Thursday, August 4, 2016

இதை மாற்றுவோமோ,,,

சுய ஊக்குவிப்பு Self Motivation குறித்து ஒரு அலசல்:
வாழ்வில் நீங்கள் விரும்புவது உங்களுக்கு கிடைப்பதில்லை. நீங்கள் எதைப் பெறத் தகுதி வாய்ந்தவரோ அதை மட்டுமே
பெறுகிறீர்கள்.
உங்கள் விருப்பங்களை தகுதிகளாக எப்படி மாற்றுவது?
ஆழமான விருப்பங்களுடன்,
சுயஊக்குவிப்புடன் கூடிய விடாமுயற்சிஇணைந்து கொள்ளும் போது, அவை தகுதி பெறுகின்றன.
மந்திரத்தால் மாங்காயை கொண்டு வர முடியாது எக்காலத்திலும்.
முயற்சியுடன் சாகுபடி செய்தால் தான் கிடைக்கும்.
தாமஸ் எடிசன் குறிப்பிடுவார் :
மேதமை என்பது 1%,,
ஊக்கம் 99% சதவீத உழைப்பு.
செய்யக் கூடாத ஒரு விஷயத்தை அதிகத் திறமையுடன் செய்வதைக் காட்டிலும் பயனற்ற செயல் ஏதுமில்லை.
திசையறியாத சுயஊக்குவிப்புடன் கூடிய முயற்சி ஒரு வீண் முயற்சி.
ஏணியின் உச்சிக்கு சென்ற பிறகு, அது தவறான சுவரில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது என்று உணரும்போது என்ன பயன்?
Total waste of Energy.
Planning Must. குறிக்கோளுடன் கூடிய செயலே முன்னேற்றம்.
நீங்கள் ஆசைப்படுவதை நீங்கள் அடைவதில்லை. உங்களுக்கு தகுதியானவற்றை மட்டுமே அடைகிறீர்கள். இது கடவுள் விதி.
இதை மாற்றுவோமோ,,,
நம் விதி இப்படி இருக்கட்டும்:
சுய ஊக்குவிப்புடன் கூடிய விடாமுயற்சியின் மூலம், வாழ்வில் சிறந்தவற்றை மட்டுமே பெற நான் நான் தகுதி வாய்ந்தவன் என்பதை
நமக்கு நாமே உறுதி செய்து கொள்வோம்.
கவனத்தை ஒருமுகப்படுத்தினால் எல்லாம் சாத்தியமே,,,,.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...