Monday, March 18, 2019

கமல் கட்சியில் மோதல்: நிர்வாகி விலகல்.

கமலின், மக்கள் நீதி மையம் கட்சி வேட்பாளர் பட்டியல், நாளை அறிவிக்கப்பட உள்ள நிலையில், கடலுார் தொகுதி வேட்பாளராக வேண்டியவர், அக்கட்சியில் இருந்தே விலகியுள்ளார்
கமல் கட்சியில் மோதல்: நிர்வாகி விலகல்

லோக்சபா மற்றும் சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில், கமலின், மக்கள் நீதி மையம் கட்சி, தனித்து போட்டியிடுகிறது. அதற்கான வேட்பாளர்களை, நாளை அறிவிக்க உள்ளது. இந்நிலையில், கடலுார் தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட இருந்த, கட்சியின் செயற்குழு உறுப்பினரும், தொழிலதிபருமான, சி.கே.குமாரவேல், அக்கட்சியிலிருந்து திடீரென விலகியுள்ளார்.

இதுபற்றி, அவர் அளித்த பேட்டி: கமல், கட்சி  ஆரம்பித்த போது, அவரது உறுதி என்னை கவர்ந்தது. அதனால், தீண்டத்தகாதது போல இருந்த அரசியலும், புது உத்வேகம் பெறும் என நினைத்து, அந்த கட்சியில் இணைந்தேன். ஆறு மாதமாக, கட்சியின் திட்டம் ஒன்றாகவும், நடைமுறை வேறு மாதிரியாகவும் இருந்தது.

கடலுாரில் போட்டியிடுவதற்கான நேர்காணலில், நானும் பங்கேற்றேன். அங்கு கமலுடன், மகேந்திரன், கோவை சரளா, மதன் உள்ளிட்ட பலர் இருந்தனர். அவர்களின் கேள்விக்கும், நான் பதிலளித்தேன். 'அடுத்த கட்ட வேலைகளை பாருங்கள்' என கூறியதால், எனக்கான உதவியாளர்களை தேட வேண்டியிருந்தது. அதனால், சமூக வலைதளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டேன்.

இதில், கட்சி விதிமுறை மீறல் இருப்பதாக குற்றம் சாட்டினர்; அதனால் விலகினேன். என் விஷயத்தில் எடுத்த நடவடிக்கையை, மத்திய சென்னை வேட்பாளராக அறிவித்து, 'டுவிட்டரில்' பிரசாரம் செய்த, கமீலா நாசர் மீது, ஏன்எடுக்கவில்லை?இப்போது கட்சியில் சேர்ந்த, கோவை சரளாவுக்கு, வேட்பாளர் தேர்வு குழுவில் இடம் தரப்பட்டுள்ளது.ஓராண்டாக, கட்சிக்காக வேலை பார்த்தவர்களுக்கு, எந்த அங்கீகாரமும் இல்லை. மாற்று அரசியலை வெளியே மட்டும் தேடுகின்றனர்; உள்ளே அது இல்லை. கமலை சுற்றி உள்ளவர்களாலேயே கட்சிக்கு ஆபத்துள்ளது. நிர்வாகிகள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.இவ்வாறு, அவர் கூறினார். குமாரவேல் விலகியது குறித்து, மக்கள் நீதி மையம் அறிக்கை:லோக்சபா வேட்பாளர் நேர்காணல் முடிவு பெறாத நிலையில், சி.கே.குமாரவேல், சமூக வலைதளங்களில், கடலுார் தொகுதியில் போட்டியிடப் போவதாக அறிவித்தது, கட்சி கட்டுப்பாடுகளை மீறிய செயல்.பல நுாறு பேர் காத்திருக்கும் நிலையில், நேர்காணலுக்கு கூட வராமல், தேர்தலில் போட்டியிட உள்ளதாக கூறியது தவறு. அதனால், அவரது ராஜினாமாவை, கட்சி ஏற்றுக் கொண்டது இவ்வாறு, அதில்கூறப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

*விஞ்ஞானிகள் வியக்கும் அக்னிஹோத்ரம்*

  போபால் விஷவாயு தனது கோரத்தாண்டவத்தை ஆடிய போது ஒரு வீட்டில் யாகம் நடத்திக் கொண்டிருந்த சிலருக்கு மட்டும் அந்த நச்சு வாயுவால் பாதிப்பில்...