்துறைக்கு ரூ. 9350.66 கோடி ஒதுக்கீடு. 
*மெட்ரோ ரயில் திட்டத்திற்கு ரூ. 1032.55 கோடி ஒதுக்கீடு.
*மருத்துவர் முத்துலெட்சுமி ரெட்டி மகப்பேறு நிதியுதவி திட்டத்திற்கு ரூ. 668 கோடி ஒதுக்கீடு.
*பள்ளி கல்வித்துறைக்கு ரூ. 24,820 கோடி நிதி ஒதுக்கீடு.
*வேளாண்த்துறைக்கு ரூ. 6,938.57 கோடி ஒதுக்கீடு.
*பால்வளத்துறைக்கு ரூ. 119.62 கோடி ஒதுக்கீடு.
*மீன்வளத்துறைக்கு ரூ. 742.99கோடி ஒதுக்கீடு.
*வனத்துறைக்கு ரூ. 677.93 கோடி ஒதுக்கீடு.
*மின்சாரத்துறைக்கு ரூ. 13,819 கோடி ஒதுக்கீடு.
*ஊரகவளர்ச்சித் துறைக்கு ரூ. 18,503.80 கோடி ஒதுக்கீடு.
*வருவாய்த்துறைக்கு ரூ. 59.74 கோடி ஒதுக்கீடு.
கிராமப்புற புதுவாழ்வு திட்டத்திற்கு ரூ. 900கோடி நிதி ஒதுக்கீடு.
*தீயணைப்பு துறைக்கு ரூ. 227கோடி ஒதுக்கீடு.
*தமிழ்மொழி வளர்ச்சிக்கு ரூ. 32.74 கோடி ஒதுக்கீடு.
*காவல்துறைக்கு ரூ.6099கோடி ஒதுக்கீடு.
*சிறைத்துறைக்கு ரூ. 281.28 கோடி ஒதுக்கீடு.
*நிதி நிர்வாகத்திற்கு ரூ. 985.51 கோடி ஒதுக்கீடு.
*புதியமுயற்சி திட்டங்களுக்கு ரூ. 150 கோடி ஒதுக்கீடு.
*உயர் கல்வித்துறைக்கு ரூ. 3,821 கோடி ஒதுக்கீடு.
*விளையாட்டு துறைக்கு ரூ.142.88 கோடி ஒதுக்கீடு.
*தொழிலாளர் நலத்துறைக்கு ரூ. 152.27 கோடி ஒதுக்கீடு.
*சமூக நலத்துறைக்கு ரூ. 3,820 கோடி ஒதுக்கீடு.
*சுற்றுலாத்துறைக்கு ரூ. 84.66 கோடி ஒதுக்கீடு.
*ஆதிதிராவிடர் நலனுக்காக ரூ. 2702.22 கோடி ஒதுக்கீடு.
*பழங்குடியினர் நலனுக்காக ரூ. 261.66 கோடி ஒதுக்கீடு.
*அரசு அலுவலர்கள், ஓய்வூதியர்கள் நலனுக்காக ரூ. 19,841 கோடி ஒதுக்கீடு.
*பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உணவு மானியத்திற்கு ரூ. 5,500 கோடி ஒதுக்கீடு.
*விலையில்லா வேட்டி,சேலை வழங்கல் திட்டத்திற்கு ரூ.495.16 கோடி ஒதுக்கீடு. 
*தகவல் தொழில்நுட்ப துறைக்கு ரூ.135.29 கோடி ஒதுக்கீடு.
*குறு,சிறு, நடுத்தர தொழிலுக்கு ரூ. 348.13 கோடி ஒதுக்கீடு.
*போக்குவரத்து துறைக்கு ரூ. 1,590 கோடி ஒதுக்கீடு. 
*நெடுஞ்சாலை துறைக்கு ரூ. 8486.26 கோடி ஒதுக்கீடு.
*நகராட்சி நிர்வாகம், குடிநீர் வழங்கல் ரூ. 12,194.21 கோடி ஒதுக்கீடு.
*கால்நடைத்துறை பராமரிப்பிற்கு ரூ. 1,188.88 கோடி ஒதுக்கீடு.
*தமிழ்நாடு கட்டமைப்பு மேம்பாட்டிற்கு ரூ. 2000 கோடியும், திட்டவடிவமைப்பு நிதியத்திற்கு ரூ. 200 கோடியும் இடைக்கால பட்ஜேட்டில் ஒதுக்கீடு.
*வணிக வரி வருவாயில் குறைவான வளர்ச்சியே இந்த ஆண்டும் தொடர்கிறது. விற்பனை வரி குறைவால் ஆண்டுதோறும் ரூ. 4000 கோடி தமிழக அரசுக்கு இழப்பு. -சட்டப்பேரவையில் நிதியமைச்சர்

அபிஷேக பலன்கள்:


1) அருகம்புல் ஜலத்தினால் சிவாபிஷேகம் செய்தால் நஷ்டமான பொருட்கள்
திரும்ப கிடைக்கும்.
2) நல்லெண்ணெய் அபிஷேகத்தினால் அபம்ருத்யு நசிக்கும்.

3) பசும்பால் அபிஷேகத்தினால் ஸகல ஸௌக்கியம் கிட்டும்.
4) தயிர் அபிஷேகத்தினால் பலம், ஆரோக்கியம், யஸஸ் கிட்டும்
.
5) பசு நெய்யினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்ய ப்ராப்தி கிட்டும்.
6) கரும்பு ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தன வ்ருத்தி கிட்டும்
.
7) மிருதுவான சர்க்கரையினால் அபிஷேகம் துக்கம் நசிக்கும்.
8) தேன் அபிஷேகத்தினால் தேஜோவ்ருத்தி கிட்டும்.
9) புஷ்ப ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் பூலாபம் கிட்டும்.
10) இளநீரினால் அபிஷேகம் செய்தால் சகல ஸம்பத்தும் கிட்டும்.
11) உத்திராட்ச ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் ஐஸ்வர்யம் கிட்டும்.
12) பஸ்மத்தினால் அபிஷேகம் செய்தால் மஹா பாபங்கள் நசிக்கும்.
13) கந்தத்தினால் (அரைத்தெடுத்த சந்தனம்) அபிஷேகம் செய்தால் புத்திர
ப்ராப்தி கிட்டும்.
14) ஸ்வர்ண (தங்கம்) ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் கோரமான
தாரித்ரியம் நசிக்கும்.
15) ஸுத்த ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் நஷ்டமானவை திரும்ப
கிடைக்கும்.
16) வில்வ ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் போகபாக்யங்கள் கிட்டும்.
17) அன்னத்தினால் அபிஷேகம் செய்தால் அதிகாரம், மோக்ஷம் மற்றும்
தீர்க்காயுள் கிட்டும்.
18) திராட்சை ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் எல்லாவற்றிலும் ஜயம்
உண்டாகும்.
19) கர்ஜூரம் (பேரிச்சம்பழம்) ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் ஸத்ருக்கள்
இல்லாமல் போவர்.
20) நாவல்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் வைராக்கிய ஸித்தி
கிட்டும்.
21) கஸ்தூரி ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் சக்ரவர்த்தி ஆகலாம்.
22) நவரத்தின ஜலத்தினால் அபிஷேகம் செய்தால் தான்யம், க்ருஹம்,
கோவ்ருத்தி கிட்டும்.
23) மாம்பழ ரஸத்தினால் அபிஷேகம் செய்தால் தீராத வியாதிகள் தீரும்.
24) மஞ்சள் நீரினால் அபிஷேகம் செய்தால் மங்களம் உண்டாகும், .
ஓம் சிவாய நம...
சுப காரியங்கள் கைகூடும்

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...