
ஏன்? ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது.
ஏன்? ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக் கூடாது.
எங்கேயும் எப்போதும் ஏசி அறையில் அமர்ந்திருப்பவர்களின் உடலுக்கு தேவையான அளவு
சூரிய ஒளி கிடைப்பதில்லை. மேலும் தொடர்ந்து ஏசி (AC) அறையில் அதிக நேரம் இருந்தால் உடலில் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும். ஒரு வேளை ஏசி அறையில் உட்கார்ந்து கொண்டு பணிசெய்ய நேர்ந்தாலும் ஏசிக்கு நேராக முகத்தை வைத்து உட்காரக்கூடாது.
ஒருவேளை ஏசி அறையில் அப்படி நீங்கள் உட்கார்ந்தால், உங்கள் முகத்தில் உள்ள சைனஸ் பகுதி தூண்டப்பட்டு மூக்கடைப்பு, தலைவலி, காது அடைப்பு போன்ற பிரச்சனைகள் உண்டாகும். உதடுகளும் உலர்ந்து போகும். உங்கள் கூந்தல் வலு குறையும். சருமத்தில் சுருக்கங்கள் அதிகமாக தோன்றும். மேலும் சோரியாசிஸ், எக்சிமா ( Psoriasis and Eczema ) போன்ற சரும நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் ஏசி (#AirConditioner) பொருத்திய அறையில் அதிக நேரம் அமர்ந்தால் அதுவும் ஏ.சி.க்கு நேராக முகத்தை வைத்து அமர்ந்தால், அந்த நோய்களின் வீரியம் அதிகரித்து அதீக பாதிப்புக்கு உள்ளாவார்கள்.

No comments:
Post a Comment