Saturday, March 16, 2019

கூட்டணி கட்சிக்கு பெரம்பலூர் 'மாஜி' மீது தி.மு.க.,வினர் அதிருப்தி.

தி.மு.க., கூட்டணியில், பெரம்பலுார் லோக்சபா தொகுதி, இந்திய ஜனநாயக கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இது, முன்னாள் மத்திய அமைச்சர் ராஜாவின் ஏற்பாடு என்றே, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கருதுகின்றனர்.

காரணம், 2009 லோக்சபா தேர்தலில், சென்னையில், 'சீட்' கேட்ட நடிகர் நெப்போலியனை, கருணாநிதியிடம் தனக்கிருந்த செல்வாக்கை பயன்படுத்தி, பெரம்பலுாரில் போட்டியிட வைத்து, ஜெயிக்க வைத்தார், ராஜா.ஆனால், அதன்பின் ராஜாவால் நிறுத்தப்பட்ட யாரும், வெற்றி பெறவில்லை. 2014ல், சீமானுார் பிரபுவை, பெரம்பலுாரில் போட்டியிட வைக்க, அவர் தோல்வியடைந்தார். சில ஆண்டுகளில், அவர் இறந்தும் விட்டார்.

இதேபோல, சட்டசபை தேர்தல்களில், 2011ல், பெரம்பலுார் தொகுதியில், புதிதாக கட்சியில் சேர்ந்த தன் ஆதரவாளர் ஒருவரையும், 2016 தேர்தலில், சென்னையில் வசித்த முன்னாள், ஐ.ஏ.எஸ்., அதிகாரி சிவகாமியையும், பெரம்பலுாரில் ராஜா களமிறக்க, இரண்டு தேர்தல்களிலும், தி.மு.க., தோல்வியை தழுவியது.

தற்போது, '2019 லோக்சபா தேர்தலில், திருச்சி, பெரம்பலுார், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த, தி.மு.க., நிர்வாகிகள் பலரும், 'சீட்' கேட்டிருந்த நிலையில், தொகுதியை கூட்டணிக்கு தாரை வார்த்துள்ளார் ராஜா' என, உடன்பிறப்புக்கள் ஆதங்கப்படுகின்றனர்.கடந்த தேர்தல்களில் வெளியூர் நபர்களையும், கட்சியில் போதிய அறிமுகம் இல்லாதவர்களையும் வேட்பாளர்களாக்கி, தோல்வி தான் பரிசாக கிடைத்தது. 

இந்த தேர்தலிலும், தொகுதியை கூட்டணி கட்சிக்கு ஒதுக்கீடு செய்துள்ளதால், ராஜா மீது, பெரம்பலுார் மாவட்ட, தி.மு.க., நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள், அதிருப்தியில் உள்ளனர்.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...