Wednesday, February 3, 2016

ஹிட்லரை அடிபணிய வைத்த ஒரு தமிழனின் பெருமையை பறைசாற்றும் சம்பவம் இது!

ஒரு தமிழனிடம் மன்னிப்புக்கேட்ட‍ ஹிட்லர் தமிழனின் பெருமையை உலகுக்கு பறைச்சாற் றும் சம்பவம் இது!
ஆங்கிலேய ஆட்சிக்கு எதிரான இந் திய விடுதலைப்போராட்டத்தின்போ து ‘ஜெய்ஹிந்த்’ என்ற ஒற்றை வாச கம்தான், தாய்நாட்டின் மீது பற்றும் பாசமும் கொண்ட ஒவ்வொரு இந் தியரின் பேச்சிலும், மூச்சிலும் உ றைந்துபோய் இருந்தது என்பது நம் அனைவருக்கும் தெரியும்.
ஆனால், இந்த அற்புத வாசகத்தை உருவாக்கி, மக்களிடையே பரவசெ ய்து, விடுதலைக்கான வீர தீப்பொறியை பரவச் செய்தவர், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் என்ற நம்பிக்கையும் இந்திய
மக்களின் கருத்தில் விதைக்கப்பட்டது.
இந்த தகவலுக்கு மாறாக, ‘ஜெய் ஹிந்த்’ என்ற வாசகத்தை முதலில் அறிவித்து பிரகட ணப்படுத்தியவர் ஒரு தமி ழர்தான் என்ற அரிய செ ய்தியும், அந்த வீர தமிழனி டம் உலகை யே ஆட் டிப் படைத்த சர்வாதிகாரியா ன ஹிட்லர் மன்னிப்புக் கே ட்ட பெருமைக்குரிய வர லாறும் தற்போது தெரிய வந்துள் ளது.
‘ஜெய் ஹிந்த் செண்பகராமன்’ என்ற நூலி னை வரலாற்று ஆசிரியர் ‘ரகமி’ என்பவர் எழுதியுள்ளார். இந்த நூலில் இந்திய விடுதலைப் போராட்டத்தில் இருட்டடிப்பு செய்யப்ப ட்ட அந்த பெருமைக்குரிய தமிழனின்பெரும்பங்கு ஆதார த்துடன் பதிவுசெய்யப்பட்டு ள்ளது.
குமரியில் பிறந்த செண்பக ராமன் சிலகாலத்திற்குபின் திரு வனந்தபுரத்தில் பள்ளி ப்படிப்பை முடித்திருக்கிறா ர்.மாணவராக இருந்த கால ங்களிலேயே இந்திய விடுத லைக்காக பல்வேறு போரா ட்டங்களில் செண்பகராம ன் ஈடுபட்டார்.
இந்தியாவில் தங்கியிருந்த ஜெர்மனி நாட்டு உளவாளி யான ‘சேர் வால்டர் வில்லி யம் ஸ்ரிக்லாண்ட்’, செண்பகராமனின் நடவடிக்கைகளில் இருந்த உறுதியான கொள்கைப்பிடிப்பையும், துணிச்சலை யும், ஆர்வத்தையும் கண்டு பலவகைகளில் அவருக்குஉதவி செய்தார்.
அவரது உதவியுடன் இந்தியாவில் இருந்து வெளியேறிய செண்பகராம ன் இத்தாலி, சுவிட்சர்லாந்து, ஜெர்ம னி உள்ளிட்ட நாடுகளில் வாழ்ந்திரு க்கிறார். இத்தாலியில் இருந்தபோது இத்தாலிய இலக்கியம், விஞ்ஞானம் போன்றவற்றை படித்தார். பின்னர், சுவிட்சர்லாந்திலும் படிப்பை தொட ர்ந்திருக்கிறார். அதன்பின் ஜெர்மனி யின் தலைநகரான பெர்லினில் பொ றியியல் துறையின் டாக்டர் பட்டம் பெற்றார்.
பட்டப்படிப்புக்கு பிறகு, ஜெர்மனியில் தங்கியிருந்தபடியே இந்திய ஆதரவு சர்வதே ச கமிட்டிமூலம் இந்திய விடுதலைக்கு செண்பக ராமன் ஆதரவு திரட்டத் தொடங்கினார். அந்த காலக்கட்டத்தில் ஜெர்ம னி மன்னர் கெய்சரின் நட்பு அவருக்கு கிடைத்த து. 1930-இல் இந்திய வர் த்தகசபை சமாஜத்தின் பெர்லின் பிரதிநிதியாக செண்பகரா மன் நியமிக்கப்பட்டார்.
1933-இல் ஜெர்மனியில் ஹிட்லரின் ஆட்சி ஏற்பட்டபோது அவருடன் செண்பகராமனுக்கு நட்பு ஏற்பட்ட து. 1933-இல் வியன்னாவில் நடை பெற்ற ஓர் மாநாட்டில் சுபாஷ் சந்திர போஸை முதன்முறையாக சந்தித்தார், செண்பகராமன். இந்தி ய தேசியத் தொண்டர் படை (பின் நாட்களில் இதுவே இந்திய தேசிய ராணுவமாக உருவெடுத்தது) திட் டம்பற்றி கேள்விப்பட்டிருந்த சுபா ஷ் சந்திரபோஸ், தன்னுடைய இந் திய தேசியப் படை குறித்து செண் பகராமனுடன் கலந்தா லோசித்து இருக்கிறார்.
அந்த சந்திப்பின் முடிவில், தான் எப்போதும் சொல்லும் ‘ஜெ ய் ஹிந்த்’ என்ற மந்திர வார்த்தையை செண்பகராமன் உச் சரித்து இருக்கிறார். அந்த வாசகம் சுபாஷ் சந்திரபோசை வெகுவாக ஈர்த்தது. அதனையே தனது தேசிய ப்படையின் தாரக மந்திரமாக்கினா ர். அதுவே நாளடைவில் இமயம் வரையில் ஒலிக்க ஆரம்பித்தது.
செண்பகராமனைப் பற்றிய இன் னொரு சம்பவமும் இந்நூலில் பதி வு செய்யப்பட்டுள்ளது. தமிழனின் பெருமையை உலகுக்கு பறை சாற் றம் அந்த உன்னத சம்பவம் ஒன்று போதும்; ‘தமிழன் என்று சொல்ல டா-தலை நிமிர்ந்து நில்லடா’ என்ற அற்புத வரிகளி ன் முழு பொருளையும் நாம் உணர் ந்துக் கொள்ள முடி யும்.
ஒருமுறை ஹிட்லர் தன் நண்பர்களுடன் பேசிக்கொ ண்டிருந்தபோது “சுதந்திர ம் பெறக்கூடிய தகுதி இந்தி யர்களுக்கு கிடையாது” எ ன்று கூறினார். இந்த கருத் து அருகில் இருந்த செண் பகராமனுக்கு கடுங்கோபத்தை ஏற்படுத்தியது. “இந்தியா வின் பாரம்பரியம், இந்தியத்தலைவர்களின் திறமைக ளைப்பற்றி தரக்குறைவாக நீங்கள்பேசுவதை என்னால் அனுமதிக்கமுடியாது” என்று ஆவேசமாக கூறிய செண்பக ராமன், சற்றும் அஞ்சாமல் அனைவரின் முன்னிலையி லும் உலகமே பார்த்து மிரண் ட சர்வாதிகாரி ஹிட்லருடன் இதுதொடர்பாக நீண்ட நேரம் விவாதித்திருக்கிறார்.
அடுக்கடுக்கான ஆதாரங்களுட னான செண்பகராமனின் வாத திறமையை கண்டுவியந்துபோ ன ஹிட்லர், இறுதியில் பணிந் தார். தன்னை மன்னித்துக் கொ ள்ளும்படி அவர்கேட்க செண்பக ராமனோ, வார்த்தைகளால் மன் னிப்பு கேட்பதைவிட எழுத்துப்பூ ர்வமாக மன்னிப்பு கேளுங்கள் என்று வற்புறுத்த, ஹிட்லரும் அப்படியே செய்திருக்கிறார்.
இச்சம்பவம் நாஜிக்களுக்கு மத்தியில் பெரும்கோபத்தை ஏற்படுத்தியது. செண்பக ரா மனை கொல்ல சதிசெய் து சாப்பாட்டில் விஷத்தை வைத்து அவரை கொன்ற னர். செண்பகரா மன் 26-5-1934அன்று மரணம் அடை ந்தார்.
“தொட்டிலில் அழும் பிள் ளைகள் கூட ஹிட்லரின் பேரைக் கேட்டால் வாயை மூடிக்கொள்ளும்” என ஜெர்மனி யில் ஒரு சொல் வழக்கு உண்டு. அப்படிப்பட்ட கொடுங்கோலனான ஹிட்லரை நேருக்கு நேராக நின்று எதிர்த்து பேசு வதென்றால் சாதாரண காரியமா?
அறிவிலும், துணிவிலும் ஈடு இணையற்ற ஓர் தமிழனாக ஜெர்மனியில் இருந்தபடி, இந்திய விடுதலைக்கு போராடிய மாவீரன் செண்பகரா மனைப்பற்றி ஜெய்ஹிந்த்’ புத்தகத்தின் வாயிலா க வரலாற்று ஆசிரியரான ரகமி, மேலும் பல அருமையாக நிகழ்ச்சிகளை யும் வெளி உலகத்திற்கு தெ ரிவித்திருக்கிறார்.
செண்பகராமனைப் போல் வரலாறுகளி ல் மறைக்கப்பட்ட பல தமிழ் மாவீரர்க ளை நினைத்து வேதனைப்படும் முற் போக்கு சிந்தனையாளரும், பிரபல எழு த்தாளருமான தமிழச்சி என்பவர் இந்த அரிய தகவலை சமூக வலைதளம் ஒன் றில் வெளியிட்டுள்ளார்.

No comments:

Post a Comment